மெலனின் நிறமி பாதிப்பை சரி செய்து சரும பளபளப்புக்கு இதை பயன்படுத்துங்க.!

health benefits of using melanin

நாம் பயன்படுத்தப்படும் காய்கறிகள், பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணங்கள் இருக்கிறது. என்றாவது இது ஏன் இத்தகைய வண்ணத்தில் இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கிறதா.? ஒவ்வொரு உணவில் இருக்கும் வண்ணங்களுக்காக காரணம் அதில் இருக்கும் நிறமிகள் தான். கேரட், மிளகாய், ஆரஞ்சு, எலுமிச்சை என எல்லாவற்றுக்கும் நிறத்தை அளிப்பது நிறமிகள். இது போன்ற ஒருவகையான நிறமிதான் நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் மற்றும் சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. அதுதான் மெலனின்.

மெலனின் நிறமிகள் என்றால் என்ன

மெலனி என்பது கருமை என்பதற்கான பொருள். நமக்கு கருமை நிறத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு இயற்கை வேதிப்பொருள் இது. நமது சருமத்தில் ஏற்படும் நிறத்திற்கு முழு காரணம் இந்த மெலனின் தான். நம்முடைய நிறம் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை இது தான் தீர்மானிக்கிறது. ஏனெனில் நம் சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை பொருத்துதான் நம் உடலில் கருமையும், வெண்மையும் தோன்றுகிறது.

மேலும் படிக்க – தக்காளி ஒரு பெஸ்ட் ப்ளீச்சிங் ஏஜெண்ட்.!

மெலனின் அதிகமாக இருந்தால் அவர்கள் கருப்பாக இருப்பார்கள். அது அவர்களின் மரபணுவை பொருத்து அமைகிறது. மெளனியின் மட்டும் மூன்று வகையில் இருக்கிறது. அவைகள் இயூமெலனின், ஃபியோமெலனின் ம‌ற்றும் நியூரோமெலனின் ஆகும்.

மெலனின் நிறமியின் தாக்கம்

இயூமெலனின் நமது சருமத்தின் நிறத்தை தீர்மானிக்கிறது. ஃபியோமெலனின் நமது உடலில் இருக்கும் அமினோ அமிலத்தை உற்பத்தி செய்கிறது இது நமது தலைமுடியின் நிறம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நியூரோமெலனின் நமது மூளையில் இருக்கக் கூடியது.

மேலும் படிக்க – கொரிய நாட்டு பெண்களின் அழகு குறிப்புகள் உங்களுக்காக

நாம் பூமியில் வாழும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றாற்போல் நமது உடம்பில் இருக்கும் மெலனின் நிறமியின் அளவு மாறுபடுகிறது. உதாரணத்திற்கு, புற ஊதா கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் நாடுகளில் மெலனின் அளவு அதிகமாக இருக்கும் இதனால் அவர்கள் கருப்பாக இருப்பார்கள். உதாரணத்திற்கு ஆப்பிரிக்கா, சோமாலியா, சூடான் போன்ற இடங்கள். அதுவே ஊதா கதிர்வீச்சு குறைவாக வீசும் இடங்களில் மெலனின் அளவு குறைவாக இருக்கும். இதனால் அந்த இடத்தில் வாழும் மனிதர்கள் வெள்ளைத் தோலைக் கொண்டு இருப்பார்கள்.

மெலனின் ஆர்வத்தை அதிகரிக்கும் உணவுகள்

மெலனின் அளவு அதிகமாக இருப்பதினால் நமது சருமம் சூரிய ஒளியால் எந்த பாதிப்பையும் அடையாது. அதே சமயத்தில் சரும புற்று நோய் போன்ற பிரச்சினைகள் மெலனின் அதிகமாக உள்ளவர்களை பாதிக்காது. நமது உடலில் மெலனின் அளவு குறைந்தால் நமக்கு இளநரை ஏற்படுகிறது இதைத் தடுப்பதற்கு நாம் மெலனின் சக்தி அதிகரிக்க வேண்டும் இதன் மூலம் நாம் நிரந்தரமாக கருமையான கூந்தலைப் பெற முடியும். மெலனின் குறைபாட்டினால் நமது சருமம் பாதிப்படையும் உடல் வறட்ச்சி அடையும். வயது அதிகரிக்கும் முன்பு மூட்டு வலி ஏற்படும் இது அனைத்திற்கும் காரணம் வைட்டமின் டி குறைபாடு இதற்கு நாம் சரியான உணவுகளை மூலம் குணப்படுத்தலாம்.

மேலும் படிக்க – கண் மேக்கப்பில் நாம் கவனித்து செய்ய வேண்டியது!

மெலனின் சக்தியை அதிகரிப்பதற்காக நாம் மீன் வகை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மீன் எண்ணெய், பசும்பால், முட்டை, ஆரஞ்சுபழம், பூசணி விதை, ஆளி விதை, சூரியகாந்தி விதை மற்றும் வைட்டமின் டி உள்ள உணவுகளை எடுப்பதன் மூலம் உங்கள் உடலில் மெலனின் சக்தியை அதிகரிக்கலாம். அதேபோல் சருமத்தில் மெலனின் சக்தி குறைவாக இருப்பவர்கள் சன்ஸ்கிரீன் மற்றும் வைட்டமின் டி உள்ள கிரீம்களை பயன்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன