அதிக கொழுப்புகள் உள்ள உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்.!

  • by
High Fat Food Cause Many Problem

நம் உடல் ஆற்றலை அதிகரிக்க பெரிதும் உதவுவது கொழுப்பு சத்துகள் தான். ஆனால் எப்போது நாம் அதை அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த கொழுப்பு சத்துக்கள் நம்முடைய ஆரோக்கியத்தை அழித்துவிடுகிறது. எனவே இதை அறிந்து எந்த உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது என்பதையும், எந்த உணவை தவிர்க்க வேண்டும் என்பதையும் இந்த பதிவில் காணலாம்.

கொழுப்புகள் உள்ள உணவுகள்

அசைவ உணவுகளான இறைச்சிகள், முட்டை, மீன், பால் மற்றும் தாவர உணவுகளான, அதாவது சைவ உணவுகளான தானியங்கள், நட்ஸ், ஓட்ஸ், குயினோவா, வேர்க்கடலை, வெண்ணெய் மற்றும் சியா விதைகளில் நம் உடல் ஆற்றலை அதிகரிக்கும் கொழுப்புகள் இருக்கின்றன. ஆனால் எப்போது இதை நாம் அதிகமாக எடுத்துக் கொள்கிறோமோ அப்போதிலிருந்து நம்முடைய உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.

மேலும் படிக்க – சருமப் பொலிவு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எலுமிச்சை பழம்.!

உடல் எடை அதிகரிப்பு

நம் உடல் எடையை அதிகரிக்க மிக முக்கியமாக உதவுவது கொழுப்புகள் தான். நாம் அதிகமான பால் பொருட்கள் அல்லது செரிமான சக்தியை சீர் குலைக்கும் கொழுப்புகளை உட்கொள்வதினால் நமது உடல் எடை உடனடியாக அதிகரிக்கிறது. அதை தவிர்த்து இவர்கள் போதுமான அளவு உடற்பயிற்சியை தவிர்ப்பதினால், அவர்களின் கலோரிகளை அழிக்காமல் இருப்பதினால் இவர்கள் உடல்நிலை மிக எளிதில் பாதிப்படைகிறது.

செரிமான பிரச்சனை

கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் செரிமானத்தை தாமதப்படுத்துகிறது. இவர்களின் குடல் பாதிப்படைந்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. எனவே தேவையான கொழுப்பு உணவுகள் மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவையை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க – தயிர் சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா?

சிறுநீரக பாதிப்பு

கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளில் உப்புத்தன்மை அதிகமாக இருக்கும். எனவே இது நமது உடலில் சேரும் பொழுதெல்லாம் நமது சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை ஊக்குவிக்கிறது. எனவே சிறுநீரகப் பகுதியில் கற்கள் உருவாகி சிறுநீரகப் பிரச்சினையை உண்டாகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிவதும் மூலமாக நம் உடலை பராமரிக்கலாம். இல்லையெனில் மிகப்பெரிய விளைவுகளை இது உண்டாக்கும்.

நீர் சத்தை வெளியேற்றும்

கொழுப்புகள் உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் நமது உடலில் நைட்ரஜன் மற்றும் அமினோ அமிலங்கள் சக்தியை அதிகரிக்கும். இதனால் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். எனவே நீர்சத்து குறைபாடினால் நமது உடல் நலம் பாதிக்கும்.

வாய் துர்நாற்றம் மற்றும் வயிற்றுப்போக்கு

ஒரு அளவிற்கு மேல் எடுத்துக் கொள்ளும் உணவுகளை நமது உடல் கெட்ட உணவுகளாக எடுத்துக் கொள்கிறது. இதனால் அது தேவையற்ற பகுதிகளுக்கு சென்று துர்நாற்றத்தை உண்டாகிறது. இது ரத்தம், சிறுநீரகம் மற்றும் சுவாசத்தில் கலந்து துர்நாற்றத்தை உண்டாக்கிறது. அதேபோல் கொழுப்பு உணவுகள் சில சமயங்களில் உங்களுக்கு வயிற்றுப் போக்கை உண்டாக்கும். உங்கள் உடல் உஷ்ணத்தை அதிகரித்தது வயிற்று வலியை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க – புற்று நோய் செல்களை புதைக்கும் காய்கறிகள்!

புற்றுநோயை உண்டாக்கும்

கொழுப்புகள் உள்ள அசைவ உணவுகளை நாம் அதிகமாக தீயிட்டு சமைக்கிறோம். இதனால் ஒருவித ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு கொழுப்பின் தன்மை அதிகரிக்கிறது. இது நாளடைவில் உங்கள் உடலில் சேர்ந்து மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே இதைக் கருத்தில் கொண்டு குறைந்த கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் விஷயமாக மாறிவிடும். எனவே அதை அறிந்து தேவையான உணவுகள் தேவையான அளவு எடுத்துக்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை வலுப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன