மூலிகை செடிகள் வளர்ப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

  • by

வீட்டை சுற்றி  நம் முன்னோர்கள் நட்டு வைத்து வாழ்ந்த மூலிகைகள் நம்மை வாழ வைக்கின்றன. அதை  வைத்து நமது நோயை நாம் போக்கிக் கொள்ளலாம். அந்தளவிற்கு நமது வாழ்வியல் முழுக்க முழுக்க மூலிகைகள் செடிகளோடு பயணித்து வந்தது என்பதை  நாம் இன்று வளர்க்க கூடிய செடிகள் மூலம் அறிய முடிகின்றது. நம் முன்னோர் வீட்டைச் சுற்றி வைத்து பத்து மூலீகை செடிகள் நமது பாரம்பரியத்தை  காத்து வந்தது அன்று பந்தலில் பாவக்காய் என்று பாட்டு பாடினோம். நம்முடைய வீட்டு வாசலில் அதிகப் படியான பாதுகாப்பானது இருந்தது.

அதுதான் நமது   வாழ்வியலாக இருந்தது வாழ்வியல் உடன் பாதுகாப்பு நமது தேவையை நாமே பூர்த்தி செய்து கொண்டோம். வீட்டு வாசலில் காணி நிலத்தில் காடுகளை வளர்த்து வந்தோம். அவ்வளவு பாரம்பரியம் என்பது நம்மிடம் இருந்தது.  நமது வாழ்கையில் மூலிகையாகவும் ஆன்மீக ரீதியாகவும் நம் முன்னோர்கள் அர்த்தங்கள் வைத்து வளர்த்து வந்தனர்.

மேலும் படிக்க: மண் பானைகளில் சமைப்பதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

 வீட்டு வாசலில் துளசி: 

வீட்டு வாசலில் துளசி என்பது மிகவும் அவசியமானது ஆகும். துளசி உடலுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கச் செய்கின்றது . துளசியானது ராம, வனம், கிருஷ்ணா, கற்பூர துளசி என நான்கு வகைகள் உண்டு அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு  மருத்துவ குணங்கள் உள்ளது. துளசி வைத்து அழகு சாதனப் பொருட்கள் எல்லாம் உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர். துளசி சளி, கபம் ஆகியவற்றை நீக்கும். ஆண்டி பங்கள் ஆகிய அனைத்தும் கொண்டது ஆகும். தினமும் துளசி 10 இலைகள் சாப்பிட்டு வர உடலில் நோய்  தொற்று ஏற்படாது. காய்ச்சல், மூச்சிப் பிரச்சனைகளை போக்குகின்ற வல்லமை துளசிக்கு உண்டு அதனை நாம் வீட்டில் வளர்க்க வேண்டும். இப்பொழுது கொரனா போன்ற தொல்லைகளுக்கு துளசி அவசியமானது ஆகும். வீட்டில் 2 துளசி செடி இருந்தால் கொள்ளைப்புரத்தில் கூட நோய்  தொற்று இருக்காது. இதன் பயன் அறிந்து உலகம் முழுவதும் இதன் தேவை அவசியமாக இருக்கின்றது. 

கற்பூரவல்லி எனப்படும் ஓமவல்லி செடி:

கற்ப்பூரவல்லி எனப்படும் ஓமவல்லி செடியை தினமும் வீட்டில் வளர்த்து வருவது சிறப்பாகும். இது மருத்துவ குணம் பல கொண்டது இதன் தண்டை நட்டு வைத்தால் நச்சுன்னு வளரக்கூடியது ஆகும். இது பல வகை நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது சின்ன தொட்டியில் இந்த செடிகளை இட்டு வளர்க்கலாம். இதன் இலைகள் அனைத்தும்  மூலிகை சுகந்த மனம் தரும்.

இதன் இலைகளை நன்கு கழுவி சாற்றை பிழிந்து குழந்தைகளுக்கு சளிக்காலத்தில் கொடுத்துவர உடல் ஆரோக்கியம் பெருகும். இது வியர்வை பெருக்கும், காய்ச்சல் தணிக்கும் ஆற்றல் கொண்டது. இதன் இலைச்சாற்றை நெற்றியில் போட்டு வந்தால் தீராத தலைவலியும் குணமாகும். ஓமவல்லி இலை குழந்தைகளின் அஜீரண பிரச்சனையைப் போக்கும். நரம்பியல் சிக்கலைப் போக்கும்  மூலிகை ஆகும். 

திருநீற்றுப்பச்சிலை:

மூலீகைகளில் தெய்வ மூலீகையாக கருதப்படும் மூலீகைகள் பல உண்டு அவற்றில் நாம் எளிதாக வீட்டில் வளர்க்கூடிய செடியாக இருப்பது திருநீற்றுப்பச்சிலை ஆகும். சாலையில் தானாகவே முளைத்து நிற்கும் மூலிகைகள் பல உள்ளன.  பருக்களை இது போக்கும். இந்த திருநீற்று பச்சிலையில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமீன் ஏ சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றது. இவ்விலைகள் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்ட் கொண்டது ஆகும் நோய் தொற்றுகளை நீக்குகின்றது. 

கீரைகள்: 

வெந்தயக்கீரை, செங்கீரை, தண்டு கீரை, முருங்கை கீரை போன்றவற்றை வீட்டில் வளர்க்கலாம்.  இதனை வீட்டில் வளர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கப் பெறலாம். இது அசைவ உணவை விட சிறந்தது ஆகும். 

கற்றாழை: 

கற்றாழை உடலுக்கு  ஆரோக்கியம் தரக்கூடியது ஆகும். கற்றாழையில் உள்ள அற்புத குணங்கள் அனைத்தும் நமக்கு ஆயிரம் நன்மைகள் தரக்கூடியது ஆகும்.  இதனை வீட்டில் வளர்க்க வேண்டிய அவசியமான மூலீகைகள் ஆகும். கற்றாழை, ஓமவல்லி செடிகள் நமது வீட்டில் வளர்க்கும் பொழுது கொசுக்கள் பரவலை தடுக்கின்றது.  பாம்புகள் கூட அண்டாது உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கப் பெறலாம். உடலில் பசியின்மை போக்கும். 

மேலும் படிக்க: பழந்தமிழர்களின் வியக்கதக்க பாரம்பரிய விருந்தோம்பல்

புதினா: 

இதனை வளர்க்க சிறு தொட்டி போதும். மக்னீசியம், விட்டமின் ஏ, விட்டமின் சி  போன்றவை நிறைந்து காணப்படுகின்றது. இவை தசைகளை வலுப்படுத்தக் கூடியது ஆகும். இதன் இலைகள் பெருங்குடல் பிரச்சனை மருந்தாக பயன்படுகின்றது. 

வேப்பிலை:

மருத்துவ குணம் வாய்ந்தது இந்த வேப்பிலை ஆகும்.  வேப்பிலை மரமாக வளரக்கூடியது ஆகும். வேப்பிலை மரமாக வளரும்  இதனை எளிதாக வீட்டில் வளர்க்கலாம். இதில் ஆண்டி செப்டிக் உள்ளது. இது அனைவருக்கும் நன்மை அளிக்க குடியதாகும்.  இது நோய் தொற்றை தடுக்ககூடியதாகும். 

மேலும் படிக்க: மஞ்சள் சூப் குடியுங்கள் உடலை தொற்றிலிருந்து காக்கலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன