சின்ன வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of small onions

நாம் சமைக்கும் சாம்பாரில் மற்றும் பழைய சாதத்திற்கு பச்சையாக கடித்து தின்ன பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. இதை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலமாக நமக்குக் கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

சின்ன வெங்காயத்தில் இருக்கும் சக்திகள்

இதில் புரதம், கொழுப்புச் சத்து, நார்ச் சத்து, மாவுச் சத்து, தாது சத்துக்கள் போன்றவை அதிக அளவில் இருக்கின்றன.

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரகம் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருப்பவர்கள் சின்ன வெங்காயத்தை பச்சையாக மென்று சாப்பிடலாம். இதன் மூலமாக சிறுநீர் எந்த ஒரு தடையும், வலியும் இல்லாமல் வெளியேறும்.

மேலும் படிக்க – ஆவியில் வேகவைத்து சாப்பிடும் உணவுகளில் இருக்கும் ஏராளமான நன்மைகள்..!

உடல் சூட்டைத் தடுக்கும்

கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் சூட்டை தடுப்பதற்காகவே நம் முன்னோர்கள் சின்ன வெங்காயத்தை பழைய சாதத்துடன் கலந்து சாப்பிடுவார்கள். எனவே இதை நாம் சமையலில் பயன்படுத்துவதன் மூலமாக நமது உடம்பில் ஏற்படும் உஷ்ணங்கள் அனைத்தும் விலகும்.

ரத்தசோகை

இப்போது இருக்கும் இளம் பெண்களுக்கு அதிகளவில் இருக்கும் பிரச்சினை இரத்தசோகை. அவர்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதினால் அவர்களின் ரத்தம் ஆற்றல் இல்லாமல் அவர்களின் உடல் வலுவிழக்கிறது. எனவே சின்ன வெங்காயத்தை வதக்கி சாப்பிடுவதன் மூலமாக அவர்களுக்கு உண்டாகும் இரத்த சோகை பிரச்சனை தீர்வு அடையும்.

கட்டிகளை அகற்றும்

வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடுவதன் மூலமாக அவர்களுக்கு நீர்க்கடுப்பு அகலும். வெயிலினால் ஏற்படும் கட்டிகள் மற்றும் அரிப்பு உள்ள இடங்களில் சின்ன வெங்காயத்தை நசுக்கி சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தேய்த்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

என்றும் இளமை

சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்கள் முக சுருக்கங்கள் அனைத்தும் விலகி என்றும் இளமையாக இருக்க முடியும்.

இன்சுலின் சுரப்பை சரி செய்யும்

கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதில்களில் அழுக்குகள் சேர்ந்து இருந்தால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படும். எனவே சின்ன வெங்காயத்தை உட்கொள்வதன் மூலமாக அதை இயல்பான நிலைக்கு மாற்றி உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரும்.

மேலும் படிக்க – செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பித்தங்களை போக்கும்

பித்தம் அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை, வாந்தி, மயக்கம் மற்றும் மூல நோய்கள் ஏற்படும். எனவே இதைத் தடுப்பதற்கு சின்ன வெங்காயத்தை சாப்பிடுங்கள். இதனால் கல்லீரலில் உள்ள பித்தத்தை குறைத்து வயிற்றுப் புண், கண் நோய், வெள்ளைப்படுதல் போன்றவைகளை குணப்படுத்தும்.

எனவே உங்கள் சருமம் மற்றும் கூந்தல் அழகை அதிகரிப்பதற்கும் சின்ன வெங்காயம் பயன்படுகிறது இதை தலையில் தேய்த்து குளிக்கலாம், இல்லையெனில் உணவாகவும் சேர்த்துக்கொள்ளலாம் எனவே இத்தகைய பல பண்புகளைக் கொண்ட சின்ன வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன