பர்ஃப்யூம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of using perfume

மனிதர்களில் இரண்டு வகையாக இருக்கிறார்கள், ஒருவர் பர்ஃப்யூம் அதிகமாக போட்டுக் கொள்பவர்கள், மற்றொருவர் அது என்னவென்று இன்று வரை தெரியாமல் இருப்பவர்கள். மற்றவர்களைப் பொருத்தவரை பர்ஃப்யூம் என்பது ஒரு வாசனை திரவியம். இதை போட்டுக் கொள்வதினால் எல்லோரின் கவனமும் ஒருவர்மேல் வரும் என்று இன்றுவரை நம்புகிறார்கள். ஆனால் பர்ஃப்யூம் மற்றவர்களை கவருவதற்கு மட்டுமல்லாமல் பல நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்துகிறார்கள். அது என்னவென்று இங்கே காணலாம்.

அற்புதமான மணம் வீசும்

பர்ஃப்யூம் போட்டுக் கொள்வதினால் உங்களைச் சுற்றி ஓர் அற்புதமான மணம் வீசிக்கொண்டே இருக்கும். இதனால் நீங்கள் எப்போதும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருப்பதாக மற்றவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அதைத் தவிர்த்து தொடர்ந்து வேலை செய்பவர்கள் இதுபோன்ற பர்ஃப்யூம் பயன்படுத்துவதினால் அவர்கள் மேல் வீசும் துர்நாற்றம் அனைத்தும் விலகி நல்ல நறுமணத்தை வெளியிடும்.

மேலும் படிக்க – கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்???

ஞாபகத் திறனை அதிகரிக்கும்

நறுமணத்திற்கும் ஞாபக சக்தி உண்டு. நம் வாழ்வில் கடந்து வந்த பல நாட்களை ஒரு நறுமனத்தின் மூலமாக நாம் மீண்டும் கொண்டுவர முடியும். ஏனென்றால் நாம் பிற்காலத்தில் நுகர்ந்த நறுமணத்தை எதிர்காலத்தில் நுகரும் பொழுது நமது நினைவாற்றல் அனைத்தும் வேலை செய்து கடந்த காலத்திற்கு நம்மை கொண்டு செல்லும். எனவே நறுமனத்தினால் உங்கள் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதைத் தவிர்த்து உங்கள் செயல்திறனும் அதிகரிக்கும்.

மனநிலையை மாற்றும்

நல்ல ஒரு நறுமணம் உங்கள் மனநிலையை சந்தோஷமாக மாற்றும். நீங்கள் துவண்டு உள்ள சமயங்களில் உங்கள் உடலில் பர்ஃப்யூம் அணிந்து கொள்ளுங்கள், இதன் மூலமாக நீங்கள் புத்துணர்ச்சி அடைந்து உங்கள் மனநிலை நேர்மறையாக செயல்படும். உங்கள் எண்ணங்களை உருவாக்க பர்ஃப்யூம் உதவுகிறது.

தன்னம்பிக்கையை அதிகரிக்கும்

உங்களை சுற்றியுள்ளவர்களை ஒப்பிடுகையில் உங்கள் மனம் மட்டும் எப்போதும் அதிகமாகவும் அழகாகவும் ரசிக்க கூடியவையாக இருக்கும். இதனால் மற்றவர்களை ஒப்பிடுகையில் உங்களின் எண்ணம் உயர்ந்ததாக இருக்கும். இதன் மூலமாக உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கும்

ஒரு சில பர்ஃப்யூமில் இருக்கும் நறுமணங்கள் உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். அதிகளவில் பூக்களினால் பர்ஃப்யூம் செய்கிறார்கள் எனவே மன அழுத்தத்தை குறைக்கும் நறுமணங்கள் எல்லா பர்ஃப்யூம்களிலும் இருப்பதினால் உங்கள் மன அழுத்தம் மற்றும் மன பதட்டம் குறைந்து எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்க முடியும்.

மேலும் படிக்க – வாழ்வை இனிமையாக்கும் வாழையிலை குளியல்!

மற்றவர்களை எளிதில் கவரலாம்

நீங்கள் முதல் முறையாக உங்கள் காதலன் உடன் வெளியே செல்லும் பொழுது உங்கள் பர்ஃப்யூமை சரியானதாக தேர்ந்தெடுக்க வேண்டும். பல ஆய்வுகளின் முடிவில் முதல் காதல் வெற்றி பெறுவதற்கு முழுக்காரணம் பர்ஃப்யூம் என நிரூபணமாகியுள்ளது. அதைத் தவிர்த்து நேர்காணல் இல்லையெனில் புதிதாக எவரேனும் சந்தித்தல் போன்ற செயல்களுக்கு பர்ஃப்யூம் நல்ல தொடக்கத்தை தரும்.

எனவே மற்றவர்கள் ஏன் இவ்வளவு பர்ஃப்யூமை போடுகிறார்கள் என்ற கடுப்பை குறைத்து நீங்களும் உங்கள் தோற்றத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தி மற்றவர்களை கவருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன