உடலில் நோய் எதிர்க்கும் சளியை தடுக்கும் மூலிகைகள்

  • by

எலும்பிச்சை  பழச்சாறு என்பது சத்துக்கள் நிறைந்தவை. வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தவை ஆகும்.  சளித்தொல்லை போன்றவை சரியாக எழும்பிச்சையின் அவசியம் ஆகும். யூகேவில் எலும்பிச்சை சாறுடன் கிராம்பு, மிளகு மற்றும் சீரகம், மஞ்சள்,  கொதிக்க வைத்து குடித்தவர்கள் சிலருக்கு சளி தொல்லையானது இல்லாமல் குணமாகியுள்ளது. 

வீட்டிலுள்ளோர் தேவைக்கு ஏற்ப நீர் எடுத்து அதில் எலும்பிச்சை, கிராம்பு, மிளகு, சீரகம், மஞ்சள்  சேர்த்து கொதிக்க வைக்க் வேண்டும். கொதிக்க வைத்த நீரைப் பருகி வந்தால் எப்பேர் பட்ட சளியும் கரையும் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். மாசு விலகி கழிவு என்பது  காணமல் போகும். 

உணவு மூலமாக நோய் எதிர்ப்பு என்பது  நிச்சயம் உண்டு. இயல்பான உணவுகள் எடுத்துகொள்வதன் மூலம் உடலில் ஆரோக்கியத்தை கொடுக்கும். எதிர்ப்பாற்றல் பெருகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

குளிர்பானங்களை கடையில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சுவாச மண்டலத்தை சரியாக இயக்க மிளகு அவசியம் தேவை. நம்முடைய பாரம்பரிய மிக்க பூண்டு, மிளகு, வெந்தயம் போன்றவற்றை இந்திய பெண்கள்  தால் சாம்பாரில் கூட பயன்படுத்துகின்றனர். இந்திய மணமூட்டி உணவுகள் அனைத்தும் உடலுக்கு அதிக பலன் தரக்கூடியது. அன்னாசி பூ ஹெச் 1 வைரஸ் தடுப்பிலே உதவியது இதை வைத்து டீ தயாரித்து குடிக்கலாம். காரக் குழம்பில் பயன்படுத்தலாம். 

மேலும் படிக்க: இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்காத மாநிலங்கள்..!

வைட்டமின் டி, துத்தநாகம் எனப்படும்  ஆற்றல் உடலில் இருக்க வேண்டும். அது கொரானவை தாக்கமல் தடுக்கும். வெய்யிலில் நிற்க வேண்டியது அவசியம் ஆகும். அல்லது ஜன்னல் ஓரமாக நின்றால்  கூட போதும். சூரிய ஒளி படுமாறு நின்றால் கூட போதும். உடல் மனதை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம் ஆகும். 

கொரனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதை அனைவரும் எடுத்து வருகின்றனர். கப சுரம் என அழைக்கப்படும் சித்த மருத்துவ குறிப்புகள் இதனை  தெளிவுப்படுத்துக்கின்றனர்.கப சுரம் நுரையீரல் பாதிப்பால் வரும். இது கிருமிகளால் ஏற்படுகின்றது. இது சளியை உண்டாக்கும். இந்த தொற்றானது உடலில்  மூச்சு விடச்சிக்கலை உண்டாக்கும். நுரையீரலில் உள்ள கபத்தை வெளி எடுக்க வேண்டும்.

இதனை சரி செய்ய சுக்கு ஜீரண உருப்பை சீராக்கும், திப்பிலி உடலில் கோளையை தள்ளும். கற்பூரவல்லி இலையானது துளசி வகையை சார்ந்தது இலை இருமல் சளியை அறுக்கும். நுரையீரல் பற்றி வரும் சளி சுரத்ததைப் போக்கும் ஆடா தொடா இலை. முல்லி வேர் அதிக கழிவை வெளியேற்றும். கிராம்பு ஜீரண சக்தியை தூண்டும். உடலில் ஆற்றல் பெருகும். கடுக்காய் தோல் உடலில் உள்ள கழிவுகளை சுத்தப்படுத்தும். குடலை சுத்தப்படுத்தும். துவர்ப்பான ஒன்றாகும். செல்களை காக்கும். சீந்தில் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் மூலீகை ஆகும். கோரை கிழங்கு சளியை நீக்கும் தூக்கத்தை  அதிகரிக்கும் இதன் மூலம் நோய் குணமாகும். சிறு தேக்கு உடலுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும். வட்டத் திருப்பி சுவாச குழலை நன்கு விரிவடையச் செய்யும். நீல வேம்பு கசாயத்துடன் சேரும். காய்ச்சலை குறைக்கும். உடலில் வெப்பம் அதிகரிக்கும் பொழுது வறட்சியானது போக்கச் செய்யும் உடலில் நீர்ச்சக்தியை காக்கின்றது. இதுபோன்ற 15 மூலீகைகள் கொண்ட கபச்சுர நீர் குடித்தல் ஆரோக்கியம் அதிகரிக்கும் நோய் ஆற்றலை அதிகசிக்கச் செய்ய முடியும்.

கபச்சுர குடிநீர் என்பதை நாம் வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் நாம் உடலுக்கு எதிர்ப்புச் சக்தியானது அதிகரிக்கச் செய்யலாம். ஆஸ்துமா, நிமோனியா போன்ற காய்ச்சல் ஆகியவை அனைத்தும் குணப்படுத்தும்.  இது போன்ற கசாயம் உடலில் நோய் எதிர்ப்பை அதிகசிக்கச் செய்யும். 

மேலும் படிக்க: சித்த மருத்துவத்தால் கொரோனா வைரஸை தடுக்க முடியுமா..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன