பெண்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்..!

  • by
healthy foods that women should eat

பெண்களை விட ஆண்களே வலிமை வாய்ந்தவர்கள் என்று எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள், ஆனால் உண்மையில் ஆண்களை விட பெண்களே வலிமையானவர்கள். உடலளவில், மனதளவில் பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்து, அலுவலகத்துக்கும் சென்று, அவர்களின் பணியை செய்கிறார்கள். இதைத் தவிர்த்து ஆண்களை மகிழ்ச்சி படுத்துவது மற்றும் குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பது என ஏராளமான செயல்களை பெண்கள் செய்கிறார்கள். இதற்கு, அவர்களுக்கு ஏகப்பட்ட வலிமை தேவைப்படுகிறது. அதற்கு பெண்கள் ஆரோக்கியமான உணவு பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் மற்றும் மூளை வளர்ச்சி

எப்போதும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் மற்றும் உடல் வலிமையாக இருப்பதற்கு பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு வைட்டமின், மினரல்ஸ், புரோட்டின், ஃபைபர் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் தேவைப்படுகிறது. இது அதிகமாக கொண்ட உணவுகளை பெண்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் அவர்களின் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் குறைந்து தங்கள் இடையை சமமாக வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் இருதய பாதிப்பு, நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளையும், சத்துக்கள் அதிகமாக உணவுகளை உண்வதன் மூலமாக தடுக்க முடியும்.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அண்ணாச்சி பூ..!

மீன் உணவுகள்

பெண்கள் ஆரோக்கியத்திற்கு அதிகமாக உதவும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள்தான். இது அவர்கள் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை அளித்து, மாதவிடாய் பிரச்சனை மற்றும் குழந்தை பிறக்கும் போது ஏற்படும் பிரச்சனை போன்ற அனைத்தையும் தடுக்கிறது. எனவே அதிக சத்துக்கள் உள்ள மீன் உணவுகளை பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வைட்டமின் சி அதிகமாக உள்ள மீன் மாத்திரைகள் மற்றும் மீன் எண்ணெயை பெண்கள் பயன்படுத்தலாம்.

பழம் மற்றும் காய்கறிகள்

பெண்கள் உடல் நிலையை ஆரோக்கியமாக வைப்பதற்கு தினமும் பழம் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இதை பழரசமாக குடிக்காமல் அப்படியே சாப்பிடுவதால் ஏராளமான சக்திகள் அவர்களுக்கு கிடைக்கும். அதேபோல் காய்கறிகளை வேகவைத்து அதை சாலட்டாக சாப்பிடுவது இவர்களுக்கு நன்மையே அளிக்கும். மற்ற உணவுகளை விட பழம் மற்றும் காய்கறிகளில்தான் பெண்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. இதுபோன்ற உணவுகளை பெண்கள் தவிர்க்காமல் எப்போதும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரோட்டீன் உணவுகள்

பெண்கள் உடலின் வளர்ச்சிக்கும் மற்றும் அவர்கள் உடல் உறுதிக்கும் புரோட்டின் அதிகமாக தேவைப்படும். எனவே புரோட்டின் அதிகமாக உள்ள உணவுகளை பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மாமிசம் மற்றும் முட்டை உணவுகளில் புரோட்டீன் அதிகமாக இருக்கிறது, எனவே இதைப் பெண்கள் உணர்ந்து இது போன்ற உணவுகளை தவிர்க்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் பால், ப்ரோக்கோலி போன்ற உணவுகளில் கால்சியம் மற்றும் புரதம் அதிகமாக இருக்கிறது. எனவே பால் மூலமாக உருவாக்கப்படும் உணவுகளை பெண்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

எண்ணெய் உணவுகள்

பெண்கள் தானிய உணவுகளையும் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். சமையலுக்கு பயன்படுத்த கூடிய எண்ணெய்களையும் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவைகள் அவர்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து மற்றும் சக்தியும் அளிக்கிறது. அதேபோல் இவர்கள் உணவுகளில் எண்ணெயின் அளவு எப்போதும் குறைவாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாக அவர்களுக்கு ஏற்படும் சோர்வு குறைந்து எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை அழிக்கும் பிளாஸ்மா சிகிச்சை..!

கார்போஹைட்ரேட்

பெண்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். ஒருசிலர் உடலுக்குத் தேவையான அனைத்து கார்போஹைட்ரேட்டை குறைத்து விடுவார்கள். எனவே அதிக அளவிலான உடற்பயிற்சி மற்றும் உணவுகளில் கட்டுப்பாடு போன்றவைகள் உங்கள் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். எனவே உங்கள் உடலுக்குத் தேவையான உணவுகளை சிறிய இடைவெளிவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதை தவிர்த்து அதிக நேரம் உணவருந்தாமல் பசியில் இருக்காதீர்கள்.

பெண்கள் தங்களின் உடலை மெலிதாகவும் மற்றும் அழகாக வைத்துக் கொள்வதற்காக ஏராளமான உணவுக் கட்டுப்பாடுகளை பின் தொடர்வார்கள். இது ஆரம்பத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் நாளடைவில் அவர்கள் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த ஆற்றலையும் குறைத்துவிடும். இதனால் உங்கள் சிந்திக்கும் திறன் செயல் இழக்கும். எனவே இதுபோன்ற தவறான வழிகளை பின் தொடராமல் பசிக்கும் போதெல்லாம் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன