காவலருக்கு மக்களுக்கும் உதவியாக வீட்டில் இருங்கள்..!

  • by
help police in this lock down to help prevent corona virus

கடந்த ஒரு மாத காலமாகவே நாம் அனைவரும் பொறுப்புடன் வீட்டில் அடைந்து கிடக்கிறோம், ஆனால் ஒரு சிலரின் அலட்சியத்தினால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கை அமல் படுத்தியதற்கு மிக முக்கியமான காரணம், இந்த கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவக் கூடாது என்பதற்காக, அதை தவிர்த்து இதன் மூலமாக மக்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக தான். இருந்தும் ஒரு சில மக்கள் இதைப் பற்றிய போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாமல் வெளியே சுற்றுகிறார்கள். இதனால் மக்களுக்கும் மற்றும் இவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் காவலர்களுக்கும் ஆபத்துக்கள் நிகழலாம்.

காவலர்களுக்கு நன்றி

நம்முடைய பாதுகாப்பிற்காக கஷ்டப்பட்டு வருபவர்கள் தான் இந்த காவலர்கள். இவர்களுக்கு வாழ்நாளில் விடுமுறை என்று ஒன்று கிடையாது, இருந்தும் இரவு பகல் பாராமல் மக்களுக்காக அயராது உழைத்துவரும் இவர்களுக்கு மக்கள் மரியாதையை கொடுக்க வேண்டும். ஒரு சில காவலர்கள் செய்யும் தவறான காரியத்தினால் ஒட்டுமொத்த காவலர்களையும் அவமானப்படுத்துவது சிறந்ததல்ல. எனவே மக்கள் காவலர்களை மதித்து அவர்களுக்காக அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க – கடுகு உடலுக்கு ஆரோக்கியம் தரும் அவசிய உணவு

பொறுப்புடன் செயல்படுங்கள்

ஊரடங்கை கடைப்பிடிக்காத வாகன ஓட்டிகள் மற்றும் பொறுப்பற்ற மனிதர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக எல்லா சாலைகளிலும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது நான்கு காவல் அதிகாரிகள் பணி செய்து வருகிறார்கள். இவர்களின் பணி சுமையை உணராத பொதுமக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். இதனால் கோபமடைந்த காவலர்கள் அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் தண்டனையும் அளித்து வருகிறார்கள். எனவே தனிமனித சுதந்திரம், சுதந்திர நாடு என்ற தத்துவங்களை பேசாமல் மக்கள் பொறுப்புடன் வீட்டில் இருக்க வேண்டும். இது உங்கள் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல் உங்களால் பாதிக்கப்படும் மற்ற உயிர்களையும் காப்பாற்ற கூடிய செயலாகும்.

காவலர்களின் கஷ்டம்

காவலர்கள் தங்கள் உணவுகளைக் கூட தெருவோரங்களில் இருக்கும் இடங்களில் அருந்துகிறார்கள், இவர்கள் மக்களுடன் இணைந்து பணி செய்வதினால் இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உண்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால் இவர்கள் வீட்டிற்கும் செல்ல முடியாமல் தங்கள் குழந்தை மற்றும் மனைவிகளை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே இவர்கள் நிலையை புரிந்துகொண்டு மக்களாகிய நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்தியாவில் ஒரு சில காவலர்களுக்கும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எனவே இவர்கள் செய்யும் தியாகத்தை புரிந்து கொண்டு மக்கள் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

மேலும் படிக்க – ஆரோக்கியத்தை அதிகப்படுத்த சுக்கு அவசியம்

நாட்டின் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் காவல் துறையினருக்கு நாம் உரிய மரியாதையை அளித்து அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். இரவு பகல் பார்க்காமல் கிடைக்கும் உணவுகளை உண்டு தெருவோரங்களில் உறங்கி வரும் காவல்துறையினருக்கு ஏராளமான சமூக சேவகர்கள் உணவுகளை அளித்து உதவுகிறார்கள். இருந்தும் மக்களாகிய நாம் அவர்களை கஷ்டப்படுத்தாமல் அவர்கள் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்து கொண்டு, இந்த ஊரடங்கி கடக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன