வியக்க வைக்கும் வசம்பின் பயன்கள்..!

  • by
health benefits of vasambu

கிராமப்புறங்களில் இருக்கும் நாட்டு மருத்துவர்களிடம் வசம்பை பற்றி கேளுங்கள், அவர்கள் அதை பிள்ளை வளர்ப்பான் என்பார்கள். இயற்கை நமக்கு ஏராளமான மூலிகை பொருட்களை அளித்துள்ளது. இதை அக்கால முன்னோர்கள் சரியாக பயன்படுத்தி தங்கள் ஆரேகியத்தை அதிகரித்து வந்தார்கள். எனவே பிறந்த குழந்தைகளை வளர்ப்பதற்கு வசம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்கிறார்கள். இன்றும் கிராமப்புறங்களில் வசம்பு இல்லாத வீட்டை நாம் காண்பது மிக அரிது.

கிருமி நாசினி

வசம்பு ஒரு இயற்கை கிருமி நாசினியாகவும் மக்கள் பார்த்தார்கள். இது குழந்தைகளுக்கு கொடுவதன் மூலமாக அவர்களின் உடலில் உள்ள தொற்றுகளை அகற்றி ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது. சுடு தண்ணீரில் வசம்பு, மஞ்சள், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அந்த நீரைப் நாம் கிரீமி நாசினியாக பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – கருவேப்பிலையில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா..!

தொற்றுநோய்

எல்லாம் வித தொற்று நோய்களுக்கும் தீர்வாக இருப்பது இந்த வசம்பு. வசம்பை நன்கு பொடியாக்கி அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிடுவதன் மூலமாக நம் உடலில் ஏற்படும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கிறது. இதை தவிர்த்து புதிதாக எந்த ஒரு தொறறும் உங்களை அண்டாதவாறு பார்த்துக் கொள்கிறது. இது குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லோரும் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

விஷத்தன்மை

தேவையில்லாத உணவுகளின் மூலமாக ஏற்படும் விஷத்தன்மை மற்றும் தேள், பூரான் போன்ற சிறிய வகை பூச்சிகள் கடிப்பதினால் ஏற்படும் விஷயங்களை நாம் வசம்பை பயன்படுத்தி முறித்துக் கொள்ளலாம். எனவே உங்கள் உடலில் இருக்கும் விஷயத்தை வெளியேற்றுவதற்கு நீங்கள் வசம்பு பொடியை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும், இதன் மூலமாக விஷங்கள் அனைத்தும் உடனே வெளியேறும்.

கால்நடைகள்

மனிதர்களுக்கு உண்டாகும் பிரச்சினையை மருத்துவர்கள் தீர்க்கிறார்கள், ஆனால் கால்நடைகளுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் அதை நாம் கண்டறிவதற்கு சில நாட்கள் ஆகிவிடுகிறது. அதன்பிறகு கால்நடை மருத்துவரை அணுகுகிறோம். இதனால் உங்கள் கால்நடையின் ஆரோக்கியம் மோசமான நிலைக்கு சென்றுவிடும். எனவே கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்றுகலை குறைப்பதற்கும் நாம் வசம்பை பயன்படுத்தலாம். அதேபோல் அதை எந்த ஒரு கிருமிகள் தாக்காமல் பாதுகாப்பாக வைப்பதற்கு வசம்பினால் உண்டாக்கும் புகையை கால்நடைகளை நுகரச் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க – முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வயாகரா..!

ஆற்றல் அளிக்கும்

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி ஏற்படும் பசியைக் குறைக்க வசம்பு உதவுகிறது. இதை தவிர்த்து உங்கள் உடலில் இருக்கும் நச் நச்சுகள் அனைத்தையும் போக்கி உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் பண்பு வசும்பிற்க்கு உண்டு. எனவே இதை பொடி செய்து சிறிதளவு சாப்பிடலாம், இல்லை எனில் தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு இந்த வசும்பினால் உண்டாகும் புகையை நுகரச் செய்வார்கள். இதன் மூலமாக அவர்கள் உடலில் வசம்பு மூலிகை சென்று கிருமிகளை அழிக்கிறது. அதேபோல் இதை சிறிதளவு நாக்கில் தடவுவது நன்மையை அளிக்கும். இதே வழியை எல்லோரும் பயன்படுத்தலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த வசும்பை எப்போதும் வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். சாம்பிராணியுடன் இந்த பொடியை சேர்த்து வீடு முழுவதும் இதை பரவ விடுங்கள். இந்த சிறிய செயல் உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை பல மடங்கு அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன