காதல் ஜோடிகளின் உறவை வலுப்படுத்துவதற்கான குறிப்புகள்

tips for couples to make your relationship stronger

ஜோடிகளாக இருந்தாலே அவர்கள் உறவில் எப்போது மகிழ்ச்சிகள் இருக்கவேண்டும் இப்படி இருந்தால் மட்டுமே உங்கள் உறவு வலுப்படும் ஆனால் ஒரு சிலரோ ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் அவர்களை வெறுத்து காதலில் இருந்து மிக எளிமையான முறையில் பிரிந்து விடுகிறார்கள் இதுபோக திருமணமான தம்பதிகள் கூட தங்களின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள் எனவே இதுபோன்ற விஷயங்கள் எதுவும் நம் வாழ்க்கையில் நடக்காமல் இருப்பதற்கான வழிகளை பார்ப்போம்.

எப்போதும் தொடர்பில் இருங்கள் 

உங்கள் துணையின் சிந்தனை எவ்வாறு இருக்கிறது என்று உணர முயற்சி செய்யுங்கள் அதற்கேற்றபடி நீங்கள் செய்யும் செயலை தீர்மானியுங்கள் சில சமயங்களில் அவர்களை பற்றி புரிந்து கொள்ளாமல் நாம் செய்யும் சிறு சிறு செயல்கள் கூட காதல் ஜோடிகளின் இடையே வெறுப்பை ஏற்படுத்திவிடும் எனவே அவர்கள் சொல்ல வரும் வார்த்தைகளை முழுமையாக புரிந்துகொண்டு அதற்கேற்று பதிலளியுங்கள் அதை நீங்கள் வேறுவிதமாகப் புரிந்துக் கொண்டால் நிச்சயம் உங்கள் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க – 15 அழகான தமிழ் காதல் வரிகள்! Tamil Love Lines

எதை செய்வதாக இருந்தாலும் உங்கள் துணையுடன் ஆலோசனை கேளுங்கள்

உங்கள் துணையுடன் ஆலோசிக்காமல், அவர்கள் ஏற்றுக்கொள்வார் என்ற எண்ணத்தில் ஏதாவது முடிவு எடுத்தீர்கள் என்றால் நிச்சயம் அது தவறாக போவதற்கான வாய்ப்புகள் உள்ளது எப்போதும் ஒருவரை ஒருவர் ஆலோசித்து,  எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதை ஏற்கக் கூடியதாக இருக்கும்போதும் அவர்களை பொறுத்தவரை தவறானது என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்

ஒருவரை ஒருவர் மதியுங்கள் 

நீங்கள் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் வெளியே சென்று விட்டால் உங்கள் துணையை  மரியாதையாக நடத்துங்கள் தவிர்த்து அவர்களின் மரியாதைக் குறைவாக கூப்பிடுவது மற்றும் திட்டுவது போன்ற செயல்களினால்தான் உங்கள் உறவு பாதிப்புக்குள்ளாகும்

மேலும் படிக்க – தமிழ் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய காதல் வரிகள்!

பிடித்தவற்றை பேசுங்கள் 

உங்கள் உறவுக்குள் எப்போது தொய்வு நிலை ஏற்படுகிறதோ அப்போது உங்களுக்கு பிடித்த செயல்களை பற்றி பேசுங்கள் அதே சமயத்தில் உங்கள் துணை என்ன சொல்கிறார்களோ அதை பொறுமையாக கேளுங்கள் ஒருவரை ஒருவர் கேட்டு மற்றும் வார்த்தைகளை சரியாக பரிமாரிக்கொண்டால் உங்கள் உறவில் எந்த ஒரு விரிசலும் ஏற்படாது

நேர்மையாகவும் நம்பிக்கையுடன் இருங்கள் 

உங்கள் உறவில் நம்பிக்கை என்பது அதிகமாக இருக்க வேண்டும், இனிவரும் வாழ்க்கை முழுவதும் இவருடன் தான் நீங்கள் செலவு செய்யப் போகிறீர்கள் இந்த நம்பிக்கையில்தான் எப்போதும் ஒரு உறவுக்குள் நம் இறங்குவோம் இதைத் தவிர்த்து சந்தேகத்துடன் எதையும் செய்ய மாட்டோம் எனவே ஒரு உறவில் எப்போதும் நம்பிக்கையாக இருக்க முயற்சி செய்யுங்கள் அதைத் தவிர்த்து செய்யும் செயல்கள் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் உங்கள் கடந்த காலத்தை பற்றி அவர்களிடம் தெரியப் படுத்தி விட்டீர்கள் என்றால் இது ஒரு நம்பகத்தன்மையான உறவாக இருக்கும் அதே சமயத்தில் கடந்த காலத்தில் இருக்கும் வேதனைகளை பற்றி பேசுவதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க – சுவாரசியமான தமிழ் சிறுகதை காதல் வரிகள்!

காதலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் நிலையில் இன்னும் ஏராளமானோர் ஒன்றாக காதலித்து வருகிறார்கள் இதற்கான காரணம் என்னவென்றால் காதலர்கள் சண்டை போட்டாலும் தன் காதலின் மேல் வைத்திருக்கும் காதலை எப்போதும் மறுப்பதில்லை எப்படி காதல் பல ஆண்டுகள் கழித்து வாழ்கின்றதுதோ அதைப்போல் உங்கள் துணையையும் காதலியுங்கள் அவர் திருமண மாணவர்களாக இருந்தாலும் அவரை அன்புடன் பார்த்துக் கொள்ளுங்கள் இது போன்ற செயல்களை சரியாக செய்திருக்கிறார் என்றால் உங்கள் வாழ்க்கை  மிக அழகானதாக மாறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன