சுத்தமற்ற உணவுகளை சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்சினைகள்..!

  • by
health effects of eating uncleaned food

சுத்தமற்ற உணவுகள் என்றாலே நம் மனதிற்கு தோன்றுபவை உணவகங்களில் நாம் வாங்கி சாப்பிடக்கூடிய உணவுகள் தான், ஏனென்றால் தினமும் மூன்று வேளை சமைக்கப்படும் உணவுகளை போதுமான அளவு சுத்தம் செய்வதற்கான நேரம் கிடைப்பதில்லை. இதனால், இருக்கும் மோசமான சூழ்நிலையிலேயே உங்கள் உணவுகளை சமைத்த உங்களுக்கு தருவதினால் நிச்சயம் அந்த உணவில் ஏதாவது பாதிப்புகள் இருக்கும், இதைதவிர்த்து ஏராளமான பிரச்சனைகள் வெளியே உணவுகளைச் சாப்பிடுவதினால் நமக்கு நிகழ்கிறது. அதை ஒவ்வொன்றாகக் காணலாம்.

ஹோட்டல் உணவு

ஹோட்டல்களில் சாப்பிடும் உணவுகளில் நம்மை அறியாமல் பல விதமான ரசாயனப் பொருட்களை கலக்கிறார்கள், ஏனென்றால் ஒரு முறை இந்த ஓட்டலில் நீங்கள் உணவை அறிந்து விட்டால் மீண்டும் அந்த உணவகத்திற்கு வருவதற்காக இதுபோன்ற செயல்களை செய்கிறான். எனவே இதுவரை எந்த ஒரு உணவகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ அந்த உணவகத்தை முடிந்தவரை தவிருங்கள்.

மேலும் படிக்க – தூக்கமின்மையால் இவ்வளவு பிரச்சனைகளா???

தெருவோரங்களில் இருக்கும் கடைகள்

முக்கியமாக நம்முடைய பணத்தை மிச்சப் படுத்துவதற்காக தெருவோரங்களில் இருக்கும் கடைகளில் அதிக அளவிலான உணவுகளை நாம் அருந்துகிறோம். ஆனால், அந்த உணவகத்தில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களை மிக மோசமானவை. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதினால் அது உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிப்படைய செய்யும்.

சுத்தமற்ற முறையில் தயாரிப்பு

வெளியில் இருக்கும் உணவகங்களில் ஒரு நாளைக்கு அதிக அளவில் உணவுகளை சமைப்பதினால் அங்கே சுத்தமற்ற சூழல் ஏற்படும். அதைப் உனவுகளை சமைக்கப்படும் பாத்திரங்கள் கூட முழுமையாக சுத்தப்படுத்தாமல் மீண்டும் சமைக்க தொடங்கிவிடுவார்கள். எனவே இது போன்ற உணவுகளை உண்டால் வயிற்றுப்போக்கு பிரச்சினைகள் ஏற்படும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

ஹோட்டல்களில் ஒருமுறை காய்கறி மற்றும் மாமிசங்களை வாங்கி விட்டால் அதை பல மாதங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து நமக்கு சமைத்து தருவார்கள். எனவே காய்கறிகள் மற்றும் மாமிசங்களில் இருக்கும் ஊட்டச்சத்துகள் அனைத்தும் இழந்து நாம் வெறும் சக்கையான உணவுகளை உண்கிறோம்.

மேலும் படிக்க – பூஞ்சை தொற்றிலிருந்து காக்க எளிய வழிமுறைகள்

வீட்டு உணவு

நீங்கள் வீட்டில் உணவுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள் மற்றும் மாமிசங்களை பல முறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லை எனில் அதில் மறைந்திருக்கும் சில தொற்றுக்களினால் உங்கள் உடல்நலம் பாதிப்படையும். எனவே அதை கழுவி சமைப்பது சிறந்தது.

ஏராளமான பிரச்சினைகள் ஓட்டல்களில் உணவுகளை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படுகிறது. இப்போது ருசிக்காக அருந்திவிட்டு எதிர்காலத்தில் உங்களுக்கு அஜீரண பிரச்சனை, வயிற்றுப் போக்கு, குடலில் புண்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. எனவே முடிந்தவரை இதை தவிர்த்து வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன