ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பனை வெல்லம்..!

  • by
health benefits of palm sugar

தமிழர்களின் போதி மரமாக பார்க்கப்படுவது தான் பனைமரம், அக்காலத்தில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பனை மரத்திலிருந்து பனகிழங்கு, நுங்கு, பனைவெல்லம் மற்றும் போதை தரும் பானங்களை எடுத்துப் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் இன்று வரை இவர்கள் ஆரோக்கியமாகவும் எந்த ஒரு உடல் உபாதைகளும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இயற்கையாகவே குறைந்த பராமரிப்பில் வளரக்கூடிய இந்த பனை மரத்திலிருந்து ஏடுகக்கூடிய சர்க்கரையை நம் பயன்படுத்துவதன் மூலமாக நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

வெறும் வயிற்றில் பனை வெல்லம்

நாம் பயன்படுத்தி வரும் சர்க்கரையினால் நீரிழிவு நோய் மற்றும் ஒபிசிட்டி போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. இதைத் தடுப்பதற்கு நாம் இனிப்புக்காக பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டுகளை பயன்படுத்தவேண்டும். இதை சாதாரணமாக வாயில் போட்டு மென்றால் இயற்கையாகவே நம் வாயில் உமிழ் நீர் சுரக்கும், அந்த நீரைக் குடிப்பதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குளிர்ச்சித் தன்மை உடைய இந்த பனைவெல்லம் சாப்பிடுவதன் மூலமாக நமக்கு ஜலதோஷம் மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் தீரும்.

மேலும் படிக்க – ரெட் ஜோன் மாவட்டம் என்றால் என்ன..!

உடல் பிரச்சினைகள்

குளிர் காலங்களில் ஒரு சிலருக்கு தொண்டை பிரச்சனை, தொண்டை கரகரப்பு, நெஞ்சுவலி, இருமல் போன்றவைகள் உண்டாகும். இதை தடுப்பதற்கு இஞ்சி மற்றும் பனை வெல்லம் கலந்த தேநீரை குடிக்கலாம். அதே போல் இதை எல்லா சூழ்நிலையிலும் மற்றும் எல்லா காலங்களிலும் பயன்படுத்தி இதன் தன்மையை முழுமையாக பெறலாம்.

வாய் துர்நாற்றம்

உங்கள் வாயில் துர்நாற்றம் அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது நாம் எடுத்துக்கொள்ளும் அசைவ உணவுகள்தான். எனவே அசைவ உணவுகளை உண்ட பிறகு வாயைக் கழுவ வேண்டும், அப்படி செய்யாமல் இருப்பவர்கள் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்றால் போதும். அது உங்கள் வாயில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் அழித்து உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும்.

ஆற்றலை அதிகரிக்கும்

நாம் உடல் சோர்வுற்று போதெல்லாம் ஏதேனும் பானங்களை அருந்துவேம், ஆனால் இதில் சேர்க்கப்படும் சர்க்கரையினால் நமக்கு கிடைக்கக் கூடிய ஆற்றல் பாதியளவில் கிடைக்கிறது. எனவே இதற்கு பதிலாக பசும் பாலில் பனங்கற்கண்டை போட்டு, சிறிது கடலை சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும். அதேபோல் பணக்கற்கண்டு அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் மூளையின் ஆற்றல் அதிகரிக்கும், இதனால் ஞாபக சக்தி அதிகரித்து உங்கள் சிந்தனை திறனும் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

பணக்கற்கண்டில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இதனால் உங்களுக்கு உண்டாகும் நோய் தொற்றுகளில் இருந்து முழுமையாக பாதுகாக்கும். உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக வேண்டுமென்றால் பாதாமுடன் பணக்கற்கண்டு மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தியின் வீரியம் அதிகரிக்கும். அதே போல் பார்வைக் கோளாறு பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது நல்ல தீர்வைத் தரும்.

சிறுநீரக பிரச்சனை

கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உட்கொள்வதன் மூலமாக உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும். இதைத் தடுப்பதற்காக நீங்கள் வெங்காய சாறுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் கற்கள் கரைந்து சிறுநீரக செயல்பாடு சீராகும்.

மேலும் படிக்க – ஈரோட்டின் நிலை நமக்கு வருமா..!

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பம் தரித்த பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரை அவர்களுக்கு ஏராளமான உடல் பிரச்சினைகள் உண்டாகும். எனவே இவர்கள் சர்க்கரையை பயன்படுத் தாமல் பணவெல்லத்தை பயன்படுத்துவதன் மூலமாக மகப்பேறு காலங்களில் மலச்சிக்கல் பிரச்சனை, தொற்று மற்றும் வயிற்றுப்புண் போன்ற அனைத்து பிரச்சினைகளும் தடுக்கப்படும்.

கோடைக் காலங்களில் ஏற்படும் கட்டிகள், நீர் சுருக்கு, உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, போன்ற அனைத்தையும் தடுப்பதற்கு பணக்கற்கண்டு உதவுகிறது, எனவே தரமான பணக்கற்கண்டுகளை வாங்கி உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன