திரிபாலா ஆரோக்கியத்தின் ஆசானுன்னு சொல்லலாம்.!

health benefits of using thiripala powder

உடல் ஆரோக்கியத்திற்கு நமக்கு மிக முக்கியமான ஒன்று உணவு. என்னதான் நம் உடல் பயிற்சிகள் செய்து நம் உடலை வலிமையாக வைத்திருந்தாலும் தவறான உணவு முறைகளால் நமது உடல் நலம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வைத்துள்ளவர் என்றாள் இதை தினமும் இரவில் உண்ணுங்கள். அதுதான் திரிபலா பொடி, இந்த ஒரு பொடி போதும் உங்கள் முழு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும்.

எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து திரிபலா பொடி

நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்படுவதே திரிபலா, இதை தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் நமக்கு உடலில்  ஆரோக்கிய கோளாறுகள் என்ற ஒன்றை மறக்க வைக்கும் அளவிற்கு இது நமக்கு சக்திகளை தருகிறது. என்னதான் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள், நட்ஸ், பானங்கள், டயட் போன்றவைகளில் இருந்தாலும் நமது உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சில கோளாறுகள் ஏற்படுகிறது. ஆனால் திரிபலா பொடியை உண்பதினால் உங்களுக்கு உடல் கோளாறுகளை 90% வரவிடாமல் பார்த்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – சத்துக்களை தரும் மீன் எண்ணெய் அறிவோமா!

திரிபலா பொடி இருதய நோயை வரவிடாமல் தடுக்கிறது, புற்றுநோய் செல்களை உருவாகுவதற்கு முன்பே அழித்துவிடுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகமாக இருப்பதினால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதேசமயம் முதுமையை தாமதப்படுத்தி உங்களை இளமையாக வைக்க உதவுகிறது.

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் திரிபலா

உங்களின் உணவுப் பாதையில் இருக்கும் நச்சுத் தன்மையை விளக்கி செரிமானத்திற்கு உதவுகிறது. குடல் இயக்கத்தை சீராக்கி வயிற்றுப்புண், அல்சர்களை தடுத்து உங்கள் வயிற்றில் இருக்கும் நாடாப்புழுக்கள், வலைப்பூக்கள் மற்றும் பூச்சிகளை வெளியேற்றி தொற்றுக்கள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – டிரெண்டாகும் வெல்லமும், பனை வெல்லத்தின் பயன்பாடு.!

இது உங்கள் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் ரத்த சோகை பிரச்சினை உங்களை விட்டு விலகி விடும். திரிபலாவில் உள்ள கசப்புத்தன்மை உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைத்து கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. உங்கள் உடல் குளுகோஸ் அளவையும் சமநிலையில் வைத்துக் கொள்கிறது.

திரிபலாவின் தனித்தன்மை

உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி உங்கள் எடையை சீராக வைத்துக்கொள்கிறது. அதேபோல் தோல் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. திரிபலா பொடி சுவாசத்திற்கு மிகவும் நல்லது. இது உங்கள் சுவாசத்தில் இருக்கும் சளியை அகற்றி சைனஸ் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும். தலைவலி கண்பார்வை கோளாறு என எல்லாவற்றிற்கும் சிறந்த மருந்தாக இந்த திரிபலா பொடி இருக்கிறது.

மேலும் படிக்க – பனை வாழ்வில் துணை, வெல்லம் கல்லம் இல்லாமல்

திரிபலா பொடியை வீட்டில் எளிமையான முறையில் தயாரிக்கலாம். அதற்கு நாம் கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் 4 பங்கு, கடுக்காய் இரண்டு பங்கை எடுத்து நிழலில் நன்கு காயவைத்து விட வேண்டும். பிறகு அதை அரைத்து பொடியாக்கி தினமும் பயன்படுத்தலாம். இல்லை எனில் இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

மழைக்காலங்களில் திரிபுலா பொடியை சுடு தண்ணீரில் கலந்து குடிக்கலாம், அதுவே கோடை காலத்தில் நாம் வெறும் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும். பனிக்காலங்களில் திரிபுலா பொடியுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. அதேபோல் குளிர்காலத்தில் திரிபலா பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்கள் வாய் புண்ணை சரிசெய்யும் இத்தகைய சிறப்பு வாய்ந்த திரிபலா பொடியை தினமும் சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்தை வலுப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன