தயிர் யோகர்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of yoghurt

பாலில் இருந்து நமக்கு ஏராளமான உணவுகள் கிடைக்கிறது, அதில் பாலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் மூலமாக உருவாக்கப்படும் தயிர் உணவுதான் இந்த யோகர்ட். இது கிட்டத்தட்ட தயிரின் அடுத்த நிலை என்று சொல்லலாம். தயிரைப் போன்ற ருசியை கொண்ட யோகர்டில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இதில் முற்றிலுமாக கொழுப்புத்தன்மை இல்லாமல் உருவாவதால் பெண்கள் இதை அதிகமாக விரும்பி உண்கிறார்கள்.

உடல் தேவை

நம் உடலில் உள்ள எல்லா பகுதிகளும் ஆரோக்கியமாகவும் மற்றும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்றால் அது அனைத்திற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை நாம் அளிக்க வேண்டும். எனவே நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த யோகர்டில் இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 49 சதவீதம் கால்சியம் இருக்கிறது. எனவே இது உங்கள் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்குகிறது.

மேலும் படிக்க – சர்க்கரையை விட தேன் சிறந்ததா..!

வைட்டமின்கள்

நம்முடைய இருதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின்களான பி மற்றும் பி 12 சத்துகள் யோகர்டில் அதிகமாக இருக்கிறது. அதைத் தவிர்த்து இதில் பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் இருப்பதினால் உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதில் இருக்கும் வைட்டமின் டி சத்து உங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது, அதைத் தவிர்த்து மன அழுத்தத்தை தீர்க்கிறது.

செரிமான பிரச்சனை

யோகர்டில் அதிக அளவிலான புரோட்டின் இருக்கிறது. இது உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரித்து உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகளை குறைகிறது. இதில் இருக்கும் புரோட்டின் உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து செல்களையும் உற்பத்தி செய்கிறது. யோகர்டில் இருக்கும் ஒரு சில நல்ல பாக்டீரியாக்கள் உங்கள் உணவை மிக எளிதில் ஜீரணமாக்கிறது. அதேபோல் மலச்சிக்கல் போன்ற பிரச்சினையை முழுமையாக தடுக்கும் சக்தி யோகர்டிற்கு உண்டு.

மேலும் படிக்க – திராட்சை விதையில் எடுக்கப்படும் எண்ணெயில் சிறப்பு..!

நோய் எதிர்ப்பு சக்தி

யோகர்டில் மக்னீசியம், செலினியம் மற்றும் ஜிங்க் போன்ற சக்திகள் இருக்கிறது. இதை தவிர்த்து வைட்டமின் டி போன்றவைகளினால் இதில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது. எனவே தொற்றுகளில் மூலமாக ஏற்படும் எல்லா பிரச்சினைக ளையும் ஆரம்பத்திலேயே அழிக்கும் தன்மை யோகர்டில் உண்டு. இதில் கொழுப்பு தன்மை என்பது மிக குறைவாக இருப்பதினால் உங்கள் இதயதிற்கு தேவையான நல்ல கொழுப்புகளை உற்பத்தி செய்கிறது.

இதைத் தவிர்த்து உங்கள் உடல் எடையை பராமரிக்கவும் மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் சக்திகளை இந்த யோகர்டில் அளிப்பதால் இதை ஆண்களை விட பெண்களே அதிக அளவில் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதை நீங்கள் எளிமையான முறையில் வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம், அப்படி உங்களுக்கு போதுமான அளவு பொறுமை இல்லை என்றால் கடைகளில் வாங்கி இதன் பயனை பெறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன