உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் ஓமவல்லி.!

  • by
health Benefits Of Omavalli

ஓமவல்லியை ஒருசிலர் கற்பூரவள்ளி என்று அறிவார்கள். இது இந்தியா முழுக்க எல்லா இடங்களிலும் வளரக்கூடியது செடி. வருடத்திற்கு எட்டு மாதத்தில் இது வளரும் தன்மையைக் கொண்டது. ஓமவல்லி செடியிலிருக்கும் இலையின் பயனை நாம் பெறுவதற்கு எட்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த செடியை வளர்ப்பதற்கு என்று நாம் தனியான பராமரிப்புகள் ஏதும் செய்யத் தேவையில்லை. சிறிது தண்ணீர் ஊற்றினால் போதும், அதுவே தானாக வளர்ந்துவிடும். இத்தகைய தன்மையைக் கொண்ட இந்த கற்பூரவள்ளியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன, அது என்னவென்று பார்ப்போம்.

காய்ச்சலை குணப்படுத்தும்

குழந்தைகளுக்கு அல்லது நமக்கே காய்ச்சல் வந்தாலும் நாம் உடனே மருத்துவமனைக்கு ஓடி செல்கிறோம். ஆனால் அக்கால நாட்டு வைத்தியங்களில் காய்ச்சல் என்று வந்தாலே முதலில் கற்பூரவள்ளி சாரைதான் மருந்தாக எடுத்துக் கொள்வார்கள். காய்ச்சல் வந்தவுடன் கற்பூரவள்ளி இலையை நான்கு அல்லது ஐந்து எடுத்து சாப்பிட்டால் உடனடி மாற்றத்தை உணரலாம். குழந்தைகளுக்கு அதை அரைத்து சாராக கொடுக்கலாம்.

மேலும் படிக்க – இரும்பு சத்துனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

தலை வலிக்கான தீர்வு

ஒற்றைத் தலைவலி அல்லது மன அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலியை உடனே குணப்படுத்த நாம் கற்பூரவள்ளி இலையை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சிறிது நல்லெண்ணெய் மற்றும் சர்க்கரையை கலந்து தலையில் பற்றுப் போட வேண்டும். இதன் மூலமாக உடனடியாக உங்கள் தலைவலி நீங்கிவிடும்.

மார்புச்சளி அஜீரண கோளாறு

குளிர்காலம் அல்லது மழைக்காலம் வந்தாலே குழந்தைகளுக்கு மார்புச்சளி பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு நாம் கற்பூரவள்ளி சாறு எடுத்து அதில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சில நாட்களிலேயே மார்பு சளியை கரைந்து சுவாசப் பாதையை வலுவாக்கும்.

கற்பூரவள்ளி கீரையை சாப்பிடும் பொழுது நமது ரத்தம் சுத்தமாகிறது. அதே போல் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நமது வயிறு, குடல் என எல்லாவற்றுக்கும் வலு சேர்த்து நமது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – மலச்சிக்கல் பிரச்சனையை இந்த காய்கறிகளை கொண்டு அழிக்கலாம்.!

அம்மைத் தழும்புகள்

அம்மை வந்த பிறகு அதன் தழும்புகள் மறையாமல் இருக்கும். அதை சரி செய்வதற்காக நாம் ஓமவல்லி இலையை நன்கு அரைத்து பத்து போட வேண்டும். இதை மற்ற கட்டிகள் போன்றவை மறைய வைப்பதற்கும் பயன்படுத்தலாம்.

நுரையீரல் பாதிப்பு

புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் அதிகமாக பாதிப்படைகிறது. இதனால் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு நாம் கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து விடவேண்டும். பிறகு அது பாதி அளவு சுண்டியவுடன் அதை குடித்து வந்தால் நுரையீரல் ஆரோக்கியமடையும்.

மேலும் படிக்க – யாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா?

மற்ற பிரச்சினைகள்

ஓமவல்லி இலையை தேனில் கலந்து சாப்பிடுவதன் மூலம் வறட்ட இருமல் விலகிவிடும். அதேபோல் உங்களுக்கு பசி உணர்வை அதிகரித்து, உணவை செரிமானம் செய்யவும் உதவும். இதை நாம் தினமும் குடிக்கும் குடிநீர் கூட போட்டுப் பயன்படுத்தலாம். இதை வீட்டில் வளர்ப்பதன் மூலமாக நம் வீட்டிற்குள் கொசுக்கள் மற்றும் மற்றும் பூச்சிகள் எதுவும் அண்டாது.

இத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட கற்பூரவள்ளி செடியை வீட்டில் வளர்த்து உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன