முதுமையிலும் இளமை பலம் தரும் அருமருந்து கடுக்காய்!

  • by

கடுக்காயானது அருமருந்தாகும். இதன் பயனானது  60 வயது முதியவரையும் 20 வயது இளைஞர் போல் வலுவானவராக்கும். 

கடுக்காயின் மகத்துவமானது அகத்தியர் காலம் முதல் கடைப்பிடிக்கப்படுகின்றது  உடலில் உள்ள 23 வகையான நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கடுக்காய் கொண்டுள்ளது. 

கடுக்காயை ஆற வைத்து பொடி செய்து தினமும் வெந்நீரில் கலந்து குடித்துவர நாள்பட்ட தோல் நோயகள் குணமாகும் அத்துடன் உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனை உடலில் பளபளப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது. திரிபாலா  பொடியில் நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த சிவராத்திரி கொண்டாட்டங்கள்

ரணங்கள் ஆற்றும் கடுக்காய்:

 கடுக்காய் தொடர்ந்து உணவாக  சாப்பிட்டு வருவோர்கள் பல்வேறு நோயிலிருந்து குணமடைவார்கள். கடுக்காயானது வாய் புண்,  தொண்டை இன்பெக்சன், இரைப்பையிலும், குடலிலும் உள்ள புண்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தி வலுவாக்கும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தி அவற்றை சீராக்கும்.

  இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும் காது கோளாறுகளை சரியாக்கும்.  கடுக்காய் உடலில் ஆற்றலை அதிகப்படுத்தி நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்ற சிக்கல்களிலிருந்து காக்கின்றது.

 தினமும் காலை இஞ்சி, பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம். தண்டுண்டும் கிழவனும் துள்ளி திரியும்.

கடுக்காய்

கடுக்காயை  இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

வாதம் சம்மந்தமான பிரச்சனைகளை எதிர் கொள்வோர்கள் 

கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி,பித்தம் போன்றவை   குணமாகும். 

மேலும் படிக்க – ராமர் பாலம் கற்பனையா அல்லது வரலாற்று உண்மையா?

கழிவு நீக்கி 

 கடுக்காயை  15 கிராம் அளவு எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க் வேண்டும். இந்த தண்ணீர்  ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். உடலில் உள்ள கழிவுகளை நீக்கச் செய்து குணமாக்கும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன