டிரெண்டாகும் வெல்லமும், பனை வெல்லத்தின் பயன்பாடு.!

health benefits of using jaggery instead of sugar

மனிதனுக்கு ஆரோக்கியத்தை விட மாற்றத்தின் மேல்தான் நம்பிக்கை அதிகம். இதனால்தான் நாம் ஆரோக்கியமாக பயன்படுத்தி வந்த உணவுகளை தவிர்த்து புதிய மாற்றத்திற்க்கு பின்னால் சென்று தேவையற்ற உணவுகளை அருந்தி பல ஆரோக்கிய குறைபாடுகளுக்குள் வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் வெளியான ஆய்வில் நாம் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த உணவுகளில் தான் ஆரோக்கியம் குணங்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் நாம் மீண்டும் முப்பது வருடங்களுக்கு பின் சென்று அப்போது இருக்கும் காலங்களில் நாம் விரும்பி சாப்பிட்ட உணவுகளை இப்போது பயன்படுத்தி வருகிறோம்.

மேலும் படிக்க – மண் குளியல் செய்து சருமத்தை பாதுகாக்கலாம்

அக்கால உணவுகளை ஒப்பிடுகையில் இக்கால உணவை நாம் அருந்துவதனால் நமக்கு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், புற்று நோய், இருதய நோய் போன்றவைகள் வராமல் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இப்போது ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 60ல் இருந்து 65 ஆக குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 35 வயதைத் தொட்டவுடன் அவர்களுக்கு ஏகப்பட்ட உடல் கோளாறுகள் ஏற்படுகிறது. இது அனைத்திற்கும் காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான்.

நாம் திடீரென்று நம் உணவு முறைகளை மாற்றுவது கடினம், அதனால்தான் வாரத்திற்கு ஒரு முறை இது போன்ற ஆரோக்கிய உணவுகளை நாம் சாப்பிடவேண்டும். கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சாமை போன்றவைகளில் நாம் உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்க – சப்சஜா விதைகளின் பயன்கள்..!

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகம் இதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் சக்கரை தான். சக்கரையை வெண்மைக்காகவும், அதன் சுவைக்காகவும் பெரிதாக பாலிஷ் செய்து நமக்கு தருகிறார்கள். இதனால் நமது உடலில் வழக்கத்தை விட சர்க்கரை அளவு அதிகரிக்கிறது அதையும் மீறி நம்மை சர்க்கரை வியாதிக்குள் தள்ளிவிடுகிறது. இதை தடுப்பதற்கு நாம் அக்கால சக்கரை என கருதப்படும் வெல்லம், பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். இதை சக்கரையுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு மருத்துவ குணங்கள் இருக்கின்றது.

நுரையீரல், தொண்டை பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளுக்காக கொடுக்கப்படும் நாட்டு மருந்துகளில் பனைவெல்லத்தை சேர்க்கிறார்கள். உங்களுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனை மற்றும் ரத்தசோகை போன்றவைகளை பனைவெல்லம் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

மேலும் படிக்க – பசலை கீரையில் பலவித நன்மைகள் உண்டு..!

நாம் பாலில் சர்க்கரைக்குப் பதிலாக பனை வெல்லத்தை போட்டு குடிப்பதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் மார்புச்சளி, தொண்டை புண், தொண்டை வலி போன்றவைகள் குணமாகும். காய்ச்சல், உடல் உஷ்ணம், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக பணக்கற்கண்டு இருக்கிறது.

சங்கீத வித்வான்கள் அவர்களின் குரல் வளம் மேம்படுவதற்கும், அதில் எந்த குறைகளும் இல்லாமல் இருப்பதற்கு பாலில் பனங்கற்கண்டை போட்டு தினமும் அருந்தி வருகிறார்கள். இதில் சில மூலிகைகளும் கலந்து குடிக்கிறார்கள். உலகில் பனைவெல்லத்தை அதிகமாக பயன்படுத்தும் மாநிலமாக இந்தியாவில் உத்தர பிரதேஷ் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலம் இருக்கிறது. இவர்கள் தாங்கள் சமைக்கும் எல்லா உணவுகளிலும் ஒரு துணி பனைவெல்லத்தை சேர்க்கிறார்கள்.

பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பனவெள்ளத்தை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமது உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் அதை தவிர்த்து இதை நாம் சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்துவதினால் நாம் எந்த கவலையும் இல்லாமல் இனிப்புகளை அதிகமாக உண்ணலாம். நமது ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு இதை சாம்பார், ரசம் என எல்லாவற்றிலும் சிறுதுளி கலந்து சாப்பிடலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன