பாட்டி வைத்தியத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of using grandma's medicine for diseases

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகில் உள்ள ஏராளமான பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏதாவது உடல் பிரச்சனை மற்றும் நோய் நொடிகள் ஏற்பட்டால் அதை தடுப்பதற்கு பாரம்பரிய வழியான பாட்டி வைத்தியத்தைதான் முதலில் கடைபிடித்து வந்தார்கள். இதனால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினையிலிருந்து உடனடித் தீர்வு மற்றும் அந்தப் பிரச்சனை மேலும் வளராமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்தப் பாட்டி வைத்தியத்தை பின் தொடர்ந்தார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாட்டி வைத்தியத்தில் நமக்கு ஏற்படும் நன்மைகளை காணலாம்.

களிமண் வைத்தியம்

உங்கள் உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள், உராய்வுகள் மற்றும் சிரங்கு போன்ற சரும பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால் நாம் எரிச்சலை கட்டுப்படுத்த ஐஸ் கட்டிகளை வைப்போம். இதை பெரியவர்கள் அனுசரித்து கொண்டாலும் சிறியவர்களினால் இந்த வலியை தாங்க முடியாது. இதற்காகவே பாட்டி வைத்தியத்தில் ஒரு சிறந்த வழி உள்ளது, அது என்னவென்றால் களிமண்ணுடன் வினிகரை ஒன்றாக சேர்த்து அதை நன்கு குழைத்துக் கொண்டு உங்கள் காயத்தின் மேல் தடவினால் ரத்த ஓட்டம் உடனடியாக நிற்கும். அதைத் தவிர்த்து காயங்களும் சில நாட்களில் முழுமையாக குணமடையும்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸினால் ஏற்படும் பதற்றத்தை எப்படி குறைப்பது..!

தலைசுற்றலை தடுக்கும்

தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்காக நம்முடைய பாட்டி இஞ்சியை இடித்து, சுக்கு கலந்த தேநீரை நமக்கு குடிக்கக் கொடுப்பார்கள். இதை தவிர்த்து சமையலுக்கு பயன்படுத்தும் எல்லா பொருட்களிலும் இந்த இஞ்சியை பயன்படுத்துவார்கள் இதன் மூலமாக நமக்குள் எதிர்ப்பு பண்பு உண்டாகும்.

தேன், எலுமிச்சை மற்றும் இஞ்சி

பாட்டி வைத்தியத்தில் அதிகளவில் பயன்படுத்தும் பொருட்கள் தான் எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேன் இதனுடன் சேர்த்து பூண்டையும் அவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தார்கள். நுரையீரலில் ஏற்படும் பிரச்சினைகளையும் மற்றும் சுவாசப் பிரச்சனை போன்ற அனைத்தையும் தீர்க்கும். உடற் குளிர்ச்சியினால் ஏற்படும் சளி போன்ற பிரச்சினையையும், தொற்றினால் உண்டாகும் சுவாசப் பிரச்சனை அனைத்தையும் தீர்க்கும் பண்பு இது மூன்றுக்கும் உண்டு.

விக்கலை தடுக்கும்

நம் அதிகமாக உணவை எடுத்துக் கொள்ளும் போது, நம் உடலில் போதுமான அளவு நீர் சக்தி இல்லாத போதும் நமக்கு விக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த விக்கல் பிரச்சினையை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது ஏனென்றால் இது உடனடியாக தீர்ந்தால் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் விக்கல் என்பது ஒரு சிலருக்கு தீராத பிரச்சினையாக அமைகிறது. எனவே விக்கலை போக்குவதற்காக பாட்டி வைத்திய முறையில் சர்க்கரையை பயன்படுத் தினார்கள். எனவே உங்களுக்கு விக்கல் ஏற்பட்டால் இரண்டு சிறிய கரண்டி அளவு சர்க்கரையை உட்கொள்ளுங்கள் விக்கல் உடனே நிற்கும்.

உதட்டில் ஏற்படும் வெடிப்புகள்

பெண்கள் உதட்டில் வெடிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் பாட்டி வைத்திய முறைப்படி அவர்கள் உதட்டில் ஆலிவ் எண்ணெயை தடவி அதை குணப்படுத்தினார். அதேபோல் உடலில் ஏதேனும் பூச்சிகள் கடித்தாலும் அல்லது குளவிகள் கொட்டினாலும் அந்த காயத்தை உடனே குணப்படுத்த உருளைக்கிழங்கு சாறை பயன்படுத்தினார்கள். உங்கள் உடலில் ஏதேனும் தொற்றுகள் ஏற்படாமல் தடுப்பதற்காக நாம் பூண்டில் இருக்கும் இரண்டு பற்களை தினமும் அதிகாலையில் சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்க – ஆல்கஹால் சானிடேஷனை வீட்டிலிருந்து செய்வது எப்படி..!

வாய் துர்நாற்றம்

உங்கள் பற்களை மென்மையாகவும் மற்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக பாட்டி வைத்திய முறைப்படி அவர்கள் எலுமிச்சை சாறை பயன்படுத்தி வந்தார்கள். அதே போல் உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு எலுமிச்சை சாறு உதவியாக இருந்தது. இது உங்கள் வாய்ப்பகுதியில் இருக்கும் அனைத்து கெட்ட பாக்டீரியாக்களை அழித்து உங்கள் சுவாசத்தை அடுத்த 12 மணி நேரம் வரை தூய்மையாக வைத்துக் கொள்ளும்.

இதைத் தவிர்த்து அதி மருதம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், மிளகு, திப்பிலி, சுக்கு போன்றவைகளை வைத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டார்கள். அதேபோல் நாம் உண்ணும் உணவை உடனே ஜீரணம் செய்யும் துணை உணவுகளையும் நமக்கு கொடுத்து நம்மை எப்போதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள பாட்டி வைத்தியம் உதவியாக இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன