சப்ஜா விதையின் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of sabja seeds

சமீப காலமாகவே நாம் விரும்பி வாங்கி சாப்பிடக்கூடிய பலுடாவில் மற்றும் நன்னாரி சர்பத்தில் அதிகமாக சேர்க்கப்படுவது இந்த சப்ஜா விதைகள் தான். இதை சாப்பிடுவதன் மூலமாக நமது உடல் குளிர்ச்சி அடைந்து தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. இதைத் தவிர்த்து இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது அதை இங்கே காணலாம்.

பித்தத்தை குறைக்கும் சப்ஜா விதை

சப்ஜா விதைகளை நாம் சிறிதளவு நீரில் போட்டு ஊறவைத்தால் அது நீர் சக்தியை உறிஞ்சி பெரிதாக உருவெடுத்து சாப்பிடுவதற்கு உகந்ததாக மாறும். இதை நீரில் கலந்து அப்படியே சாப்பிடுவது மூலமாக உங்கள் உடல் சூட்டை தனித்து பித்தத்தை குறைக்கும்.

மேலும் படிக்க – விந்தணு குறைபாட்டிற்க்கு வித்திடும் காரணங்களும், தீர்வுகளும்..!

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும்

சப்ஜா விதையில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை தினமும் ஒரு தேக்கரண்டி நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் உங்கள் சர்க்கரை அளவு சீராகி உடல் எடையை சமமாக வைத்துக் கொள்ளும்.

நெஞ்சு எரிச்சலைத் தடுக்கும்

சப்ஜா விதை சாப்பிடுவதன் மூலமாக உங்களின் ஜீரண சக்தி அதிகரிக்கும், அதை தவிர்த்து அதிக காரம் மற்றும் மசாலாகளினால் ஏற்படும் நெஞ்சு எரிச்சலை குறைத்து உங்கள் உணவை எளிதில் ஜீரணமாக்கிறது. இது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைக்கு தீர்வாக உள்ளது.

பெண்கள் ஆரோக்கியம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை தடுப்பதற்கு தினமும் சிறிதளவு சப்ஜா விதையை பாலில் கலந்து சாப்பிடலாம். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை சப்ஜா விதையை சாப்பிடுவதன் மூலமாக குணப்படுத்தலாம்.

மேலும் படிக்க – கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்???

சிறுநீரக பாதுகாப்பு

சிறுநீரக பாதையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவைகளை குணப்படுத்தும். அதைத் தவிர்த்து சீதோஷ்ண நிலை மாற்றத்தினால் உடலில் ஏற்படும் சூட்டை இது குறைக்கிறது.

சப்ஜா விதைகள் உடல் சூட்டை குறைப்பது மட்டுமில்லாமல் நமக்கு பல நன்மைகளை தருகிறது. எனவே இதை வாங்கி வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன