காசினிக் கீரை என்ற புளிச்ச கீரையில் இருக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of pulicha keerai

அக்கால முன்னோர்கள் வலிமையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுவது அவர்களின் உணவு முறைகள்தான். எனவே இவர்கள் அக்காலத்தில் உணவுகளில் அதிகமாக கீரையை சேர்த்துக் கொள்வார்கள், இதனால் அவர்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இன்றும் ஆரோக்யமாக வாழ்ந்து வருகிறார்கள்.

காசினிக் கீரை

காசினிக்கீரை என்பது புளிச்சைக்கீரையாகும். இதன் பெயரில் இருப்பது போலவே இதில் புளிப்பு தன்மை அதிகமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு சரியான அளவு கொடுப்பதன் மூலமாக அவர்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற அனைத்தும் கிடைக்கிறது. ஆனால் இதை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்க கூடாது, இதில் குளிர்ச்சித் தன்மை அதிகமாக இருப்பதினால் அவர்களுக்கு சளி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். புளிச்ச கீரையில் ஏராளமான தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளது, எனவே முடிந்த வரை கோடை காலங்களில் இதை அதிகமாகப் பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க – கொரோனாவுக்கு மீண்டும் பிசிஆர் சோதனை..!

சரும நோய்

சருமத்தில் உண்டாகும் சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகளை இந்தக் கீரை தடுக்கிறது. எனவே இந்தக் கீரையில் சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கு நல்லது. உங்கள் உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கும் தன்மை இந்தக் கீரைக்கு உண்டு. கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியை குறைத்து உங்களை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள இந்த கீரை உதவுகிறது. அதேபோல் உடலில் ஏற்படும் அனைத்து விதமான வாதத்தையும் குறைக்கும் தன்மை இந்தக் கீரைக்கு உண்டு.

வாயு பிரச்சனை

காய்ச்சல் சமயங்களில், உங்கள் நாவில் ருசி தன்மை குறைந்து இருக்கும், அது போன்ற நேரங்களில் புளிச்சக் கீரையை உணவில் சேர்த்து சாப்பிடுங்கள். இது உங்கள் நாவின் தன்மையை சரி செய்து உங்கள் ருசியை அதிகரிக்கும். அதே போல் வாயு பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த கீரை நல்ல தீர்வைத் தரும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் உணவில் ஏராளமான கட்டுப்பாடுகளை கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் உயிரைப் பறிக்கும் அளவிற்கு இந்தப் பிரச்சினை உருவெடுக்கும். எனவே காமாலை நோய் உள்ளவர்கள் புளிச்ச கீரையில் இருந்து சாறு எடுத்து அதை மோரில் கலந்து குடிப்பது நல்லது. இதனால் உங்கள் உடலில் உள்ள உஷ்ணம் அனைத்தும் குறைந்து மஞ்சள்காமாலை நோயை விரைவாக குணப்படுத்தும்.

காச நோய்க்கு தீர்வு

காச நோய் போன்ற பல நோய்களுக்கு புளிச்சக்கீரை தீர்வாக இருக்கிறது. இந்தக் கீரை உங்கள் உடல் மற்றும் குடல் அனைத்தையும் சீராக்கி அனைத்து பிரச்சனையும் தீர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் புளிச்சக்கீரை சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகுத் தூளை சேர்த்து குடிக்க வேண்டும். இதன் மூலமாக உங்கள் உணவு விரைவில் செரிமானமாகி மலச்சிக்கல் போன்ற பிரச்சினையை அடியோடு தவிர்த்து விடும்.

மேலும் படிக்க – கடுகு உடலுக்கு ஆரோக்கியம் தரும் அவசிய உணவு

பின்குறிப்பு

பித்தம் அதிகமாக உள்ளவர்கள் இந்தக்கீரையை தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் புளிப்புத்தன்மை பித்தத்தை அதிகரிக்கும், இதனால் சரியான ஆலோசனையுடன் இந்த கீரையை குறைவாக பயன்படுத்த வேண்டும். அதேபோல் இதன் மூலமாக ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் இதை உண்பதை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

எனவே கோடை காலம் நெருங்கி உள்ளதால் உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் மற்றும் கோடைக்கால வறட்சியைத் தடுப்பதற்கு நாம் கீரை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுத்து கோடை காலத்தை சிறப்பாக கடக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன