புண்ணிய நதியான கங்கை பூமிக்கு வந்த வரலாறு!!

  • by
history of how ganga river came in earth

அஸ்வமேதயாகம்

மோட்சம் தரும் ஏழு புனித நகரங்களில் வாரணாசியும் ஒன்று. மற்ற மோட்சம் தரும் இடங்கள் அயோத்தி, மதுரா, அரித்துவார், காஞ்சி, உஜ்ஜயினி, துவாரகை இவைகள் தான் என்று கருடபுராணத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தேவலோகத்தில் இருந்த காசியை பல யாகங்கள் செய்து புண்ணிய பூமிக்கு கொண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. சூரிய வம்சத்தில் இருந்து தோன்றிய மன்னன் சகரன் ஆவான். இவர் அஸ்வமேதயாகம் செய்தார். அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரனின் பதவி பறிபோய்விடுமோ என பயந்த இந்திரன் அஸ்வமேத யாகத்திற்காக வைத்திருந்த குதிரையைத் திருடி இமாலயத்தில் கடும் தவம் செய்து வந்த கபிலர் என்ற மாமுனிவரின் ஆஸ்ரமத்தில் அவருக்கே தெரியாமல் கட்டி வைத்துவிட்டார். சகரனின் புதல்வர்கள் குதிரையை தேடிய போது அது முனிவரின் ஆசிரமத்தில் இருப்பதை கண்டு முனிவர் தான் இந்த காரியத்தை செய்து இருப்பார் என்று எண்ணி முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபமடைந்த முனிவர் சகரன் ராஜகுமாரர்களையும் மற்றும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப் பார்வையால் எரித்து சாம்பலாக்கி விட்டார்.

மேலும் படிக்க – ஆன்மீகத்தில் பயன்படுத்தப்படும் உப்பின் பயன்கள்..!

சாபவிமோசனம்

தனது குழந்தைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இருந்து விட்டதனால் வேதனை அடைந்த சகர மன்னன் தன்னுடைய பேரனான அம்சுமான் என்பவனுக்கு முடி சூட்டிவிட்டு, வனவாசம் சென்று தவம் செய்து முக்தி அடைந்தார். ஆனால் முனிவரின் கோபப் பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முக்தி அடைய வில்லை என்பதால், அம்சுமான் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் மகன்கள் அனைவரும் மோட்சம் பெற வேண்டுமானால் எரிந்த அவர்களின் சாம்பல் மீது தேவலோகத்தில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரை தெளித்தால் மட்டுமே அவரது புத்திரர்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்றும், அதன் பிறகே அவர்கள் நற்கதி அடைய முடியும் என்று கருத்து தெரிவித்தார்கள்.

மேலும் படிக்க – ரஜினியின் இமாலய வாழ்க்கை அறிவோம் வாங்க!

கங்காதேவி

எனவே அம்சுமான் கங்கையை பூமிக்கு கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. அவரது மகன் அசமஞ்சனாலும் கங்கையை பூமிக்கு கொண்டு வர இயலவில்லை. ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பக்ரீதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முக்தி அடைவதற்காக கங்கையை நிச்சயமாக பூமிக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணி கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை ஏற்று கொண்ட கங்காதேவி பூமிக்கு வர சம்மதித்தார். கங்கை வேகமாக பாயும் நதி என்பதால் சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழும்படி செய்து பின் பூமியில் நதியாக ஓடச் செய்தார் என்று வரலாறு கூறுகிறது. இவ்வாறு பூமியில் பாய்ந்த கங்கை நதியில் தனது முன்னோர்களின் அஸ்திகளை கரைத்தான். அதன் பிறகு அவர்கள் முக்தி பெற்றனர். இதனால் தான் கங்கையில் அஸ்தியைக் கரைத்தால் முன்னோர்களின் ஆன்மா முக்தி அடையும் என்று வரலாறு கூறுகிறது. இதனால்தான் நான் இறந்தவர்களின் அஸ்தியை கொண்டு போய் கங்கையில் கரைக்கிறோம். பாவங்கள் எல்லாம் நீங்கி அவர்களது ஆத்மா முக்தி அடையும். இந்த கங்கை நதிக்கு தினமும் சூரிய மறைவுக்குப் பிறகு ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இரவில் இந்த ஆரத்தி வழிபாடு பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன