வெங்காயச்சாறில் இவ்வளவு நன்மை இருக்கிறதா..!

  • by
health benefits of onion juice

இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளில் வெங்காயம் முதன்மையாக இருக்கிறது. இதை நாம் சமையலில் சேர்க்காத நாட்களே இருக்காது. இதைத் தவிர்த்து வெங்காயத்தை அப்படியே பயன்படுத்துவதைவிட அதில் இருந்து எடுக்கப்படும் சாரை பயன்படுத்துவதன் மூலமாக அதன் நன்மை இரட்டிப்பாகிறது‌. இதை தவிர்த்து புற்றுநோய், சக்கரை நோய், ஆஸ்துமா, பார்வைக் கோளாறு போன்ற பிரச்சனைகளை தீர்த்து சருமம் மற்றும் கூந்தலில் ஆரோக்கியத்தை வலுவாக்க வெங்காயச் சாறு உதவுகிறது.

வெங்காயச் சாறு செய்முறை

நல்ல தரமான மூன்று அல்லது நான்கு வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதன் தோலை உரித்து கொள்ள வேண்டும். பிறகு அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும், கடைசியாக அந்த விழுதினை நன்கு வடிகட்டி அதில் இருக்கும் சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – இயற்கையின் கொடையான இளநீர் பயன்கள்

நுரையீரல் புற்றுநோய்

வெங்காயச் சாறினை நாம் எடுத்துக் கொள்வதன் மூலமாக நம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து நுரையீரல் புற்றுநோயை முழுமையாக தவிர்க்கிறது. இது மூளை மற்றும் நுரையீரலில் உண்டாகும் புற்றுநோயை ஆரம்பத்தில் அழிக்கிறது. வெங்காயச்சாறு இருக்கும் குர்செடின் என்ற பண்புகள் புற்றுநோயை முழுமையாக அழிக்கும் என்கிறார்கள். இதில் இருக்கும் இரும்புச் சத்து குடலில் உண்டாகும் புற்றுநோய்யை அழிக்கிறது. அதை தவிர்த்து புற்றுநோய் கட்டிகளை குறைக்கிறது.

நீரிழிவு பிரச்சனை

நீரிழிவு பிரச்சினையால் ஏற்படும் சர்க்கரை அளவை வெங்காயச்சாறு குறைகிறது. அதே போல் உங்கள் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவையும் இந்த சாறு குறைக்கிறது. அதேபோல் இது உங்களுக்கு குறைந்த அளவு கலோரிகளை அளித்து வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவுவது. மேலும் இது பிளாஸ்மாவில் உள்ள குளுகோஸ் அளவையும் குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

அழிர்ச்சிகளினால் ஏற்படும் எலும்பு பிரச்சனையை குறைக்க வெங்காய சாறு உதவுகிறது. வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செலினியம் இருக்கிறது, இதைத் தவிர்த்து இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புரதத்தை உற்பத்தி செய்து மற்றும் எலும்புகளை கால்ஷியத்தை கடக்க உதவுகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் நோய் தொற்றுகளில் இருந்து உங்களை முழுமையாக பாதுகாக்கிறது. இதை தவிர்த்து சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சினைகளை ஆரம்பத்தில் தடுக்கிறது.

ஆஸ்துமா

வெங்காயச்சாறு உங்கள் நுரையீரலை வலுவாக்குகிறது, இதனால் சுவாச பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உங்கள் சுவாசத்தை சீராக்குகிறது. மன அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் தூங்குவதற்காக சிரமப்படுவார்கள். இவர்கள் வெங்காயச் சாறு எடுத்துக் கொள்வதன் மூலமாக இவர்களின் மன அழுத்தம் குறைந்து தூக்கப் பிரச்சினைகளிருந்து நிரந்தர தீர்வு காண முடியும். இது உங்கள் உடலில் நல்ல ஹார்மோனை உற்பத்தி செய்கிறது என ஆய்வுகளில் கூறப்படுகிறது.

பார்வை கோளாறு

வெங்காயத்தில் உள்ள நூற்புழுக்கள் உங்கள் கண்களில் புரை வராமல் தடுக்கிறது. இதைத் தவிர்த்து கண்களில் ஏற்படும் அழிர்ச்சி மற்றும் கண் பார்வை குறைவு போன்ற அனைத்தையும் தீர்த்து தெளிவான பார்வையை உங்களுக்கு வெங்காய சாறு அளிக்கிறது. அதேபோல் வெங்காயச் சாறினை நகச்சுத்தி ஏற்பட்ட நகத்தில் தடவினால் உடனடி தீர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க – அதிகரிக்கும் கொரானா பாதிப்பு எண்ணிக்கை

சருமம் மற்றும் கூந்தல்

சருமத்தில் ஏற்படும் கட்டிகள், முகப்பருக்கள் மற்றும் சருமப் பிரச்சனை அனைத்தையும் வெங்காய சாறை தடவி தீர்வு காண முடியும். முகத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மற்றும் இளமையில் முதுமை தோற்றம் போன்ற அனைத்தையும் குறைக்க வெங்காய சாறு உதவுகிறது. வெங்காய சாறில் உள்ள சல்பர் கலாஜ் உங்கள் கூந்தலையும் வலுவாக்க உதவுகிறது. வெங்காய சாரை முதலில் முகத்தில் நன்கு தேய்த்துக்கொண்டு 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஆண்களுக்கு உண்டாகும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றால் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காதுகளில் உண்டாகும் தொற்றுகள் அழிப்பதற்கும் நாம் வெங்காயத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் இதை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டும். இதைத் தவிர்த்து இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது அதை அனைத்தையும் அறிந்து உங்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை வெங்காய சாறை கொண்டு எளிதாக தீர்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன