சப்போட்டா பழத்திலுள்ள சாப்டான குணநலன்கள்

  • by

உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாம் ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மாதுளம் பழத்தைத் தான் அதிகமாக உட்கொள்கிறோம் ஆனால் இவை அனைத்திற்கும் நிகராக சப்போட்டா பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சப்போட்டா பழத்தில் வைட்டமின்கள் மற்றும் சத்துப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.

சப்போட்டா பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் இருக்கும் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. அது மட்டுமல்லாமல் இரத்த நாளங்களை சீராக்க உதவுகிறது. தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தீர்த்து வைக்கிறது.

மேலும் படிக்க – கோவைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

கொழுப்புகள் அதிகம் அடைவதனால் உங்கள் உடலில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் கொழுப்புகள் ஏற்பட்டு உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சப்போட்டா பழம் சாப்பிடுவதன் மூலம் நம்மால் தடுக்க முடியும். வயிற்றுப்போக்கு பிரச்சினை உள்ளவர்கள் சப்போட்டா பழச்சாறுடன் பால் கலக்காத தேநீரை சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக உங்களின் வயிற்றுப்போக்கு குணமாகும்.

சப்போட்டா பழ சாறு உங்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சினைகளை போக்கிறது. அதை தவிர்த்து கோடை காலங்களில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தடுக்கிறது. அதேபோல் தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் தூங்குவதற்கு முன்பு சப்போட்டா பழத்தை சாப்பிட்டால் உங்களுக்கு ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வரும்.

ஆரம்ப காலத்தில் இருக்கும் காசநோயை சப்போட்டா பழம் மற்றும் ஒரு நேந்திரம்பழத்தை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இந்நோயை நம்மால் குணப்படுத்த முடியும். அதே போல் உங்கள் உடலில் இருக்கும் பித்தங்களை குறைக்கவும். சப்போட்டா பழச்சாறு குடித்து விட்டு சிறிதளவு சீரகத்தை மென்று சாப்பிட்டால் பித்த மயக்கம் ஏற்படாது. அதேபோல் சப்போட்டா கூழுடன் சுக்கு சீரகம் பொடி மற்றும் கருப்பட்டியை நன்கு காய்த்து குடித்தால் சாதாரண காய்ச்சல் உடனடியாக குணமாகும்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்படாது. அது மட்டுமல்லாமல் உங்கள் மேனியை இது பளபளப்பாக வைத்துக் கொள்கிறது. சப்போட்டா பழத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் சளி இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

மேலும் படிக்க – தினமும் உணவில் பீட்ரூட் சேர்ப்பதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்.!

சப்போட்டா பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், கனிமச் சத்துகள் இருப்பதனால் இது உங்கள் எலும்புகளை வலுவாக்குகிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட சப்போட்டா பழத்தை நாம் தினமும் அருந்துவது நல்லது. இது மற்ற பழங்களை விட விலையும் குறைவானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன