வைட்டமின் டி சத்தினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of vitamin d in human body

வைட்டமின் டி சத்து குடும்பத்தை சேர்ந்தது தான் வைட்டமின் டி1, டி2 மற்றும் டி3 இவை மூன்றும் இல்லையென்றால் நம் உடலில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதில் முதன்மையாக இருப்பது எலும்பு பிரச்சனை, சருமப் பிரச்சனை மற்றும் மற்றும் உடலில் தொற்றுகளின் தாக்குதல் அதிகரிக்கும். இதைத் தடுப்பதற்காக நாம் வைட்டமின் டி சத்து அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதை தவிர்த்து மிக எளிமையாக அதிகாலையில் உருவாகும் சூரிய ஒளியிலிருந்து கூட நாம் வைட்டமின் டி சக்தியை பெறமுடியும்.

வைட்டமின் டி யில் பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு ஏராளமாக உள்ளது. எனவே தினமும் காலையில் சூரிய உதயத்தின் போது அதன் முன் நின்று உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்கள் நேரடியாக கிடைக்கும். அதைத் தவிர்த்து ஒரு சில உணவுகள் மூலமாகவும் நீங்கள் வைட்டமின் டி சத்தை பெறலாம்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை அழிப்பதற்கு மனவலிமை தேவை..!

வைட்டமின் டி உணவுகள்

சூரிய ஒளியை தவிர்த்து நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் கூட வைட்டமின் டி சத்து ஏராளமாக இருக்கிறது. அவைகள் என்னவென்றால் மீன் உணவுகள், முட்டையின் மஞ்சள் கரு, இறால் போன்ற அசைவ உணவில் வைட்டமின் டி உள்ளது. அதை போல் சைவ உணவுகளான பால், சேரல், கீரைகள் மற்றும் ஆரஞ்சு பழத்திலும் வைட்டமின் டி அதிகளவில் உள்ளது.

நோய்களுக்கு எதிராக போராடும்

உங்களுக்கு உண்டாகும் இதயப் பிரச்சினைக்கு எதிராக போராடும் குணம் வைட்டமின் டி சத்துக்கு உண்டு. கிருமித் தொற்றினால் உண்டாகும் காய்ச்சலை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. உங்கள் மனதை எளிதாக வைத்துக் கொள்ளவும் மற்றும் மனப் பதற்றம் மன உளைச்சல் போன்ற அனைத்தையும் குறைக்கும் தன்மை வைட்டமின் டிற்க்க உண்டு.

உடல் எடையை குறைக்கும்

வைட்டமின் டி சத்து உங்கள் உடலுக்குப் போதுமான அளவு கிடைப்பதன் மூலமாக உங்கள் உடல் எடை தானாக குறையும். உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வியர்வை மூலமாக வெளியேற்றும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து உங்கள் உடல் பருமன் பிரச்சனையை தவிர்க்கும்.

மேலும் படிக்க – கொரானாவின் ஆய்வுகளில் முடிவு நெருங்குகின்றது

உடலின் ஆற்றல்

உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து சோர்வு தன்மையை முழுமையாக குறைக்கும். உங்கள் எலும்புகளை உறுதியாக்கி குண்டான உடலை குறைக்க வைட்டமின் டி உதவுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர் வயதிற்கு ஏற்றார் போல் வைட்டமின் டி-யை சக்தி தேவைப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கும் மற்றும் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் வைட்டமின் டி சக்தி தேவைப்படுகிறது. இதனால் அவர்கள் வைட்டமின் டி உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். உங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்த்தொற்றுகள் மற்றும் எந்த ஒரு பிரச்சனையியும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும் தன்மை வைட்டமின் டி சத்து இருக்கு இருப்பதினால் இதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் உங்கள் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன