நிரந்தரமான ஆரோக்கியத்திற்கு உதவும் பானம்..!

  • by
healthy drinks for maintaining good health

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் எனவே நாம் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறேமோ அந்த அளவிற்கு நம்மின் மனநிலை மற்றும் வாழ்க்கை அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்களை எந்த ஒரு நோயும் தாக்காமல் எப்போதும் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்றால் நாம் ஒரு சில உணவு முறைகளை பின் தொடர வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய உணவுப் பொருட்களை வைத்து கசாயம் செய்து குடிக்க வேண்டும். இப்படி உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் வலிமை அளிக்கும் பானத்தை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே காணலாம்.

பீட்ரூட் கேரட்

நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின், மினரல்ஸ் போன்ற அத்தியாவசிய சக்தியை அளிக்கக் கூடிய ஒரு விதமான பானம் தான் இந்த பீட்ரூட் கேரட் பானம். பாதி அளவு பீட்ரூட்டை எடுத்துக்கொள்ள வேண்டும், பின்பு மூன்றில் ஒரு பங்கு கேரட்டை ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி விழுது மற்றும் உப்பை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ருசியை அதிகரிப்பதற்கு இதில் புதினாவையும் சேர்த்து கொள்ளலாம். இதை வாரத்திற்கு ஒரு முறை  செய்து குடித்து வந்தால் உங்கள் உடல் மற்றும் உடல் உறுப்புகள் அனைத்தும் வலிமையடையும். இதில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதினால் குடிப்பதற்கும் இதமாக இருக்கும்.

மேலும் படிக்க – கொரோனாவை கொள்ளுமா கபசுரக் குடிநீர்..!

எதிர்க்கும் பால் பானம்

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது தான் இந்த பானம். இதை செய்வதற்கு 200 மில்லி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் இஞ்சி விழுதை இதில் சேர்த்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு சர்க்கரை அல்லது தேனை கலந்து கொள்ளலாம். பிறகு இதை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே போல் உங்கள் உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களை இந்த பானம் அளிக்கிறது.

காரமான பானம்

நம்முடைய சமையலறையில் இருக்கும் மளிகை பொருட்களை கொண்டு செய்யப்படுவதினால் இந்த பானம் இயற்கையாகவே காரத் தன்மையை கொண்டுள்ளது. இதை செய்வதற்கு நாம் இரண்டு கப் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும், பிறகு அதில் சிறிதளவு இஞ்சி, பட்டை பொடி, மிளகு, துளசி இலை மற்றும் கிரீன் டீ பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இது அனைத்தையும் ஒன்றாக நீரில் போட்டு நன்கு கொதிக்கவைக்க வேண்டும், பிறகு அதை வடிகட்டி அதில் கிரீன் டீயை சேர்த்து தேவையான வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து அருந்தலாம். இந்த பானமும் உங்களுக்கு வைட்டமின் சி-யை அதிகமாக அளிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உங்களை எந்த ஒரு தொற்றுக்களும் தாக்காமல் பாதுகாக்கிறது.

மேலும் படிக்க – கொரோனா வைரஸின் தற்போதைய நிலை..!

கழிவுகளை அகற்றும் பானம்

உங்கள் உடலில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் அகற்றி சுத்தமாக வைப்பதற்கு இந்த பானம் உதவுகிறது. இதை செய்வதற்கு நீங்கள் அன்னாசிப்பழத்தை 200 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு புதினா, மிளகு மற்றும் ஏதேனும் ஒரு வகை கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு கருப்பு உப்பு சேர்க்கவேண்டும். இதை மொத்தமாக சேர்த்து அரைத்து அதை பழரசமாக குடிக்கலாம். இதை வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் அகற்றுகிறது.

இதைத்தவிர்த்து ஆரஞ்சு, இஞ்சி, தேங்காய் எண்ணெய், மிளகு போன்றவைகளை வைத்து மற்றொரு பானமும் தயாரிக்கலாம். உங்களுக்கு ஏற்றவாறு உங்களுக்கு பிடித்த பானத்தை தயாரித்து வாரம் ஒருமுறை தொடர்ந்து குடியுங்கள். இதனால் உங்கள் உடல் நிரந்தரமாக வலிமையாகவும், ஆரோக்கியமாக இருக்கும். எனவே எதிர்காலத்தில் எந்த ஒரு நோய் பிரச்சினைகளும் ஏற்படாமல் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் இதில் இருந்து ஏதாவது ஒரு பானத்தை வாரத்திற்கு ஒருமுறை தயாரித்துக் குடியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன