திரிபலா பொடியை பயன்படுத்தி ஏராளமான வியாதிகளை தடுக்கலாம்..!

  • by
health benefits of using tiripala powder

இக்காலத்தில் எல்லோரும் அயராமல் உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு ஓய்வில்லாமல் உழைப்பதால் அவர்களின் உடல் பல விதமான பாதிப்புகளை சந்திக்கிறது. இதை தடுப்பதற்கு நாம் ஏதாவது ஒரு ஆரோகியமான உணவை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அது தவறும் போது உங்கள் உடலில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும். எனவே தினமும் இரவில் திரிபலா பொடியை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் ஆரோக்கியம் அதிகரித்து உங்கள் வாழ்க்கையும் வளமாகும்.

பாரம்பரிய மருந்து

திரிபலா பொடி ஒரு பாரம்பரிய மருந்து வகையை சேர்ந்தது. இதில் நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தன்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளையும் சேர்த்து செய்யப்படுவதால் இதை அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

மேலும் படிக்க – அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்கள் மஞ்சளை பயன்படுத்தும் காரணங்களை காணலாம்..!

இளமையாக இருக்க திரிபலா பொடி

நீங்கள் என்றும் இளமையாக இருக்க வேண்டுமென்றால் இரவில் திரிபலா பொடியை நீரில் கலந்து சாப்பிடுங்கள். இது உங்களை சுறுசுறுப்பாகவும், ஆற்றலாகவும் மற்றும் என்றும் இளமையாக வைத்துக்கொள்ளும்.

இருதயத்தின் ஆரோக்கியம்

திரிபலா பொடியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் எந்தவொரு நோய்த்தொற்றும் உங்களை அண்டாமல் உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும். இதைத் தவிர்த்து இதய பிரச்சனை வராமலும் மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்ககும்தன்மை இந்த திரிபலா பொடிக்கு உள்ளது.

நச்சுகளை அகற்றும்

உங்களில் குடல் பாதைகளில் இருக்கும் நச்சுகளை அகற்றி குடல் இயக்கத்தை சீராக்கும். உங்களுக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைகளை அனைத்தையும் போக்கி சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும். வயிற்றில் உள்ள புண்கள் மற்றும் அல்சர் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தும்.

சிவப்பணுக்களை அதிகரிக்கும்

உங்கள் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதே போல் உங்கள் உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்கிறது.

நச்சுகளை அகற்றும்

அதேபோல் ரத்தத்தில் உள்ள நச்சுகளை அகற்றி தோல் நோய்கள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளும். இதை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து உங்களை உடல் பருமன் ஏற்படாமல் வைத்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – மண் பானைகளில் சமைப்பதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

சுவாசத்திற்கு நல்லது

மூச்சுக் குழாயில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் இதை தினமும் சாப்பிட்டு வரலாம். ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார்போல் இதை எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சினைகளும் தீர்வு காணும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த திரிபலா பொடியை மழைக்காலங்களில் சுடு தண்ணீரிலும், கோடைக்காலங்களில் வெதுவெதுப்பான நீரிலும் கலந்து சாப்பிட்டு நல்ல பலன் பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன