கிராம்பு பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of using cloves

நாம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கிராம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. நமக்கு ஏற்படும் செரிமான பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, உடலுறுப்பு பிரச்சனை போன்ற அனைத்தையும் தீர்த்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த சிறிய கிராம்பு போதும். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை பயன்படுத்தி நம்மை மேலும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும். இதை தவிர்த்து இதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன அதை இந்த பதிவில் காணலாம்.

செரிமானத்திற்கு சிறந்தது

கிராம்பு உங்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினையும் தீர்க்கிறது. இதைத் தவிர்த்து நெஞ்செரிச்சல், குமட்டல், வாய்வுத் தொல்லை போன்ற அனைத்தையும் தடுத்து உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – பழங்கால பழக்கவழக்கங்களினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

காலராவை தடுக்கும்

தண்ணீரினால் ஏற்படும் காலரா நோய் உங்களுக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். இதன் மூலமாக வாந்தி, பேதி, மயக்கம் போன்றவைகள் உங்களை வாட்டி வதக்கி எடுக்கும். இதைத் தடுப்பதற்கு கிராம்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது காலரா பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்பட்டு உங்களை பாதுகாக்கும்.

புற்றுநோயை தடுக்கும்

கிராம்பு செல்களின் மரபணுவை சரிசெய்து புற்றுநோயை உண்டாக்கும் பிரச்சினைகளை தடுக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதினால் புற்றுநோய் செல்களை ஆரம்பத்தில் அழித்து உங்களைப் பாதுகாக்கிறது.

நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே அழிக்க நாம் கிராம்பை பயன்படுத்தலாம்.

கல்லீரலின் ஆரோக்கியம்

கல்லீரலில் உள்ள நச்சுக்களை அனைத்தையும் வெளியேற்றி அதை பாதுகாக்கும் பண்பு கிராம்பில் உள்ளது.

நீரிழிவு நோய்

இரண்டாம் நிலை நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு நாம் கிராம்பை பயன்படுத்தலாம். கிராம்பில் இருக்கும் மருத்துவ குணங்கள் இன்சுலின் அளவை தூண்டி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சமமாக வைத்துக் கொள்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை உங்களை நெருங்காது.

வெள்ளை அணுக்களை அதிகரிக்கும்

உங்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது. அதன் எண்ணிக்கையை சமமாக வைத்துக் கொள்வதற்கு நாம் தினமும் உணவில் கிராம்பை சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

மேலும் படிக்க – காற்று மாசை குறைக்கும் வெங்காயம் பயன்படுத்துங்க

பற்கள் பாதுகாப்பு

நம் விளம்பரங்களில் பார்ப்பதைப் போல் ஒரு துளி கிராம்பு எண்ணெய்யை உங்கள் பற்களை வலிமையாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்கிறது. பல் வலி மற்றும் ஈறுகளில் வலி உள்ளவர்கள் கிராம்பு பொடி மூலமாக பல் துலக்கினால் அவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதைத் தவிர்த்து உங்களுக்கு ஏற்படும் சிறிய தலைவலி பிரச்சனைைகளை உடனடியாக குணப்படுத்தலாம். எனவே இதன் அருமையை அறிந்து இதை உணவில் இருந்து தூக்கி எறியாமல் அதை மென்று சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்தை வலுப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன