சன் பாத் எடுப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of taking sun bath

தினமும் காலையில் 10 நிமிடங்கள் சூரியனின் முன் நிற்பதன் மூலமாக உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. சூரிய ஒளியில் வைட்டமின் டி இருப்பதினால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் சூரிய ஒளியின் மூலமாக உங்களுக்கு கிடைக்கின்றன. இதனால் ஆண், பெண் என பாராமல் அனைவரும் அதிகாலையில் சூரிய வணக்கம் அல்லது சூரியனின் வெளிச்சத்தில் அமர்ந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை தியானம் செய்தால் உங்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகள் தீர்வாகும்.

மன அழுத்தத்தைப் போக்கும்

மன அழுத்தம் உள்ளவர்கள் அதிகாலையில் சூரிய வணக்கம் அல்லது சூரியனின் முன் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்கள் மனம் ஒருநிலை அடைந்த மனப் பதட்டம், மன பிரச்சனை, மன அழுத்தம் போன்ற அனைத்தையும் குறைத்து விடும். இதன் மூலமாக உங்கள் செயலில் நீங்கள் முழு கவனத்தை செலுத்த முடியும்.

மேலும் படிக்க – ஹைபிரிட் காய்கறிகளை தவிர்த்து இயற்கை உணவை சாப்பிடுங்கள்..!

தூக்கப் பிரச்சினைகள்

இரவில் சரிவர தூக்கம் வராமல் இருப்பவர்கள் காலையில் சூரியக் குளியலை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக உங்கள் மனம் அமைதியடைந்து இரவில் ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்கும். இதை அக்கால மனிதர்கள் பின் தொடர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.

எலும்புகளை உறுதியாக்கும்

அதிகாலையில் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கப்படும் சக்திகள் உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதைத் தவிர்த்து உங்கள் உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்கி உங்களை வலுவாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

சூரிய ஒளி நம் மேல் படுவதன் மூலமாக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதிகாலையில் உருவாக்கும் சூரிய ஒளி எந்த ஒரு தீங்கையும் நமக்கு உருவாக்காது. எனவே அது நம்மில் படுவதன் மூலமாக நம்முடைய உடலில் ஒரு விதமான ரசாயனம் உண்டாகி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – கொரானாவால் ஸ்தம்பிக்கும் தினசரி வாழ்வு

சுக பிரசவத்திற்கு உதவும்

கர்ப்பிணிப் பெண்கள் அதிகாலையில் சூரிய ஒளியின் முன் நிற்பது மூலமாக அவர்களுக்கு பிரசவ சமயத்தில் ஏற்படும் வலிகள் குறையும். அதைத் தவிர்த்து சுகப் பிரசவமாகும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. எனவே தினமும் செய்யப்படும் சில நிமிட உடற்பயிற்சியினால் உங்களுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும்.

உங்கள் உடலில் இருக்கும் குறைகள் அனைத்தையும் அகற்றி உங்கள் சருமத்தை வலுவூட்ட அதிகாலையில் உருவாக்கும் சூரிய ஒளி உதவுகிறது. எனவே இயற்கையினால் கிடைக்கப்படும் இந்த அற்புத சக்தியை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை அழகாக்குங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன