இந்தக் கிழங்கை  எங்கு பார்த்தாலும் உடனே வாங்கி விடுங்கள்.!

  • by
health benefits of palmyra roots

பனைமரம் நம்முடைய மனித குலத்திற்கு கிடைத்த இறைவனின் அருட் பிரசாதம் என்றால் அது மிகையல்ல. பனை மரத்தில் இருந்து வரும் பொருள்களை வைத்து நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

பனையின் வேறு சில பயன்கள்

பனை மட்டை விசிறி செய்ய பயன்பட்டது. குடிசைகளில் மேற்கூரை  ஆகவும் இது பயன்படுத்தப்பட்டது. இதனால் வீடு வெயில் காலங்களிலும் மிகுந்த குளிர்ச்சியுடன் இருக்கும்.

பனை நுங்கு உடல் சூட்டைப் போக்கி குளிர்ச்சி தருகிறது. நோய் எதிர்ப்பு சக்திகளை தரக்கூடிய பானமாக பதநீர் உள்ளது. பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி சித்த மருத்துவத்தில் பெண்களின் பிரசவ கால லேகிய வகை மருந்துகளும் உடலின் தாதுக்கள் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டது. 

பனை மரத்திலுள்ள நுங்கு மூன்று விதைகளைக் கொண்டிருக்கும் லேசாக இருக்கும். இதை சாப்பிட்டால் வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை இதை அறவே நீக்குகிறது.

மேலும் படிக்க – அன்னாச்சி பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்..

பனங்கிழங்கு உருவாவது எப்படி ?

நுங்கை மண்ணில் புதைத்து விட்டால் கொஞ்ச நாட்களில் முளைத்து விட்டு பனை மரமாக வளர ஆரம்பித்துவிடும். அப்படி முளைத்து விட்ட உடனே தோண்டிப் பார்த்தால் நீண்ட குச்சி போல காணப்படுவதுதான் பனங்கிழங்கு. அதை பிடுங்கி வேக வைத்து சாப்பிட்டால் ஆயுட்காலம் முழுவதும் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

பனங்கிழங்கை எவ்வாறு சாப்பிடுவது? 

பனங்கிழங்கை முதலில் வேகவைத்துக் கொள்ளவேண்டும். வேகவைத்த பனங்கிழங்கின் தோலை உரித்த பின் நடுவில் காணப்படும் பகுதி தும்பு என்ற அதனுள் இருக்கும் நரம்பு போன்ற பாகத்தை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும்.

பனை மரத்தில் உள்ள நுங்குகளை அப்படியே விட்டு விட்டால் ஆகிவிடும் அவையே பனங்கிழங்கு எனப்படும்.

பனங்கிழங்கின் பயன்கள்

பனங்கிழங்கை சிறிது மஞ்சள் சேர்த்து வேகவைத்து பின் கிழங்கை வெயிலில் காய வைத்து அதை மாவாக்கி கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து உடனே கிடைக்கும். இரும்பு சத்துக்காக நாம் சாப்பிடும் டானிக்குகளை விட பல மடங்கு சிறந்தது பனங்கிழங்கு.

பனங்கிழங்கு உடன் தேங்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பப்பை வலுப்பெறும். மற்றும் உடல் உறுப்புகள் நலம் பெறும். கிழங்கில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

பனங்கிழங்கை நீராவியில் வேகவைத்து பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கைகளால் நன்கு பிசைந்து மாவாக்கிக் கொள்ள வேண்டும் அந்த மாவை சாப்பிட்டு வந்தால் ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடை அதிகரிப்பதற்காக இந்த பனங்கிழங்கை இம்முறையில் சாப்பிடலாம்.

உடலுக்கு குளிர்ச்சி தன்மை மற்றும் உடலின் வலிமையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும் இந்த பனங்கிழங்கு பெரிதும் உதவுகிறது.

பனங்கிழங்கு அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால் டயட் இருப்பவர்களுக்கு தேவையான அளவு கலோரிகளை கொடுப்பதுடன். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும் இது பயன்படுகிறது.

குழந்தைகளுக்கு பனங்கிழங்கு எவ்வாறு கொடுக்க வேண்டும்? 

வருடத்தின் சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும் இந்த பனங்கிழங்கை கிடைக்கும்போது அதிகமாக வாங்கிக்கொண்டு, அதில் மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து விடவும். அதன்பின் அதன் தோலையும் உள்ளிருக்கும் நரம்பை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் மற்றும் உணவு வகைகளில் சிறிது கலந்து கொடுக்கலாம்.

சத்தான பானங்கள் என்று நாம் நம்பி கொடுக்கும் உணவுகளை விட இது நூறு மடங்கு சிறந்ததாக இருக்கும் இந்த பனங்கிழங்கு. நம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் நிச்சயம் உதவும்.

மேலும் படிக்க – வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் “பட்டர் ஃப்ரூடில்” இருக்கும் நன்மைகள்..!

பனங்கிழங்கை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது 

பித்தம் அதிகமாக உள்ளவர்கள் இக்கிழங்கை கொஞ்சம் அளவுடன் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இது வாயு மற்றும் பித்தத்தை அதிகரிக்கக்கூடிய தன்மை உடையது. இதை தவிர்க்க கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம், இனிப்பாக சாப்பிட விரும்புபவர்கள் கருப்பட்டியுடன் சேர்த்து இடித்து சாப்பிடலாம்.

கிழங்கு வகைகள் என்றாலே அதில் பொட்டாசியம் சத்து சற்று அதிகமாக காணப்படும். இதனால் சிலருக்கு வாய்வு தொல்லை ஏற்படும் இதை தவிர்ப்பதற்காக சாப்பிட்ட உடன் ஐந்து நிமிடங்கள் எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று விட்டு பின்னர் வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வாய்வு தொல்லை இருக்காது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன