ஊரடங்கின் பொழுது இல்லாதவர்களுக்கு உதவுபவர்கள்..!

  • by
help others during this lockdown period

இந்தியா முழுவதும் ஊரங்கை மேலும் 18 நாட்களுக்கு பின் தொடரும்படி மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து மாநில அரசுகளும் தாங்கள் ஏற்கனவே விதித்திருந்த கட்டுப்பாடுகளை தகர்த்து மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே கேட்டு பின் தொடர்ந்து வருகிறது. இதுவரை ஊரடங்கை அமல்படுத்திய நாள் முதல் இன்றுவரை எல்லா அரசாங்கமும் வேலையில்லாதவர்களுக்கு மற்றும் அன்றாட உணவிற்க்கு கஷ்டப்படுபவர்களுக்கு இலவசமாக அத்தியாவசிய பொருட்களை அளித்து வந்தது. அதை தவிர்த்து சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் அவர்களுக்கு உதவிகள் கிடைத்து வந்தது. ஆனால் இந்த ஊரடங்கு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மேலும் சில நாட்கள் உணவுக்காக கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வறுமையில் வாடும் மக்கள்

இந்தியாவின் பொருளாதாரம், உலக பொருளாதாரத்திற்கு இணையாக உயர்ந்து கொண்டே இருந்தாலும். நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இன்னும் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் அன்றைய தினத்தில் செய்யும் வேலையில் மூலமாக கிடைக்கப்படும் ஊதியத்தின் மூலமாகவே இவர்களின் வாழ்க்கையை வழி நடத்தி வந்துள்ளார்கள் இதனால் இவர்களின் உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. என்னதான் மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவிகளைச் செய்தாலும் இவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் கிடைப்பதில்லை.

மேலும் படிக்க – ஊரடங்கை நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள்..!

உதவித்தொகை

அரசாங்கம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணமும் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளது. ஆனால் இதன் அளவு மிகக்குறைவாக உள்ளது என ஏராளமான மக்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். இதைத் தவிர்த்து இதுபோன்ற தரம் குறைவற்ற இலவச பொருட்கள் மூலமாக சமைத்து சாப்பிடப்படும் உணவுகள் ருசி இல்லாமல் மற்றும் ஆரோக்கியத் தன்மை அற்றதாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். எனவே இதுபோல் கஷ்டப்படும் மக்களுக்கு சமூக சேவை செய்பவர்கள் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்கள். அவர்களை பின்தொடர்ந்து இல்லாதவர்களுக்கு மக்களும் உதவி செய்ய வேண்டும்.

இல்லாதவர்களுக்கு கொடுங்கள்

உதவி என்பது எல்லோர் மனதிலும் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் ஒரு செயலாகும். ஆனால் தன்னுடைய கௌரவப் பிரச்சினையினால் ஒரு சிலர் வாய்விட்டு உதவி கேட்க மாட்டார்கள். எனவே இதுபோன்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். உங்கள் வீட்டில் அருகே வெளி மாநிலத்திலிருந்து பணிபுரிபவர்கள் அல்லது வெளி மாவட்டத்தில் இருந்து வேலைக்காக உங்கள் வீட்டு அருகில் குடியிருப்பவர்கள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உங்களால் முடிந்த சிறிய உதவிகளை செய்யுங்கள். நீங்கள் கொடுக்கப்படுவது ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட்டாக இருந்தாலும் சரி அல்லது ஒரு வேளை உணவாக இருந்தாலும் சரி அது ஒரு உதவி யாகவே கருதப்படும். எனவே மற்றவர்களின் எண்ணங்களை பொருட்படுத்தாமல் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

மேலும் படிக்க – தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வைரஸ் தொற்று..!

கவனிக்க வேண்டியவை

ஒரு சிலர் விளம்பரங்களுக்காக உதவிகளை செய்து வருகிறார்கள். இதுபோன்ற உதவிகளை பெறுபவர்களின் மனது மிகப்பெரிய அளவில் காயப்படும். எனவே உதவிகள் செய்யும் போது புகைப்படம் எடுப்பது அல்லது வீடியோ பதிவை செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர் ஒருவருக்கு உதவி செய்யும் போது இது போன்ற பதிவுகளை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதே போல் எல்லோரையும் குடும்பமாக நினைத்து உங்கள் உதவிகளை செய்யுங்கள்‌.

பண உதவியோ அல்லது பொருள் உதவியோ எதுவாக இருந்தாலும் முழு மனதுடன் செய்யுங்கள். வீடு, வாசல் இல்லாதவர்களுக்கு சமூக சேவை நிறுவனம் ஏராளமான உதவிகளை அளித்து வருகிறது. அவர்களுக்கு மதிய உணவு, இரவு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என கொடுத்து உதவுகிறார்கள். இதுபோன்றவர்களுக்கு எல்லா உதவிகளும் ஓரளவுக்கு கிடைக்கிறது. எனவே உதவிகள் கிடைக்காமல் தவித்து வரும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து மனிதத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன