வெங்காயத்தின் நன்மையை அறிந்து கொள்ளுங்கள்!!!

  • by
health benefits of onions

சிலர் வெங்காயம் என்றாலே வெறுப்பார்கள். ஆனால் வெங்காயம் எவ்வளவு சுவை மிகுந்ததோ அந்த அளவுக்கு அதில் மருத்துவ குணமும் நிறைந்துள்ளது. இந்தியர்கள் வெங்காயம் இன்றி சமைக்கவே மாட்டார்கள். மருத்துவ ரீதியாக இந்த வெங்காயம் நம்மில் ஏற்படும் பலவித பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறது. இப்பொழுது வெயில் காலம் வந்துவிட்டது. சிலருக்கு வெயிலில் அலைவதே வேலையாக இருக்கும்.  இப்படிப்பட்டவர்களுக்கு நீர்க்கடுப்பு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம் அதிக நீர்ச்சத்து உடலில் இல்லாதது தான். 

நீர்ச்சத்து

நீங்கள் அதிக நேரம் வெயிலில் பயணப்பட இருக்கிறது என்றால அதற்கு முன்னரே சிறிது வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதை  நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, பின்னர் அந்த தண்ணீரை நீங்கள் குடித்து வர இந்த நீர் கடுப்பு பிரச்சினையில் இருந்து விடுபடலாம். அல்லது இந்த வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உங்களுக்கு இந்த பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். 

மேலும் படிக்க – குழந்தைகளைத் தாக்கும்  புதுவித  சிலியாக் நோய்.!

உடனடியாக இந்த நீர் கடுப்பு பிரச்சினையில் இருந்து விடுபட நீங்கள் இந்த முறையை கையாளலாம். வெயில் காலம் வந்துவிட்டாலே நம்மில் பலருக்கு உடம்பில் சிறு சிறு கட்டிகள் அல்லது வேர்க்குரு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு அந்த இடங்களில் வெங்காயச் சாறினை எடுத்து தடவி வந்தால் வெகு விரைவில் உங்களுக்கு இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த வெங்காயத்தை நெய்யுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர உடலில் இருக்கும் சூடு தணிந்து நலம் பயக்கும்.

மூட்டு வலி

சிலருக்கு மூட்டு வலி என்பது மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கும். அதுவும் வயதானவர்களுக்கு சொல்லவே வேண்டாம். இந்த மூட்டு வலி பிரச்சனையால் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள் இந்த வெங்காய சாற்றை எடுத்து அதனுடன் கடுகு எண்ணெய் சிறிதளவு கலந்து வலி இருக்கும் இடத்தில் நன்றாக தடவி வர இந்த மூட்டுவலி பிரச்சினை குணமாகும். திடீரென்று மயங்கி விழும் நபருக்கு இந்த வெங்காயத்தினை நுகர கொடுத்தால் மயக்கம் தெளிந்து தெளிவு பெறுவார்கள். 

சில நான்வெஜ் பிரியர்களும் சரி சைவ உணவு பிரியர்களும் சரி காரம் இல்லாமல் உணவை சாப்பிடவே மாட்டார்கள். காரத்தை இந்த வெயில் காலங்களில் எடுத்துக் கொள்ளும்போது நமக்கு சீதபேதி ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே இந்த மாதிரி சமயத்தில் வெங்காயச் சாற்றினை எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர பேதி பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

தூக்கமின்மை 

நம்மில் பலர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருவோம். இந்த சமயத்தில் வெங்காயத்துடன் சிறிது தேனை கலந்து சாப்பிட்டால் அல்லது வெங்காயச் சாற்றினை நீரில் கலந்து குடித்தால் உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை தீர்ந்து நல்ல தூக்கம் வரும்.

மேலும் படிக்க – கரோனா நோய்த் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள செய்ய வேண்டியவையும்,செய்யக் கூடாதவையும்.!

ஆரோக்கியமாக இருப்பது தான் இந்த வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயம். வெங்காயத்தில் இருக்கும் சக்திக்கு ஈடு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே வெங்காயத்தை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன