திணை வகைகள் தின்றால் திடகாத்திரம் ஆகலாம், வியாதிகளும் தீரும்.!

thinai

பழங்காலத்தில் விசேஷ நாட்களிலோ, பண்டிகை நாட்களில் மட்டுமே சமைக்கப்படும் உணவாக இருந்தது அரிசி. காலங்கள் மாற எல்லா நாட்களும் நெல் அரிசி சோறுக்கு மாறிவிட்ட பின்னரே அரிசி என்பது நெல் அரிசியை மட்டுமே குறிப்பதாக மாறிவிட்டது. தினை ,வரகு, சோளம், கம்பு ,போன்ற அனைத்து சிறுதானியங்களும் அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தி நமது தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

சோளப் பணியாரம்

சோளம் என்றால் இப்போதெல்லாம் பெரும்பாலோருக்கு நினைவில் வருவது மக்காச்சோளம் தான். ஆனால் உண்மையில் நம்முடைய பாரம்பரிய சோளம் அதுவல்ல. சிறு வெள்ளைச்சோளம் தான் நம்முடைய சோளம். அந்த சோளத்தை வைத்து செய்யப்படும் ஒரு சுவையான சிற்றுண்டி இது.

நான்கு பங்கு சோளம், ஒரு பங்கு உளுந்து, சிறிது வெந்தயம் இவை மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து அந்த மாவை ஏழு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அதனுடன் வெங்காயம், மிளகாய், சேர்த்து பணியாரம் செய்தால் அது காரப் பணியாரம். மாறாக, பணியாரம் சுட்டு நேரத்தில் தேவைக்கு ஏற்ப பனைவெல்லத்தை கரைத்து ஏலக்காய் சேர்த்து மாவில் கலந்து பணியாரம் சுட்டால் அது தான், இனிப்பு சோளப் பணியாரம்.

மேலும் படிக்க – உணவை விரைவாக சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்.!

பாசிப்பருப்பு சத்து உருண்டை

பயிறு மற்றும் பருப்பு வகைகளில் பாசிப்பருப்பு அதிக புரதச்சத்து தரும் ஒன்று. அந்த பருப்பை கறுகாமல் வாசம் வரும்வரை வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த மாவில் கொஞ்சம் முந்திரி, உடைத்த பாதாம், வெல்லம் பொடி செய்து சலித்து இதில் கலந்து கொள்ளுங்கள். நெய்யை சூடாக்கி அந்த மாவுக் கலவையில் ஊற்றி, சூட்டுடன் லட்டு பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒல்லியாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்த உருண்டை தினம் ஒன்று கொடுத்தால் போதும் அது அவர்களை புஜ பலசாலியாக மற்றும்.

மேலும் படிக்க – காலை நேர உடற்பயிற்சி அல்லது மாலை நேர உடற்பயிற்சி இவை இரண்டில் எது சிறந்தது?

குதிரைவாலி வெண்பொங்கல்

குதிரைவாலி அரிசி ஒரு பங்கு , அதில் பாசிப்பருப்பு கால் பங்கும் எடுத்துக்கொண்டு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் நெய் ஊற்றி மிளகு. சிறிதளவு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சூடாக்கி தயார்

செய்து வைத்திருந்த குதிரைவாலி பொங்கலில் ஊற்றவும். மற்ற அரிசி வகைகளை போல் அல்லாமல் அதிக நார்சத்து கொண்டுள்ள ஒரு தானியம்தான் குதிரைவாலி. நார்ச்சத்து சுவையை குறைக்கும். ஆனால் இதய நாளங்களில் படியும் கொழுப்பை கரைக்கவும், சர்க்கரை திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும், பெருமளவு இந்த நார்ச்சத்து உணவு பயன்படுகிறது .

கேழ்வரகு தித்தி பால்

100 கிராம் அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங்களில் உள்ள கால்சியத்தின் அளவு வெறும் 30 மில்லி கிராம்தான். கேழ்வரகில் இருக்கும் கால்சியத்தின் அளவு 350 மில்லி கிராம்.

கேழ்வரகை ஊறவைத்து நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் கையில் பிசைந்து அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பனைவெல்லம் சேர்த்து கஞ்சி காய்ச்சி அதில் கொஞ்சம் நெய், அல்லது தேங்காய் எண்ணையை சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம். இதை குழந்தைக்கு கூட கொடுக்கலாம் இரும்பும் கால்சியமும் இதில் அதிகம்.

மேலும் படிக்க – புல்லரிக்கும் நேரங்களில் நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் ?

திணை அரிசி இட்லி

சத்தான இட்லி தேடுவோருக்கு நம் தொன்மையான பாலிஃபீனால், பீட்டா கரோட்டின் நிறைந்த சத்தான இட்லி திணை இட்லிதான் .ஒரு கிலோ தினை அரிசி ,200 கிராம் உளுந்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் 20 கிராம் வெந்தயம் சேர்த்து, உளுந்தை தொலியோடு சேர்த்து அரைக்கவேண்டும். வைட்டமின் பி ,ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் செரிந்த பாலிஃபீனால் உளுந்து தோலில் தான் உண்டு. நம் முன்னோர்கள் தோலை நீக்காமல் தான் மாவு அரைத்தனர். அதிலிருந்து வரும் இட்லி மல்லிகைப்பூ போல் இருக்காது. அழுக்கு இட்லியாக தான் இருக்கும் .உண்மையில் இந்தக் கறை இட்லிதான் உடலுக்கு நல்லது.

அரிசியின் அளவிற்கு ஏற்ப அதற்கு பதிலாக கைக்குத்தல் அரிசி, மாப்பிள்ளை சம்பா, சிகப்பரிசி, வெள்ளைச் சோளம், போன்றவற்றை பயன்படுத்தியும் சுவை யான இட்லி தோசை செய்யலாம்.

வரகு ,கம்பு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை வைத்து புளியோதரை ,வெஜிடபிள் பிரியாணி முதலியவைகளும் செய்யலாம். அரிசியைவிட பல மடங்கு சத்து கொண்ட இந்த சிறுதானியங்களை அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தலாம்…..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன