தைராய்டினால் ஏற்படும் நன்மைகள்..!

  • by
health benefits of thyroid

தைராய்டு சுரப்பியின் வேலை என்னவென்றால் நம் உடலில் உள்ள ஹார்மோன்களை சுரக்கச் செய்து ஒவ்வொரு செல்களுக்கும் அதை செலுத்தி சரியாக வேலை செய்ய வைப்பதே தைராய்டு சுரப்பிதான். இது எல்லோருக்கும் மிக அவசியமான ஒன்று இது உங்கள் தொண்டை பகுதிக்கும், சுவாச பகுதிக்கும் இடையே வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மற்றும் ரத்தத்திலுள்ள அயோடினை தனியாக பிரித்து டி 3, டி 4 என இரண்டு வித ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு மிக அவசியம்

கர்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு சுரப்பி சீராக இருப்பதினால் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரிதாக உதவுகிறது. கரு வளர்வது முதல் மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, தசை உறுதி மற்றும் புத்திக்கூர்மை என எல்லாவற்றுக்கும் தைராய்டு சுரப்பி தேவைப்படுகிறது.

மேலும் படிக்க – அரளிப் பூக்களில் இருக்கும் நன்மை மற்றும் தீமைகள்..!

சக்திகளைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சி அடையும்

கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் இதர கொழுப்பு சக்திகளின் வளர்சிதை மாற்றத்தின் பணிகளை ஊக்குவித்து உடல் வளர்ச்சியைத் தூண்டும். சிறுகுடலில் உள்ள குளுக்கோஸை இரத்தத்தில் கலப்பதும் அதேபோல் ரத்தத்தில் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

வளர்ச்சிக்கு அவசியம்

மனித உடலுக்கு தேவையான வெப்பத்தை அதிகரித்து அதை சமநிலையில் வைக்கிறது. உங்களுக்கு தைராய்டு பிரச்சனைகள் இருந்தால் முதலில் உடல் சோர்வடையும், முகம், உடல் வீக்கம் அதிகரிக்கும், ஞாபக மறதி, அதிக அளவில் துவக்கம், மாதவிலக்கு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சனை, மூட்டுவலி போன்ற போன்றவைகள் ஏற்படும்.

ஒரு சில உணவுகளின் மூலமாக நமக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சனைகளை அடியோடு அழிக்க முடியும். எனவே அந்த உணவுகள் மற்றும் உணவுப்பொருட்களை கீழே காணலாம்.

பால் பொருட்கள்

கொழுப்புகள் குறைக்கப்பட்ட பால் நாம் தினமும் அருந்துவதினால் நம் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் அயோடின் அதிகமாக சேருகிறது. அதுமட்டுமல்லாமல் பாலில் இருக்கும் கால்சியம் நமக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சினையை தவிர்க்க உதவுகிறது. ஒரு கப் பாலில் மூன்றில் ஒரு பங்கு அயோடின் இருப்பதினால் நம்முடைய உடல் நிலையை சீராக வைத்துக் கொள்கிறது.

செலினியம் சத்து

செலினியம் குறைபாட்டினால் தைராய்டு பிரச்சனை அதிகளவில் ஏற்படும். எனவே செலினியம் உள்ள உணவுகளான காளான் மற்றும் பூண்டுகளை நம் அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதன் மூலமாக உங்கள் உடலில் செலினியம் சக்தி அதிகரித்து தைராய்டு பிரச்சனையை தவிர்க்கும்.

மேலும் படிக்க – அன்னாச்சி பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்..

பசலைக்கீரை

நம் உடலுக்குத் தேவையான பல விதமான அமினோ அமிலங்கள் பசலைக்கீரையில் அதிகமாக உள்ளது. அதைத் தவிர்த்து பல்வேறு விதமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துக்கள் இருப்பதினால் உங்கள் உடலுக்கு நன்மையை தருகிறது. அதுமட்டுமில்லாமல் தைராய்டு நோயை வரவிடாமல் பார்த்துக் கொள்கிறது.

முட்டை மற்றும் உருளைக்கிழங்கு

மிக எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகள் தான் முட்டை மற்றும் உருளைக்கிழங்கு. முட்டையில் நம் உடலுக்குத் தேவையான புரதம் அதிகமாக இருக்கிறது. அதை தவிர்த்து இதில் இருக்கும் மஞ்சள் கரு நம்முடைய எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக்கும், எனவே இதை எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சனைகலிருந்து விலகி இருக்கலாம்.

அதேபோல் உருளைக்கிழங்கில் அதிக அளவில் கலோரிகள் இருக்கிறது. இதில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இருப்பதினால் தைராய்டுக்கு சிறந்த உணவாகும்.

தானியங்கள்

தானியங்களான ஓட்ஸ், பார்லி, சிகப்பு அரிசி போன்றவைகளில் அதிக அளவிலான வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. உங்கள் உடலில் மெட்டபாலிசத்தை சமநிலைப்படுத்தி தைராய்டு சுரப்பி சுரக்க உதவுகிறது.

கடல் உணவுகள்

கடல் உணவுகளான மீன் மற்றும் நண்டு களில் ஏராளமான போலிக் அமிலம் இருக்கிறது. அதை தவிர்த்து நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் இருப்பதினால் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாகும். அதேபோல் தைராய்டு வராமல் பார்ப்பதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் “பட்டர் ஃப்ரூடில்” இருக்கும் நன்மைகள்..!

தேங்காய் எண்ணெய்

தைராய்டு பிரச்சனை வர விடாமல் தடுப்பதற்கு நாம் முடிந்தவரை தேங்காய் எண்ணெயில் சமைக்கலாம். இதில் பூஞ்சைகள் எதிர்பார்ப்பு இருக்கிறது, அதை தவிர்த்து நாம் எடுத்துக்கொள்ளும் உணவை மிக எளிதில் ஜீரணமாக உதவுகிறது. இதனால் தேங்காய் எண்ணெயில் சமைக்கும் பெரும்பாலானோருக்கு தைராய்டு பிரச்சினை ஏற்படுவதில்லை.

இதைத் தவிர்த்து பிரக்கோலி, பெர்ரி பழங்கள் போன்றவைகளை உணவில் சேர்ப்பதன் மூலமாக நமது உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமில்லாமல் தைராய்டு பிரச்சனை ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. எனவே இது எளிதில் எடுத்துக் கொள்ளாமல் உங்கள் உணவுகளில் இதை சேர்த்து தைராய்டு இருந்து விடுதலை பெறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன