ராகி மால்டில் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of ragi malt

அக்கால முன்னோர்கள் தாங்கள் ஆரோக்கியமான வாழ்வுக்காக அதிகளவில் பயன்படுத்தி வந்த உனவுதான் கேழ்வரகு. இதன்மூலமாக கேழ்வரகு கூழ், கேழ்வரகு கஞ்சி மற்றும் கேழ்வரகு அடை போன்றவர்களை சமைத்து உட்கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது இதன் பயன் வெகுவாக குறைந்துள்ளது. இருந்தாலும் ராகி மூலமாக செய்யப்படும் ராகி மால்ட் என்ற பொடியை பாலில் கலந்து ஒரு சிலர் இன்றும் குடித்து வருகிறார்கள். இந்த ராகி மால்டில் இருக்கும் ஏராளமான நன்மைகளை இந்த பதிவில் காணலாம்.

கால்சியம் சத்துக்கள்

கால்சியம் சத்துக்கள் பால் பொருட்களில் தான் அதிகமாக கிடைக்கும். அதற்கு அடுத்தபடியாக இருப்பது தான் இந்த கேழ்வரகு பானம் அதாவது ராகி மால்ட். இது உங்கள் எலும்புகளை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் எலும்புகளில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் குறைகிறது. எனவே சிறுவர்களுக்கு இந்த ராகி மால்ட் கொடுப்பதன் மூலமாக அவர்களின் எலும்புகள் உறுதியாகும்.

மேலும் படிக்க – இதுவரை உலகில் பரவி உள்ள வைரஸ்களின் வரலாறுகள்..!

நீரிழிவு நோயைத் தடுக்கும்

35 வயதைக் கடந்த பெரும்பாலான ஆண் மற்றும் பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதினால் நீரிழிவு பிரச்சனை உண்டாகிறது. இதைத் தடுக்கும் சக்தி ராகி மால்டிற்கு உண்டு. அதேபோல் உங்கள் உணவுகளை உடனடியாக ஜீரணமாகும் தன்மையும் இதற்கு உண்டு. பசியின்மை போன்ற பிரச்சனைகளை தீர்த்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க ராகிமால்டை குடியுங்கள்.

சரும சுருக்கங்கள்

வயது அதிகரிப்பதனால் உங்கள் சருமம் சுருகிக்கொண்டு வயதான தோற்றத்தை உண்டாக்கும். இதை தவிர்த்து ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே முகங்களில் சுருக்கங்கள் ஏற்படும். இவர்கள் ராகிமால்ட் சாப்பிடுவதன் மூலமாக உங்கள் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின் டி சக்தி உங்கள் சருமத்தையும் மற்றும் உங்கள் தோற்றத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்.

அனீமியவுக்கு தீர்வு

இரும்பு சத்து குறைபாடினால் ஏற்படும் அனீமியா போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் தன்மை ராகி மால்டிற்கு உண்டு. எனவே தினமும் காலையில் ராகிமால்ட் கலந்த பாலை குடிப்பதன் மூலமாக உங்களுக்கு இருக்கும் அனிமியா பிரச்சனை குறையும். உங்கள் ரத்தத்திற்கு தேவையான வெள்ளை அணுக்கள் மற்றும் சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்தசோகையை முழுமையாக குணப்படுத்தும்.

மனதை சாந்தப்படுத்தும்

நாம் தினமும் டீ மற்றும் காபி போன்ற பானங்களை குடித்து நம்முடைய சோர்வை போக்கி வருகிறோம். இதற்கு மாறாக நீங்கள் ராகி மால்டை பயன்படுத்தி பாருங்கள். இது உங்கள் மனதை சுறுசுறுப்பாகவும் மற்றும் எந்த ஒரு பதற்ற நிலையும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும். வேலை நேரங்களில் நீங்கள் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு அமைதியான மனநிலை தேவை, இதை ராகி மால்ட் எளிதில் உங்களுக்கு தருகிறது.

மேலும் படிக்க – பாட்டி வைத்தியத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

உடல் எடையை குறைக்கும்

ராகி மால்ட் உட்கொள்வதினால் எப்படி உங்கள் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவு குறைக்கிறதோ அதேபோல் ரத்தத்தில் படிந்திருக்கும் கொழுப்புகளை அகற்றுகிறது. எனவே உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் உங்கள் உடலை எப்போதும் பார்த்துக் கொள்கிறது. உடல் எடை குறைய வேண்டுமென்பவர்கள் இதை தினமும் அருந்தலாம்.

ராகிமால்ட் எல்லா கடைகளிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள். இதைத்தவிர்த்து உங்கள் வீட்டு அல்லது அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் டீக்கடையில் கூட இது கிடைக்கும். எனவே இதை அருந்தி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன