பசலைக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of paalak spinach

நம் முன்னோர்கள் ஆரோக்கியமாகவும் மற்றும் உடல் வலிமையுடன் இருந்ததற்கான காரணமாக கருதப்படுவது அவர்களின் உணவு முறைகளும் மற்றும் வாழ்க்கை முறைகளும் தான். இதில் அவர்கள் எடுத்துக்கொண்ட உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளே அதிகமாக இருக்கும். இயற்கை அளிக்கும் இதுபோன்று உணவில் ஏராளமான எதிர்ப்பு சக்திகள் மற்றும் நம்முடைய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஊட்டச் சத்துக்களும் இருக்கின்றன. எனவே முன்னோர்களின்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அதிகமாக உதவியது இந்த பசலைக்கீரையாகும்.

பசலைக்கீரையின் ஊட்டச்சத்து

பசலைக்கீரை ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் இதில் ஏராளமான சத்துக்களும் அடங்கி உள்ளது. அவைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களான கரோட்டின்கள், அமினோ அமிலங்கள், இரும்பு, அயோடின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக உங்களுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதனால் கிடைக்கக்கூடிய பயன்களையும் பெறலாம்.

மேலும் படிக்க – கொரோனா : புற்றுநோயாளிகள் பின்பற்ற வேண்டியவை..!

எலும்புகளை வலுவாக்கும்

பசலைக்கீரையில் உள்ள வைட்டமின் கே உங்கள் எலும்புகளை வலுவாக்கும் அதைத் தவிர்த்து இதில் கால்சியம், அயன் போன்ற சத்துக்கள் இருப்பதினால் உங்கள் மூட்டுகளில் உண்டாகும் பிரச்சனைகளை தடுத்து எலும்புகளை உறுதியாக்கிறது.

கண்பார்வைக்கும் சிறந்தது

கீரை என்பது கண்பார்வையை அதிகரிக்கும் தன்மையை கொண்டது. எனவே வயதானவர்களின் கண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் எடுத்துக்கொண்ட கீரைதான். இதில் குளோரோபில், பீட்டா கரோட்டின் போன்ற ஆக்சிசன் இருக்கிறது. எனவே உங்களின் பார்வைத்திறன் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை வலுவாக்க பசலைக்கீரை உதவுகிறது. அதிக ஒளியினால் ஏற்படும் கண்கள் பாதிப்புகளை குறைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

வைரஸ் தொற்றை தடுக்கும்

பசலைக்கீரை சாப்பிடுவதினால் உங்கள் உடலில் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலை தடுக்கலாம். இதை உட்கொள்வதினால் உங்கள் உடலில் உள்ள திசுக்கள் முழுமையாகும் அதைத் தவிர்த்து சருமம் மற்றும் தலைமுடியையும் பாதுகாக்கும். இதில் இருக்கும் வைட்டமின் கே, மரபணுவாள் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி உங்கள் இருதயத்தையும் ஆரோகியமாக பார்த்துக் கொள்கிறது. இருதயத்தில் சேரும் கொழுப்பு படிவதை கரைத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இருதய நோயை முழுமையாக விளக்குகிறது.

மேலும் படிக்க – பிரசவத்தின் பொழுது முதுகுத்தண்டில் ஏன் ஊசி போடுகிறார்கள்..!

பசலைக்கீரை சாறு

உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதற்கு தினமும் காலையில் பசலைக்கீரை சாறு அருந்துங்கள். பசலைக் கீரையை நன்கு அலசி அதை சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள், பின்பு அதில் செலரி மற்றும் ஆப்பிள் துண்டுகளை போடுங்கள், கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இறுதியில் அதில் தேவைக்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்து தினமும் காலையில் சாப்பிடுவதன் மூலமாக உங்கள் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரிக்கும்.

இதைத் தவிர்த்து உங்களை எப்போதும் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மை பசலைக் கீரைக்கு உண்டு. எனவே இதை முடிந்தவரை உணவில் சேர்த்து சாப்பிடுங்கள், இல்லையெனில் கீரை சாறு அருந்தி பயன்பெறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன