கல் உப்பை பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of rock salt

நம் முன்னோர்கள் சமையலுக்கு அதிகளவில் பயன்படுத்தி வந்ததுதான் இந்த கல்லுப்பு. மேலை நாட்டுப் பழக்க வழக்கங்களை நாம் கடைப்பிடித்து அயோடின் உள்ள உறுப்புகளை பயன்படுத்துகிறோம். அயோடின் உப்பு பலமுறை சுத்தப்படுத்தி அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தையும் நீக்கிய உப்புகளாகும். இதைத் தவிர்த்து நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த கல் உப்பை இப்போது நாம் பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

செரிமானத்திற்கு உதவும்

கல் உப்பை நாம் உணவில் பயன்படுத்தி சாப்பிடுவதன் மூலமாக நமக்கு ஏற்படும் வயிற்று பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை அனைத்தும் தீரும். இதைத் தவிர்த்து நம்முடைய உணவுகள் மிக எளிதில் ஜீரணமாகி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – கரோனாவிற்க்கு மருந்து….! மாற்றி யோசிக்கும் அமெரிக்கா!

காற்றை சுத்தப்படுத்தும்

கல் உப்பை நாம் திறந்த வெளியில் நம் சமையலறையில் வைப்பதன் மூலமாக நம் சமையல் அறையில் உள்ள காற்றை சுத்தப்படுத்தும். இதன் மூலமாக ரசாயனங்கள் மற்றும் எரிபொருள்களினால் ஏற்படும் மூச்சுத்திணறல் போன்ற அனைத்தையும் தவிர்த்து உங்கள் சமையலறையை சுத்தமாகவும், அதன் காற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும்.

வளர்சிதை மாற்றம்

கல் உப்பை நாம் சமையலுக்குப் பயன்படுத்துவதினால் நம்முடைய உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்றத்தை சமமாக வைத்துக் கொள்ளலாம். நம் உடலில் உள்ள எல்லா செல்களையும் ஆரோக்கியமாகவும் அதன் தன்மையை சரியாக செய்ய உதவுவது இந்த கல்லுப்பு. இது அனைத்திற்கும் மேலாக உங்கள் உடலின் செயல்பாட்டை சரியாக செய்ய கல்லுப்பு உங்களுக்கு உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்

உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன் மூலமாக நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

கல் உப்பின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. எனவே உங்கள் உடலில் நோய்த்தொற்றுகள் மற்றும் உடல் குறைபாடுகள் ஏதும் ஏற்படாமல் கல்லுப்பு பாதுகாக்கிறது. நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் இருக்கும் கெட்ட கழிவுகளை போக்கி உங்களுக்கு சக்திகளை அளிக்கும் பண்பு கல்லுப்புக்கு உண்டு.

மூலநோயை குணப்படுத்தும்

கல்லுப்பு நமக்கு உண்டாகும் தொண்டை பிரச்சனை மற்றும் வயிற்று பிரச்சனைகளை போக்கும். அதை தவிர்த்து உடல் சூட்டினால் உண்டாகும் மூல நோயை தடுக்கும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே மூல நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் கல் உப்பை பயன்படுத்துவது சிறந்தது.

மேலும் படிக்க – சன் பாத் எடுப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

மணப் பதட்டத்தை குறைக்கும்

கல்லுப்பு உங்கள் மனப் பதற்றத்தை குறைத்து இரவில் நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கும். எனவே மனப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கல் உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதை தவிர்த்து தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

கல்லுப்பு உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் அதைத் தவிர்த்து பற்கள் மற்றும் கூந்தல் பிரச்சினை உள்ளவர்களும் இதை பயன்படுத்தலாம். இது அனைத்திற்கும் மேலாக சரும பிரச்சனை உள்ளவர்கள் கல் உப்பை சருமத்தில் தேய்த்து அதில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம். எனவே உங்களை ஈரப்பதத்துடன் வைக்கும் கல்லுப்பு உங்கள் சருமம் மற்றும் உடல் உறுப்புகள் என அனைத்திற்கும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன