எடை குறைப்பதற்கான ஆரோக்கியமான உணவு வகைகள்.!

  • by
healthy foods to reduce body weight

இன்றைய இயந்திர உலகத்தில் நாம் அனைவரும் உணவருந்தக்கூட நேரமின்றி நமது எதிர்காலத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். நமது மூதாதையர்கள் நீண்ட நாள வாழ்ந்தது மற்றும் வாழ்வதின் இரகசியம் அவர்களது உணவு பழக்கமே. இக்காலக்கட்டத்தில் நாம் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதில்லை. அதன் காரணத்தினாலேயே உடல் எடை அதிகரிக்கின்றது. ஆரோக்கியமான உணவின் மூலம் எவ்வாறு உடல் எடை குறைப்பது என்பதற்கான குறிப்பை வழங்கும் பதிவு இது.

முட்டை

அதிக புரத சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் முட்டையில் குவிந்துக்கிடக்கின்றன. எடை குறைக்கவோ அல்லது எடை அதிகரிக்கவோ முட்டை சிறந்த உணவாக அமைகின்றது. முட்டையின் மஞ்சள் கருவைவிட வெள்ளை கருவே சிறந்தது என ஒரு மாயையும இருக்கத்தான் செய்கின்றது. ஒரு முட்டையில் சுமார் 186 மிகி அளவு கொழுப்பு சத்து மஞ்சள் கருவில் மட்டுமே இருக்கின்றது. இன்னும் சொல்ல போனால், நமது உடலில் சக்தி மற்றும் தசை செயல்பாட்டை அதிகரிக்க உதவும் டெஸ்டோஸ்டிரோனுக்கு கொழுப்பு சத்து அவசியம். ஒரு ஆய்வில் நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு சத்தை குறைக்க முட்டை உதவுகின்றது என்பதும் தெரிய வந்திருக்கின்றது. முட்டை வெள்ளை கருவில் அதிக புரதசத்து இருக்க முட்டையில் ஏராளாமான ஊட்டசத்துக்கள் பெரும்பாலும் மஞ்சள் கருவிலேயே இருக்கின்றன. குறிப்பாக இரும்பு சத்து, வைட்டமின் பி12, பி2, டி ஆகிய சத்துகள் மஞ்சள் கருவில் நிறைந்திருக்கின்றன. ஒரு முழு முட்டை உங்களை அதிக நேரத்திற்கு பசியின்மையுடன் வைத்திருக்கும் எனவே குறைந்த கார்போ டயட்டிற்கு நிறைய வெள்ளை கருவை சேர்த்துக்கொள்வதை விட சில வேகவைத்த முட்டைகளை சேர்த்துக்கொள்வது சிறப்பு. மஞ்சள் கருவை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி பயணித்து செல்லுங்கள்.

மேலும் படிக்க – சன் பாத் எடுப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

கீரை வகை

கீரையில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரெட்கள் குறைவாகவும் நார்சத்த நிறைந்தும் இருப்பதால் இவை எடை குறைப்பதற்கு சரியான உணவாக அமைகின்றது. கீரையில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மினரல்ஸ், கால்சியம் போன்ற பல ஊட்டசத்துக்கள் நிறைந்திருக்கின்றன. தினம் அல்லது இரண்டு நாளைக்கு ஒருமுறை கீரை வகையை உணவில் சேர்த்துக்கொள்வது சாலச்சிறந்தது

மீன்

மீன் வகைகள் பெரும்பாலும் ஒமேகா 3 கொழுப்பு நிறைந்தவை. குறிப்பா காலா(சால்மன்) மீனை தினசரி சாப்பிட்டு வர எடை குறைவதை உணரலாம். இது பசியெடுக்க உதவும் ஹார்மோனை முறைப்படுத்தி அதிக நேரம் பசியெடுக்காமல் பார்த்துக்கொள்ளும். இதில் உயர் புரத சத்து நிறைந்திருப்பதால் நமது உடலின் பல செயல்பாடுகளை சீரமைக்க உதவுகிறது. ஒரு ஆய்வின் முடிவில் காலா மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு சத்து பெரும்பாலும் வயிற்றின் எடை(தொப்பை) மற்றும் உடல் எடை குறைக்க உதவுவதுடன் கல்லீரலில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க உதவுகின்றது.

சுண்டல்

சுண்டலில் நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் நீங்கள் நீண்ட நேரம் பசியின்மையை உணரலாம். உங்கள் வயது மற்றும் பாலினத்தை பொருத்து நார்ச்சத்தின் தேவை 21 லிருந்து 38 கிராம் வரை வேறுப்படும். ஒரு பௌல் சுண்டல் சாப்பிடுவதால் அன்றைய நாளுக்கு தேவைப்படும் மூன்றில் ஒரு பங்கு நார்சத்தை உங்களால் பெறமுடியும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கவும் சுண்டல் உதவுகின்றது.

மேலும் படிக்க – பழங்கால கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அதன் பயன்கள்..!

மேற்கூறிய உணவுவகைகள் மட்டுமின்றி மேலும் பல உணவுகள் ஆரோக்கியம்ன வழியில்
உடல் எடையை குறைக்க உதவுகின்றன. பிராக்கோலி, ஓட்ஸ், பாதாம், அவகேடோ, நிலக் கடலை, குடைமிளகாய், பயிறு வகைகளில் குறிப்பாக பச்சை பயிறு, தானிய வகைகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவுகளுடன் முறையான உடல் பயிற்சி, நடைப்பயிற்சி, போதிய தூக்கம், போதிய நீரை அருந்துதல் ஆகியவை உங்களை நீண்ட நாள் குறைந்த எடையுடன், நோய் நொடியின்றி வாழ வழிவகுக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன