தூங்குவதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..!

  • by
health benefits of sleeping to improve immunity

நாம் தினமும் செய்யப்படும் ஒரு சில செயல்களின் மூலமாகவும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். எல்லா உயிரினங்களும் தினமும் எடுத்துக்கொள்ளும் மிக முக்கியமான ஒரு உடற்பயிற்சி தான் தூக்கம். ஆம் சரியான நேரத்தில் சரியான அளவு தூங்குவதன் மூலமாக உங்கள் உடலில் ஏராளமான நன்மைகள் நடக்கிறது. இது அனைத்திற்கும் மேலாக உங்கள் உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தியை இந்த தூக்கம் தருகிறது. தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் 8 மணி நேரம் தூக்கம் ஒன்றே நம் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு போதுமானதாக அமைகிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

தூங்குவதனால் உங்கள் மனது அமைதி நிலைக்கு திரும்பும், அதைத் தவிர்த்து மனப்பதற்றம் மற்றும் மனக் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் தன்மை தூக்கத்திற்கு உண்டு. இதன் மூலமாக உங்கள் மூளையின் செயல்பாட்டு சீராகி, உங்கள் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். இனிமேல் உங்களுக்கு அதிக ஆற்றல் மற்றும் போதுமான அளவு ஞாபக சக்தி தேவை என்றால் தினமும் சரியான அளவு தூக்கத்தை மேற் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – அருகம்புல் சாறின் பயன்கள்..!

நோய் எதிர்ப்பு சக்தி

தூக்கமானது உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும். இதனால் உங்களுக்கு இரத்த கொதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அனைத்தும் குறையும். தூங்குவதன் மூலமாக உங்கள் உடலில் போதுமான அளவு புரோட்டின் சுரக்கிறது. எனவே இது உங்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. அதேபோல் சளி, இருமல் போன்ற சிறிய பிரச்சினைகள் உண்டாகாமல் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்கும்

நாம் உணவுகளை அருந்திய அடுத்த 45 நிமிடத்திற்குப் பிறகு தூங்குவதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் குறையும் வாய்ப்புள்ளது. உங்கள் உணவுகளை ஜீரணமானா பிறகு உறங்குவதன் மூலமாக உங்கள் உடல் எடை குறையும். போதுமான தூக்கமானது உங்கள் மனதை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளும், இதனால் நீங்கள் கோபம் மற்றும் வருத்தங்கள் கொள்ளாமல் எப்போதும் தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

மேலும் படிக்க – கொரானா குறித்த புரளியும் உண்மையும் அறிவோம் !

நீரிழிவு நோயைத் தடுக்கும்

போதுமான அளவு தூக்கத்தினால் உங்கள் இருதயம் பலமடங்கு ஆரோக்கியமாகும். இதன்மூலமாக அதன் செயல்பாடு சீராகி இருதயப் பிரச்சினை ஏதும் உண்டாகாமல் தூக்கம் பார்த்துக் கொள்கிறது. அதேபோல் சரியாக உறங்குபவர்களுக்கு நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் குறைகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தூக்கமானது உங்கள் உடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும். நம் உடல் மற்றும் மனம் எப்போதெல்லாம் வலியை உணர்கிறதோ அப்போதெல்லாம் தூக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தூங்கி எழுந்த பிறகு உங்களின் மூளையின் ஆற்றல் மிகவும் வலுவாக இருக்கும். எனவே அச்சமயங்களில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் சரியாக அமையும். எனவே மிக எளிமையான முறையில் செய்யப்படும் இந்த தூக்கம் பயிற்சி உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும். இதனால் இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் சரியான நேரத்தில் உறங்குவதை கடமையாக்கிக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன