சுக்கு சாப்பிட்டால் சிக்க்ன்னு கிக்கா வாழலாம்..!

health benefits of eating sukku

ஒருகாலத்தில் தெருவோரங்களில் ஒரு சிறு தொழிலாளி சுக்கு காபியை விற்று வருவார். அதை ஒரு மருந்தாகவே நாம் பார்த்து அதை சாப்பிடுவதை தவிர்த்து வந்தோம். ஆனால் சுகில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன, இதை தினமும் சாப்பிட்டு வருவதுனால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறது.

பல பிரச்சனைகளுக்கு ஒரே மருந்து

பித்தம் உள்ளவர்கள் சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடிப்பதால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பித்தம் விலகும். கடும் சளி உள்ளவர்கள் சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி மற்றும் சித்திரத்தை ஒன்றாக சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சளியை குறைத்து சுவாசத்தை சீராக்கும்.

மேலும் படிக்க – புடலங்காய் சாப்பிட்டு வந்தால் பலம் பெறலாம்!

வாயு பிரச்சனையை தீர்க்கும் சுக்கு

சுக்குடன் வெற்றிலை சேர்த்து மென்று சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வாயு பிரச்சனை மிக விரைவில் குணமாக்கும். சுக்கு மற்றும் வேப்பம் பட்டையை ஒன்றாக சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் ஆரம்பகால வாத நோய் குணமாகும்.

சுறுசுறுப்பாக இருப்பதற்கு சுக்கு கருப்பட்டி மற்றும் மிளகை ஒன்றாக சேர்த்து கசாயம் செய்து குடித்தால் உங்கள் உடலில் இருக்கும் சோர்வுகள் வெளியேறி எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

போதை தீர்க்கும் சுக்கு

போதையில் இருப்பவர்கள் உடனடியாக போதை தெளிய வேண்டும் என்றால் அவர்கள் நீராடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இதற்கு மிக எளிமையான வழியைத் சுக்கு தருகிறது. சுக்குடன் தனியாவைத்து மையாக அரைத்துக் கொண்டு அதை சாப்பிடால் உடலில் இருக்கும் போதைகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

சுக்குடன் சிறிது துளசி இலையை சாப்பிட்டு வந்தால் தொடர் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனை தீர்வாகும்.சுக்குடன் சிறிது வெந்தயம் சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அலர்ஜி தொல்லை அடியோடு விலகும்.

மேலும் படிக்க – உலர்திராட்சையில் உள்ள சத்துக்கள்

மாந்தத்தை குணப்படுத்தும்

சுக்கு, மிளகு, சீரகம் மற்றும் பூண்டை ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கி அதை காலை மற்றும் மாலை இரு வேளைகள் குடித்து வந்தால் உங்களுக்கு இருக்கும் மாந்தம் பிரச்சினையை தீர்த்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

மூலநோய் உள்ளவர்கள் சுக்குடன் கொஞ்சம் கொத்தமல்லியை சேர்த்து கசாயம் செய்து குடிப்பது நல்லது. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

சுக்கு மிளகு பூண்டு மற்றும் வேப்ப இலையை ஒன்றாக சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் விஷக்காய்ச்சல் ஏதேனும் இருந்தால் உடனே குணமாகும்.

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த மருத்துவ வெட்டி வேர்

சுக்கின் மற்ற பயன்கள்

தொண்டை பிரச்சனை உள்ளவர்கள் சுக்குடன் மிளகு, சுண்ணாம்பு இவைகளை ஒன்றாக அரைத்து தொண்டை பகுதியில் தேய்த்து வந்தால் குரல் வளம் அதிகரித்து தொண்டை பிரச்சனைகள் தீர்வடையும்.

சுக்கு மிளகு சீரகத்தை எண்ணெயில் போட்டு தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வந்தால் நீர்க்கோவை நீங்கி, ஈர், பேன் பொடுகு என அனைத்தும் ஒழியும்.

வலி நிவாரணம் தரும் சுக்கு 

சுக்குடன் சிறிது நீர் சேர்த்து மையாக அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி நீங்கும். சுக்குடன் சிறிது பால் சேர்த்து நன்கு சூடாக்கி அது இளஞ்சூடு வரும்வரை ஆறவைத்து அதை வலியுள்ள கை, கால், மூட்டுகளில் தடவினால் வலி நிவாரணம் கிடைக்கும்.

சுக்குடன் சேர்த்து பல்துலக்கி வந்தால் உங்கள் பல் வலி குணமடையும் அதை தவிர்த்து ஈறுகள் பலம் பெற்று துர்நாற்றம் விலகும்.

இத்தனை மருத்துவ குணங்களைக் கொண்ட சுக்குகளை பயன்படுத்தி நாம் மிக ஆரோக்கியமாக வாழமுடியும். இதன் மூலமாக நமக்கு இருக்கும் சருமம் பிரச்சனைகள் முதல் உள் உறுப்பு பிரச்சனைகள் வரை அனைத்தையும் தீர்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன