மூலிகை விளக்கு இருந்தால் சுற்றி பாதுகாப்பு கிடைக்கும்!

  • by

மூலிகை விளக்கு உங்கள் சுற்றம் காக்கும். மூலிகை விளக்கு இது என்ன புதிதா இருக்கே என்று கேக்க தோன்றுகின்றதா, இது புதிது ஒன்றும் இல்லை, பழைய காலம் தொட்டு  இது வழக்கில் இருக்கின்ற ஒரு முறையாகும். இதனை காலப் போக்கில் மக்கள் வழக்கில் இருந்து எடுத்து விட்டனர். 

மூலிகைகள் விளக்கு: 

வேப்ப எண்ணெய் 

வேம்பு ஆண்டி பயாட்டிக்கான ஒன்றாகும்.  இதன் காற்ற்லுள்ள மாசுக்களை விரட்டும் சக்தி வாய்ந்த ஒரு முறையாகும். கிராமப் புரங்களில் இது ஆங்கேங்கே  பத்தடிக்கு ஒன்று வீதம் வளர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். வேம்பில் மரத்தின் அடியில் அமரும் மன இறுக்கம் குறையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆரோக்கியம் பெருகும்.  இத்தகைய வேப்பக்காயிலிருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெயிலிருந்து நமக்கு கிடைக்கும் கசப்பு நிறைந்த அந்த பதமானது பூச்சிகள், பூஞ்சை தொற்றை விரட்டும். 

மேலும் படிக்க: கற்பூரவல்லி, துளசி, வேப்பில்லை, இது கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றுமா..!

ஆமணக்கு  எண்ணெய்: 

ஆமணக்கு காயிலிருந்து கிடைக்கும் எண்ணெய்  மிகுந்த ஆற்றல் வாய்ந்தது ஆகும். இது தலைக்கு தேய்க்கும் பொழுது பூஞ்சை தொற்றை ஒழிக்கும்.  ஆமணக்கு எண்ணெய் பூச்சிகளை தன் பக்கம் ஈர்த்து வைக்கும். இதனால் பூச்சிகள் எங்கும் நகரமுடியாமல் மடியும். இதனுடன் பூண்டு சேர்த்து காய்ச்சி அந்த எண்ணெயுடன் வேப்பிலை எண்ணெய் சேர்க்கும் பொழுது  நமக்கு பாதுகாப்பு அதிகரிக்கும்.

வேப்ப எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றுடன் நாம் வேப்பிலை, ஓமவல்லி இலை அல்லது கற்பூர வல்லி இலை மற்றும்  நொச்சி இலை, துளசி, திருநீற்று பச்சிலை ஆகிய மூலிகைகளை நாம் ஒன்றாக அரைத்து அதன் சாறெடுத்து இந்த எண்ணெய்களுடன் கலந்து  தீபம் ஏற்றலாம். மற்றும் பஞ்சு திரியை அரைத்த மூலிகைகளில் முக்கி எடுக்க வேண்டும், அவற்றை காய வைத்து நாம் தீபம் ஏற்றும் பொழுது அவற்றை கொண்டு விளக்கானது ஏற்றும் பொழுது நம்மை சுற்றியுள்ள மாசு நிறைந்த  தொற்றுகளை இது நீக்கும். அவற்றை அடியோடு அழிக்கும். உங்கள் தூய்மைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இது உத்திரவாதம் கொடுக்கும். 

அந்த காலத்தில் ஏற்றபடும் இது போன்ற விளக்குகள் அனைத்தும் உடலுக்கு ஆற்றல் அதிகரிக்கின்றது.   மனதுக்கு ஒரு திருப்தி கொடுக்கும். இது உங்கள் உடலை ஆரோக்கியமான சூழலை கொண்டு வரும். நேர்மறையான சிந்தனையை அதிகரிக்கும். இதுதான் இயற்கையின் அதிசயம்  ஆகும். இயற்கையை காக்க வேண்டும் என இதுக்குதான் சொல்கின்றனர் நம் முன்னோர்கள். இன்றிலிருந்தாவது மரம் நடுவதை வழக்கமாக வைத்துச் செயல்படவும். வீட்டு வாசலில் துளசி, ஓமவல்லி எனபடும் கறப்பூர வல்லி மற்றும்  திருநீற்று பச்சிலை, கற்றாலை, நொச்சி இலை செடிகள் வளர்த்து வந்தால் உங்கள் பக்கம் நோய் அண்டாது, நோய் தொற்றுகள் அண்டாது. உடலுக்கு ஆரோக்கியம் பெருகும். 

ஆடு தொடா இலை,  நொச்சி இலைகள், துளசி, ஓமவல்லி ஆகியவற்றை நன்கு அரைத்து  அதனை பசு மாட்டுச் சாணத்தில் கலந்து வெய்யிலில் காய வைத்து வில்லைகளாக வெய்யில் உலர்த்தி அதனை தினமும் உங்கள் வீட்டில்    ஊதுபத்தி சாம்பிராணி போல் பயன்படுத்தி உங்களை எந்த நோயும் அண்டாது. 
உடலுக்கு ஆரோக்கியம் பெருகும்.  சுற்றியுள்ள மாசுக்களை நீக்க முடியும்  நோய் தொற்றுக்கள் நீக்க முடியும். விசப்பூச்சிகள் வீட்டை அண்டாது. ஆரோக்கியம் பெருகும்.  இன்று நாம் கொரனாவுக்கு பயப்படுவது போல் வாழ்க்கையில் எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் படிக்க: மருத்துவ குணம் மிக்க மல்லிகை வாழ்வுக்கு அவசியம்

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன