பொது இடங்களில் எச்சில் துப்புவதினால் ஏற்படும் பிரச்சினைகள்..!

  • by
health effects of spitting in public places

நாம் பொது இடங்களில் எச்சில் துப்புவதினால் பலவிதமான வியாதிகள் நமக்கு பரவுகிறது. ஒருவர் துப்பும் எச்சில் உண்டாக்கும் கிருமிகள் மட்டுமே ஏராளமானோரை பாதிப்படைய செய்கிறது. எச்சில் துப்புவதற்கான இடத்தில் நாம் துப்பாமல் மக்கள் அதிக அளவில் பயன்படுத்த கூடிய இடங்களில் துப்புவதினால் அந்த இடங்களை  பயன்படுத்துபவர்களுக்கும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு இது போன்ற பிரச்சினைகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்வதற்கான வழிகள்.

உங்களிடம் சில கேள்விகள்

நீங்கள் பொது இடங்களில் எச்சை துப்புவர்களாக இருந்தால் உங்கள் வீட்டில் நீங்கள் எச்சை துப்பு வீர்களா.? நிச்சயம் மாட்டீர்கள். ஏனென்றால் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தின் மேல் உங்களுக்கு அவ்வளவு அக்கறை. ஆனால் பொது இடங்களில் மட்டும் நாம் இந்த அக்கறை எதும் இல்லாமல் இருக்கிறோம். ஏனென்றால் அதில் பாதிக்கப்படுவது மற்றவர்கள் என்பதினால்.

மேலும் படிக்க – உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரசும், ஆயுதமாக மாறியுள்ள சோப்பும்!

பொது இடங்களை சுத்தமாக வையுங்கள்

நாம் எச்சில் துப்புவதினாள் பல்லாயிரக்கணக்கான கிருமிகள் நம் சுற்றுச் சூழலில் சுற்றுகிறது. இதை தடுப்பதற்கு நாம் எச்சில் துப்புவதர்கான  இடங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு சில வினாடிகள் நீங்கள் செய்யும் இந்த சின்ன செயலால் எங்கோ, யாரோ ஒருவரின் வாழ்க்கை அழகாகும்.

கிருமிகளின் பாதிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான கிருமிகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் உலகம் முழுக்க இருக்கும் எல்லோரும் பலவிதமான பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிறிய கிருமியே என்று அலட்சியமாக விட்டு விட்டால் அது உங்கள் உடலில் கலந்து இரத்தம் முழுக்க பரவி உங்களின் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கிறது. இதை தடுப்பதற்கு நீங்கள் கிருமிகள் பரவும் செயல்களை தடுக்க வேண்டும். அதில் முதல் செயல்தான் பொது இடங்களில் எச்சில் துப்புவது.

மேலும் படிக்க – சிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணங்களும், தீர்வுகளும்.!

எச்சில் துப்பாமல் இருந்தால் வியாதிகளை நம்மால் தடுக்க முடியும். ஏன் சமீபத்தில் பரவியிருக்கும் கரோனா வைரஸ் தாக்குதலும் நம்மால் தடுத்திருக்க முடியும். இதனால் உயிர் இருந்தவர்களையும் காப்பாற்றியிருக்கலாம். எனவே மற்ற நாடுகளை உதாரணமாக எடுத்துக் கொண்டு நம் நாட்டை பாதுகாப்பதற்கு நம் சமுதாயத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன