ரோஜா எண்ணெய் பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of rose oil

பல ஆய்வுகளில் ரோஜா எண்ணெய் முகர்வதின் மூலமாக நம்முடைய மன வலி மற்றும் உடல் வலி விலகுகிறது என்கிறார்கள். இதைத் தவிர்த்து இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அது என்னவென்றே இப்பதிவில் காணலாம்.

வலி நிவாரணம்

ரோஜா பூக்களே முகர்வதன் மூலமாக ஒரு விதமான ரசாயனங்கள் உங்கள் மூளைக்கு சென்டைகிறது. இதன் மூலமாக உங்கள் உடல் மற்றும் மன வலியை குறைத்து, உங்கள் சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கிறது. அறுவை சிகிச்சைகள் செய்த நோயாளிகளுக்கு ரோஜா எண்ணையை நுகர்வதற்கு அளிப்பார்கள், இதனால் அவர்களுக்கு வலி நிவாரணம் கிடைக்கும்.

மேலும் படிக்க – குழந்தைகள் விளையாடுவதற்காக ரிமோட்டை கொடுக்கும் பெற்றோர்களா நீங்கள்??? உஷார்!

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் சமயங்களில் உங்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதற்கான ரோஜா எண்ணெயை அடிவயிற்றில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வலி குறைந்து சௌகரியமாக உணர்வீர்கள். ரோஜா எண்ணெயுடன், பாதாம் எண்ணெய்யை சேர்த்து தடவினால் நிவாரணம் மிக விரைவில் கிடைக்கும்.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்

மூச்சுத்திணறல், இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் ரோஜா எண்ணெயை உடலில் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. இதனால் உங்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைத்து அதன் சுவாசத்தை அதிகரிக்கும்.

பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை குறைக்கும்

உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு காரணம் தீய பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள். இதை வளர விடாமல் ஆரம்பத்தில் அழிக்கக்கூடிய தன்மை ரோஜா எண்ணெய் உள்ளது. தொண்டையில் ஏற்படும் பாதிப்புகளை கூட ரோஜா எண்ணெய் தேய்ப்பதன் மூலமாக நிவாரணம் அடையும்.

உடலுறவை அதிகரிக்கும்

முதலிரவு நடக்கும் போது படுக்கை முழுவதும் ரோஜா பூக்களை தூவுவதற்கான காரணம் உங்களுக்கு தெரியப் போகிறது. ரோஜா எண்ணெய் நுகர்வதன் மூலமாக உங்களுக்கு உடலுறவு கொள்ளும் ஆசையை அதிகரிக்கும். எனவே ஆண், பெண் இருவருக்கும் இந்த எண்ணத்தை ஊக்குவித்து வெற்றிகரமான உடலுறவை மேற்கொ ள்ள வழிவகுக்க இந்த எண்ணெய் உதவுகிறது.

நகம் புருவம் சுருக்கம்

ரோஜா எண்ணெயின் மூலமாக உங்கள் நகத்தை பளபளப்பாகவும், உறுதியாகவும் வளர்க்க முடியும். அடர்த்தியான புருவம் வேண்டுமென்றால் ரோஜா எண்ணெய்யை உங்கள் புருவத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். அதேபோல் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை உடனடியாக நீக்கவேண்டும் என்றால் ரோஜா எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் “பட்டர் ஃப்ரூடில்” இருக்கும் நன்மைகள்..!

ரோஜா எண்ணெய் செய்வது எப்படி

நமக்கு விருப்பமான ரோஜா இதழ்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதி அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த கண்ணாடி பாட்டிலில் உள்ள ரோஜா இதழ்களை போட்டு மூடிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்கவைக்க வேண்டும். பிறகு கண்ணாடி பாட்டிலை அப்படியே அந்த வானொலியில் இருக்கும் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். நெருப்பைக் குறைத்து 15 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும் பிறகு அந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து 7 நாட்களுக்குப் பிறகு அதில் இருக்கும் எண்ணையை வடிகட்டினால் ஆரோக்கியமான ரோஜா எண்ணெய் கிடைக்கும்.

எனவே உங்கள் சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகளவு உதவியாக இருக்கும் இந்த ரோஜா எண்ணெயை வீட்டில் எளிமையாக செய்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன