சிறுதுளி பெருங்காயத்தால் கிடைக்கும் பல நன்மைகள்..!

  • by
Hing Health Benefits

சமையலில் நறுமணத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

செரிமானத்தை அதிகரிக்கும்

நாம் பெருங்காயத்தை சமையலில் சேர்ப்பதற்கான மிக முக்கியமான காரணம் நம்முடைய செரிமான ஆற்றலை அதிகரிப்பது தான். இதை பயன்படுத்துவதன் மூலம் குடல்புண்கள், வயிறு, வாய் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் புழுக்கள் போன்ற அனைத்தையும் அகற்றி விடும். இதை நாம் வெறுமனே தண்ணீரில் கலந்து குடித்தாலே போதும்.

மாதவிடாய் பிரச்சனையை குணப்படுத்தும்

மாதவிடாய் பிரச்சனைகளில் அவதிப்படும் பெண்கள் பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக இவர்களுக்கு மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் அதிகப்படியான வயிற்று வலி குறையும். ரத்தப்போக்கு சீராக இருக்கும், வெள்ளைப்படுதல் குறையும், இது தவிர்த்து தசைப்பிடிப்பு வயிற்றுவலி மற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்கள் போன்ற அனைத்தையும் குணப்படுத்தும்.

மேலும் படிக்க – நாம் குடிக்கும் நீரில்  எவ்வளவு உப்புக்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா???

சுவாச பிரச்சனைக்கு தீர்வளிக்கும்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சுவாச பிரச்சினையை தீர்க்கும் ஆற்றல் பெருங்காயத்தில் உண்டு. பெருங்காயத் தூளையும் தேன் மற்றும் இஞ்சியையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக வறட்டு இருமல், ஆஸ்துமா மற்றும் சளி போன்றவைகள் குணமாகும்.

சர்க்கரை நோயை குணப்படுத்தும்

பெருங்காயத்தை சாப்பிடுவதனால் நமக்கு இன்சுலின் அளவு அதிகமாக சுரக்கும். இதனால் நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சமநிலையில் வைக்கும். அதேபோல் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை வரவிடாமல் தடுக்கும்.

நரம்பு பிரச்சனை

பெருங்காயத்தின் நறுமணம் நறும்புக்கு உகந்ததாக இருக்கிறது. எனவே உங்களுக்கு நரம்புகளில் பிரச்சனைகள், நரம்புத் தளர்ச்சி, வலிப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தால் பெருங்காயத்தை சாப்பிடலாம்.

மேலும் படிக்க – அன்னாச்சி பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்..

புற்றுநோய் மற்றும் வலிகள்

புற்றுநோய்க்கு எதிராக தடுப்பனையாக இருக்கிறது பெருங்காயம். எனவே இதை சிறுதுளி சமைக்கும் பொழுது சேர்ப்பதனால் உங்கள் உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்களை தடுக்கிறது. தலைவலி உடல்வலி போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகிறது.

பெருங்காயத்தை அப்படியே வைத்து நம்முடைய சருமத்தின் மேல் தடவுவதன் மூலம் தோல் காய்ப்பு மற்றும் தோல் தடிப்பு போன்ற பிரச்சினைகள் குணமாகும். அதேபோல் உங்கள் ஆண்மை சக்தி அதிகரிக்க பெருங்காயத்தை உணவில் பயன்படுத்தலாம். போதையின் ஒழிப்பை போக்குவதற்கும் பெருங்காயம் பயனாகிறது, எனவே இத்தகைய பல நன்மைகளை கொண்ட பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சமையுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன