புற்றுநோயை எதிர்க்கும் ஊதா நிற உருளைக்கிழங்கு.!

health benefits of purple potato and its ability to cure cancer

அசைவ விரும்பிகளுக்கு எப்படி சிக்கன் சாப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறதோ, அதேபோல் தான் சைவ விரும்பிகளுக்கு உருளைக்கிழங்கை தவிர்க்க முடியாத ஒன்றாகவே அவர்கள் வாழ்நாளில் இருக்கிறது. இக்காலத்தில் உருளைக்கிழங்கை வெவ்வேறு விதமாக சமைத்து மிக ருசியாக உட்கொள்கிறார்கள். ஆனால் இதில் இருக்கும் ஆரோக்கிய குணங்களை விட பல மடங்கு அதிகமாக இந்த உருளைக்கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த ஊதா நிற உருளைக்கிழங்கில் இருக்கிறது உடனே அது சக்கரவள்ளி கிழங்கு என்று என்ன வேண்டாம். இது தென்னமெரிக்காவில் அதிகமாக விளைவிக்கப்படும் ஊதா நிற உருளைக்கிழங்கு.

இதில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன அதுமட்டுமல்லாமல். இது உருளைக்கிழங்கு குடும்பத்தை சார்ந்து இருந்தாலும் இதில் கத்தரிக்காய், தக்காளி மற்றும் மெளகு குடும்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது, எனவே இதன் சுவையும் மிகவும் மாறுபட்ட ஒன்றாகவே இருக்கிறது. இது பார்ப்பதற்கு வெளிப்புறத்தில் கருநிறமாக இருக்கும், ஆனால் உள்ளே ஊதா நிறத்தில் தோன்றும் இதன் சுவை மண்வாசனை கூடிய நட்ஸ் சாப்பிடுவது போன்று இருக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதனால் இதன் நிறம் இப்படி உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் படிக்க – தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

ஊதா நிற உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் பி அதிகமாக உள்ளது அதுமட்டுமல்லாமல் புரதம், பொட்டாசியம் மற்றும் சாதாரண உருளைக்கிழங்கை விட நான்கு மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உங்களுக்கு ஏற்படும் பல வியாதிகளில் இருந்து இது காப்பாற்றுகிறது. குளோரோஜெனிக் என்ற கெமிக்கல் இதில் இருப்பதினால் உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல் உங்கள் செல்கள் பாதிப்படையாமல் இது பாதுகாக்கிறது.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தினால் ஆண் மலட்டுத்தன்மை, புற்றுநோய் என ஏராளமான பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் ஊதா உருளைக்கிழங்கை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு மிகப்பெரிய தீர்வாக இருக்கும்.

மேலும் படிக்க – மஞ்சள் பாலில் இத்தனை நன்மைகளா ?

பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய்களை இது வரவிடாமல் தடுக்கிறது. இது மட்டுமில்லாமல் ரத்தத்தில் ஏற்படும் ரத்த உறைவு கட்டிகளையும் இது தடுக்கிறது.

இதை சாப்பிடுவதன் மூலம் இருதய சம்பந்தமான நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்களிலிருந்து நமக்கு தீர்வாக இருக்கும். அதே சமயத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதை நீங்கள் விரும்பியபடி சமைத்து சாப்பிடலாம்.

1 thought on “புற்றுநோயை எதிர்க்கும் ஊதா நிற உருளைக்கிழங்கு.!”

  1. Pingback: நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்க்கு வேப்பிலை காப்பி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன