மூல நோய் அறிகுறி மற்றும் தீர்வு.!

health tips you should follow to avoid piles and stay healthy

மூலநோய் என்பது ஆசனவாய் குழாயில் வீக்கம் ஏற்பட்டு அதனுள் இருக்கும் ரத்த நாளங்களின் சுவர்களை எளிதாக்குகிறது இதனால் நாம் மலம் கழிக்கும் போது அந்த ரத்த நாளங்கள் சுவர்கள் கிழிந்து ரத்தம் வெளியேறுவதே மூலத்திற்கான அறிகுறி. இந்த ஆசன வாய் வீக்கம் ஏற்படுவதற்கான காரணம் நாம் செய்யும் அன்றாட வேலைகள் மற்றும் நம்ம உட்கொள்ளும் உணவுகள் தான் இதை எளிய முறையில் நம்மால் தடுக்க முடியும்.

ஒருவருக்கு மூலம் நோய் வந்துவிட்டால் அவர்கள் பல சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனையைப் பற்றி எல்லோரிடமும் மனம் விட்டு பேச முடியாத இடத்தில் மூலநோய் வருகிறது. இதனால் நாம் நெருங்கியவர்களுக்கு மட்டும் புரிய வைத்து நம் நிலைமையைப் பற்றி சொல்கிறோம் ஆனால் சில சமயங்களில் நாம் பொது இடங்களில் அமர்வது அல்லது கழிப்பறைகளை பயன்படுத்தும் பொழுது நமக்கு சிரமம் ஏற்படும். இத்தகைய மூலநோயை நாம் முதற்கட்டத்தில் கண்டறிந்தால் மருந்துகள் மூலமாக உடனடியாக குணப்படுத்த முடியும் ஆனால் ஒரு சிலரோ இதைப்பற்றி சொல்ல தயங்கி மூலநோயை மூன்றாம் நிலை வரை கொண்டு செல்கிறார்கள் இதனால் அறுவை சிகிச்சை மூலமாக அதை அகற்றப்பட்டு சில நாட்கள் அவர்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள்.

மேலும் படிக்க – சீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கும் குணங்கள்..!

நம் உடல், வழக்கத்தை விட அதிக வெப்பம் கூடியதாக இருந்தால் மூல நோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதற்காக முடிந்தவரை கோடை காலங்களில் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் நார்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். உடல் உஷ்ணம், ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது, மலம் கழிப்பதை தள்ளிப் போடுவது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் மூலநோய் ஏற்படுகிறது.

நார்சத்து அதிகமுள்ள பழங்களையோ அல்லது உணவுகளை உட்கொண்டால் மூல நோயில் இருந்து நாம் தப்பிக்க முடியும். வாழைப்பழம், பேரிச்சம்பழம், ஆப்பிள், புரோக்கோலி, பருப்பு உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதனால் மூல நோய் நம்மை தாக்குவது குறையும். எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு மூலநோய் வராமல் தவிர்க்க முடியும்.

மூல நோய் இருப்பதற்கான அறிகுறிகள் நாம் மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறும், வலி மற்றும் அரிப்புகள் ஏற்படும், மலச்சிக்கல் அல்லது ஆசனவாய் சுற்றி ஏதாவது கட்டிகள் தென்படும். இப்படி ஏதாவது அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை உடம்புக்குள் நுழைய விடாமல் விரட்டும் பவளமல்லி!

உடல் வெப்பம் என்பது, எப்போது நம் சக்தியை விட அதிகளவில் வேலையை செய்கிறோமோ அப்போது நம் உடல் அதிகமாக வெப்பமடைகிறது இதை தவிர்ப்பதற்காக முடிந்தவரை நாம் மிக அதிக எடையுடைய பொருட்களை சுமப்பதை தவிர்க்கவேண்டும் இல்லையெனில் ஒருநாளைக்கு நம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மூலநோய் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது.

எல்லா பிரச்சினைக்கும் தீர்வாக இருப்பது உடற்பயிற்சி இதை சரியான முறையில் செய்தால் நிச்சயம் உங்களை இந்த மூலநோய் தாக்காது. அது மட்டுமல்லாமல் யோகா பயிற்சிகள் மூலம் நோய் வருவதற்கு முன்பே தடுக்க முடியும் எனவே இவற்ரைப் பின்பற்றி மூல நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன