திருநீற்றுப்பச்சிலை நமக்கு இவ்வளவு நன்மைகளை தருகிறதா..!

  • by
health benefits of Thiruneetrupachilai

தமிழகத்தில் உள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக ஏராளமான மூலிகைச் செடிகள் மற்றும் இலைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதைத் தவிர்த்து தங்கள் உணவுகளிலும் ஏராளமான மூலிகை பொருட்களை சேர்த்துக் கொள்கிறார்கள், இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் பயன்படுத்தக் கூடிய மேலும் ஒரு அற்புதமான மூலிகை செடி எதுவென்றால் அது தான் திருநீற்றுப் பச்சிலைச் செடி. சாதாரணமாக ஒரு செடியில் இருக்கும் பூக்கள் மணக்கும் ஆனால் இந்த திருநீற்றுப்பச்சிலையின் இருக்கும் இலையில் கூட அருமையான நறுமணம் கொண்டிருக்கிறது.

சருமத்திற்கு சிறந்தது

திருநீற்றுப்பச்சிலையை நன்கு அரைத்து அதை முகப் பருக்கள் இருக்கும் இடத்தில் தடவுவதன் மூலமாக உங்கள் பருக்கள் உடனடியாக செயலிழக்கும். அதேபோல் தீக்காயம், கட்டிகள் போன்றவைகள் ஏதேனும் உங்கள் சருமத்தில் இருந்தால் அதன் வலிகளை குறைத்து உடனடியாக குணப்படுத்தும் தன்மை இந்த திருநீற்றுப்பச்சிலைக்கு உண்டு.

மேலும் படிக்க – கொரானா குறித்த புரளியும் உண்மையும் அறிவோம் !

சுவாசப் பிரச்சினை

திருநீற்றுப் பச்சிலையை நாம் சாதாரணமாக முகர்ந்து பார்த்தாலே நமக்கு உண்டான மூக்கடைப்பு மற்றும் அனைத்து விதமான சுவாசப் பிரச்சனயும் தீர்க்கும். உங்களுக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றாலும் இந்த இலையின் சுவாசத்தை நுகர்ந்து விட்டு தூங்கச் சென்றால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். இந்த இலை சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு உண்டான மார்புச்சளி, இருமல், தும்மல் போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் தீரும்.

எதிர்ப்பு மருந்து

திருநீற்றுப் பச்சிலையை அப்படியே மென்று சாப்பிடுவதன் மூலமாக வாய்க்கெடுப்பு பிரச்சனைகள் சரியாகும். அதைத் தவிர்த்து தேள் கடித்த இடத்தில் இந்த பச்சிலை சாறினை போடுவதன் மூலமாக இது எதிர்ப்பு மருந்தாக செயல்பட்டு விஷத்தை முறிக்கும், அதைத் தவிர்த்து வலியை குறைத்து மிக விரைவில் குணமாக்க உதவும். காது வலி உள்ளவர்கள் இந்த இலையின் சாற்றை ஒரு துளி காதில் விட்டால் போதும் உடனே உங்கள் வலி பிரச்சினை குறைந்து முழுமையாக குணமடையலாம்.

மேலும் படிக்க – வைட்டமின் மற்றும் புரோட்டின்களில் இருக்கும் வித்தியாசம்..!

சுறுசுறுப்புக்கு சாறு

திருநீற்றுப்பச்சிலையின் சாரை கசாயமாக செய்து குடிப்பதன் மூலமாக நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இதை தவிர்த்து கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியை இந்த பச்சிலை சாறை கொண்டு குறைக்க முடியும். அதேபோல் பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் வலியையும் குறைக்க இந்த சாறை பயன்படுத்தலாம். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் உடல் சூடு போன்றவற்றை குறைப்பதற்காக இந்த பச்சை இலை சாறுடன் சப்ஜா விதையை சேர்த்து குடிக்க வேண்டும்.

இதை சாறாகவும் அருந்தலாம் இல்லையெனில் சருமத்தின் மேல் தடவி காயங்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இது உங்களுக்கு ஏராளமான நன்மைகளை இந்த இலையின் சாறு தருகிறது. இதை நன்கு அறிந்து திருநீற்றுப் பச்சிலையை வீணாக்காமல் பயன்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன