மகாராஜா சத்ரபதி சிவாஜியை பற்றிய சில உண்மைகள்.!

hidden facts about chhatrapathi sivaji and his kingdom

மராத்திய அரசர்களின் மிகப்பெரிய வரலாறை கொண்டவர்தான் இந்த சத்ரபதி சிவாஜி. இவர் ஒரு மிகச் சிறந்த ஆட்சியாளர் மற்றும் முகலாயர்களுக்கு எதிராக போராடி இந்து மக்களைப் பாதுகாத்து தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளார். சிவாஜி என்ற பெயர் சிவன் மேல் உள்ள பற்றினால் வைக்கப்பட்டது என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள் ஆனால் உண்மையில் சிவாய் என்ற பிராந்திய தெய்வத்தின் நினைவாகவே இவருக்கு இந்த பெயர் வைத்துள்ளார்கள். இவர் ஒரு மிகப் பெரிய ஆட்சியாளர் மற்றும் தந்திரமான முறையில் போர்களை புரிபவர். இவரைப் பற்றிய வரலாற்றை நாம் அதிகமாக அறிந்திருக்க மாட்டோம், எனவே அவரைப் பற்றிய சுவாரஸ்யமான சில சம்பவங்கள்.

இவர் ஒரு மதசார்பற்ற ஆட்சியாளராக, அக்காலத்திலேயே மிகப்பெரிய எண்ணங்களையும், செயல்களையும் கொண்டவர். இவர் இந்து மதத்தை பின்பற்றினாலும் இவர் நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுக்கு சம உரிமை அளித்தார்.

மேலும் படிக்க – சிவராத்திரியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் அதன் சிறப்புகள் என்ன?

சிவாஜி அவர்கள் இந்து மதத்தை காப்பாற்றுவதற்காக முஸ்லீம் படைகளுக்கு எதிராகப் போராடினார். ஏனென்றால் இவர்கள் தங்கள் மதத்தை பரப்புவதற்காக போர்களில் ஈடுபட்டு பல நாட்டை தன்வசப்படுத்தினார். இதைப் பொறுத்துக் கொள்ளாத சிவாஜி இவர்களிடம் போரிட்டு வென்றார். இதனால் இவர் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல இவர் தன்வசப்படுத்திய நாட்டு மக்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அந்த மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அளித்தார். பின்னர் அவர்கள் இந்து மதத்திற்கு மாறுவதற்கும் இவர் உதவி புரிந்தார். அதுமட்டுமல்லாமல் இவரின் மகளை இந்து மதத்திற்கு மாறிய ஒருவருக்கும் திருமணம் செய்து கொடுத்தார்.

இவரின் தந்தையின் ஆட்சியில் வெறும் 2000 போர் வீரர்களையே கொண்டிருந்தார்கள் பின்பு அவர் இறந்த பிறகு சத்ரபதி சிவாஜி அவர்கள் போர் யுத்திகளை அறிந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் போர்வீரர்களை உருவாக்கினார். அது மட்டுமல்லாமல் மேலை நாட்டு மக்கள் கடல்வழியே போர் வாய்ப்புள்ளது என்று தொலைநோக்குப் பார்வையின் மூலமாக சிந்தித்து கடல் மேல்  போர்க்கப்பல்களை குவித்தார்.

மேலும் படிக்க – கணபதி ஹோமம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்..!

இவர் நாளுக்கு நாள் புதிய போர் உத்திகளைக் கையாண்டார், அதில் குறிப்பிடத்தக்கது தான் கொரிலா போர் யுக்தி. இவர் போர்களில் புதுப்புது நுட்பங்களை கொண்டு வந்தார் இதற்காகவே அவரின் ராணுவத்தில் அறிவாளியான போர் வீரர்களை அதிக அளவில் அமர்த்தினார்.

இவர் போர்ப்படையில் எல்லா மதத்தினரும் இருந்தார்கள் அதிலும் இஸ்லாமியர்கள் சற்று அதிகமே என்று சொல்லலாம் இப்படி அனைவரையும் சமமாக பார்க்கப்பட்டார். ஒரு மதத்தையே பின்பற்ற வேண்டும் என்ற கட்டளைக்கு எதிராக போராடினார். இவர்களின் போர் வீரர்கள் போர் இல்லாத நேரங்களில் எந்த ஒரு ஆயுதங்களையும் கொண்டிருக்க மாட்டார்கள். யாருக்கும் தனிப்பட்ட அதிகாரம் கொடுக்காமல் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

ஒருநாள் அப்சல்கான் என்ற ராணுவ அதிகாரி சிவாஜியை சண்டைக்கு அழைத்தார். அப்சல்கான் பார்ப்பதற்கு சிவாஜியை விட உயரமாக உடல் கட்டமைப்புகள் அனைத்தும் பயங்கரமாக கொண்டவராக இருப்பார். அவருக்கு எதிராக சிவாஜி தந்திரமான முறையில்  சிவாஜி போரிட்டார் அதாவது புலியின் நகங்களை தன் விரல்களில் அணிந்து அவரை தாக்கி விழ்த்தினார்.

மேலும் படிக்க – பிரணயமா செய்வதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

இவர் பெண்கள் மேல் அதிகமான மரியாதை வைத்திருந்தார் அதற்கு உதாரணமாக இவர் எந்த நாட்டில் போரிட்டு வென்றாலும் அந்த நாட்டுப் பெண்களை சிறைபிடிப்பதை தவிர்த்தார். அதுமட்டுமல்லாமல் பெண்கள் மேல் செய்யும் வன்முறைகளுக்கு அதிகமான தண்டனைகளை கொடுத்தார். இப்படி இவருக்கான ஏராளமான வரலாறுகள் இருக்கின்றன அதை அனைத்தையும் தெரிந்து கொள்வதற்கு பல நாட்கள் தேவைப்படும். மராட்டிய அரசின் மிகப்பெரிய மகாராஜா, சத்ரபதி சிவாஜிதான் என்று இன்று வரை அவர் நினைவாக பல இடங்கள் மும்பையை சுற்றி இருக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன