செவ்வந்தி பூவெடுத்து செழிப்பான வாழ்கை வாழலாம்.

  • by

ஒவ்வொரு பண்டிகையின் போதும் இந்துக்கள் கடவுளுக்கு சமர்ப்பிக்கும் பூக்கள்தான் சாமந்திப்பூ. ஆனால் இதை நாம் வெறும் கடவுளுக்கான பூக்கள் ஆகவே பார்க்கிறோம். இதனால் மற்ற மதத்தினர்கள் இந்த பூவை வாங்குவதில்லை. ஆனால் எல்லோரும் தங்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்காக இந்த பூக்களை பயன்படுத்தலாம். செவ்வந்தி பூ என்று அழைக்கப்படும் சாமந்திப் பூவில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

உலகில் உருவாகிய எல்லா பூக்களிலும் ஒவ்வொருவிதமான மணமும், மருத்துவ குணங்களும் இருக்கின்றன. சில பூக்களிலிருந்து இயற்கை எண்ணெய்களையும் எடுக்கிறார்கள். அதை நாம் சரியாக அறியாமல் அத்தகைய பூக்களை வீணாக்கி வருகிறோம். மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் சாமந்திப் பூவில் அத்தகைய மருத்துவ குணங்கள் இருக்கின்றது.

மேலும் படிக்க – கோவைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

தலைவலி நிவாரணி:

நமது உடலில் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் முதலில் தலைவலி மூலமாக தான் நமக்கு தெரிவிக்கும். இந்த தலைவலியை தொடக்கத்திலேயே போக்குவதற்காக நாம் சாமந்திப் பூக்களை பயன்படுத்தலாம். சாமந்திப் பூவை நிழலில் உலரவைத்து அதனை பொடியாக்கி தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு ஏற்பட்டிருக்கும் தலைவலி உடனடியாக குணமாகும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக அவதிக்குள்ளாவார்கள். இவர்களுக்கு மலச்சிக்கல் வெளியேறுதல் பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படும். அதை தவிர்த்து அடிக்கடி மலம் கழியும் பிரச்சினைகளும் இருக்கும். இதை சரி செய்வதற்காக நாம் செவ்வந்திப்பூ என்றழைக்கப்படும் சாமந்திப் பூவைப் பயன்படுத்தலாம். சாமந்திப் பூவை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும், பிறகு அதில் பனை வெல்லம் கலந்து வடிகட்டி குடித்து வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மலச்சிக்கள் பிரச்சனைகள் தீரும்.


சாமந்தி கசாயம்:

சாமந்தி பூ கசாயம் மூலமாக உடல் சூட்டையும் குறைக்கலாம். சாதாரணமாகத் தொடங்கும் உடல் சூடு நாளடைவில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் இதைத் தவிர்ப்பதற்கு நாம் சாமந்திபூ கசாயத்தை அருந்துவது நல்லது.

என்ன தான் உணவுகளை உண்டாலும் எப்போதும் நீங்கள் உடல் மெலிந்து, சோர்வுடன் இருக்கிறீர்களா..? கவலை வேண்டாம் நீங்கள் சாமந்திப் பூவை உலர வைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் சதை பிடிப்பது மட்டுமல்லாமல் சோர்வுகள் அனைத்தும் நீங்கி சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

உடல் வலிகளையும் சாமந்திப்பூ ஒத்தரம் மூலமாக குணப்படுத்தலாம். இதற்கு நீங்கள் சாமந்திப் பூவை நன்கு நீரில் போட்டு கொதிக்க வைத்து விட்டு, அந்த நீரை வலிகள் மற்றும் சுளுக்குகள் இருக்கும் பகுதிகளில் ஊற்றினாள் போது இது வழி நிவாரணமாக செயல்பட்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை குணப்படுத்தும்.

மேலும் படிக்க – தினமும் உணவில் பீட்ரூட் சேர்ப்பதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்.!


இந்தியாவில் பிரசித்தமானது:

இந்தியா முழுக்க மிக எளிதில் விளையும் இந்த சாமந்தி பூக்கள் பல வண்ணங்களில் வருகின்றனர், ஆனால் இதன் மருத்துவ குணங்கள் மட்டும் ஒரே மாதிரிதான். எனவே எந்த சாமந்திப்பூ இருந்தாலும் அதை சரியான முறையில் பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை வலுப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன