பல் சொத்தையை தவிர்ப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை.!

health tips on how to take care of your teeth and mouth

ஒரு நாளைக்கு அதிக அளவில் நாம் பயன்படுத்துவது நமது வாய் மற்றும் பற்கள்தான். இதன் உதவியில்தான் நாம் உணவு அருந்துகிறோம். இதனால் தான் நம் உடலுக்கு  ஒரு நாளுக்கு கிடைக்கக் கூடிய ஆற்றலை இதன்மூலம் அடைகிறோம். இத்தகைய முக்கியமான பங்கை வகிப்பது தான் நமது வாய்ப்பகுதியில் இருக்கும் பற்கள், நாம் எதை வேண்டுமானாலும் உண்ணலாம் என்ற கர்வத்தில் உண்ணுகிறது ஆனால் இதை நாம் சரியாக பராமரிக்காததால் நம்பற்களில் மிக எளிதில் சொத்தை ஏற்பட்டு இளம்வயதிலேயே நாம் பற்களை இழக்க நேரிடுகிறது. இப்போது இருக்கும் காலகட்டத்தில் அறுவை சிகிச்சை மூலம் புதியதாக பற்கலை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த நிலை வரை செல்லாமல் நாம் பற்களை பராமரித்துக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க – வாழையின் வனப்பு சோலைபோல் உடலுக்கு தரும் செழிப்பு..!

நமக்கு சொத்தைப் பற்கள் வராமல் இருப்பதற்காக இரவு உணவு அருந்திய பிறகு நாம் பல் துலக்குவதை கடமையாக செய்ய வேண்டும். இதை தவிர்த்து பல் இடுக்குகளில் இருக்கும் உணவுகளை சிறிய நூல் மூலமாக எடுத்திட வேண்டும் இப்படி செய்வதன் மூலம் உங்கள் பற்களில் பாக்டீரியாக்கள் பரவாமல் இருக்கும்.

குளிர்பானங்கள், கார்பனேட்டட் பானங்கள் மற்றும் மது பானங்களை தவிர்ப்பது நல்லது. இது உங்கள் பல் சொத்தையை தூண்டுவது மட்டுமல்லாமல் பல் வளர்ச்சியை அழித்து விடும். எனவே முடிந்தவரை நாம் அதிகமான நீரை உட்கொண்டாலே நமது பலமாக இருக்கும். அதிலும் ஏதாவது உணவு அல்லது இனிப்புகளை சாப்பிட்ட பிறகு தண்ணீரை அருந்தினால் உங்கள் வாய் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க – பந்தலிலே பாகற்காய் படையலாய் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

பால், சீஸ் என கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை உட்கொள்வது நமது பல்லின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் தினமும் தவறாமல் இரண்டு வேளை பல் துலக்குவது மிக அவசியம். என்னதான் நாம் பற்களை ஆரோக்கியமாக பார்த்து கொண்டாலும் சில சமயங்களில் பற்களில் உள்ள ஈறுகளில் வலி ஏற்படும் இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் எந்த ஒரு வீட்டு வைத்தியம் செய்யாமல் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன