அரளிப் பூக்களில் இருக்கும் நன்மை மற்றும் தீமைகள்..!

  • by
health benefits of oleander flowers

சிறு வயதில் நாம் பார்த்த படங்களில் இருந்து கற்றுக் கொண்டது, அரளி விதையை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ளலாம். ஆம் உண்மைதான் அரளி விதை, செடி, இலைகள் போன்ற அனைத்திலும் நச்சுத் தன்மைகள் அதிகமாக உள்ளது. ஆனால் அதன் பூக்கள் மற்றும் வேர் பட்டைகளை மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இதில் சித்த மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், சீன மருத்துவர்கள் மற்றும் இயற்கை மருத்துவர்கள் செவ்வரளிப் பூக்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதில் நச்சுத்தன்மை இருந்தாலும் இதை சரியான அளவு சரியான பரிந்துரையின்பேரில் சாப்பிட்டால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது, அதை இங்கே காணலாம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

நெடுஞ்சாலை ஓரங்களில் நாம் இதுபோன்ற அரளிச் செடிகளை அதிகமாக பார்க்கலாம். இத்தனை நச்சுத்தன்மை கொண்ட அரளிச்செடியின் நெடுஞ்சாலை முழுக்க வைத்துள்ளார்கள் என்பது பலபேருக்கு சந்தேகங்களை எழுப்பும். அதற்குக்காரணம் இயற்கையாகவே அரளிச்செடி நச்சுத்தன்மையை அதிகமாக கொண்டுள்ளதால் வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் போன்ற காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்டது, இந்த காற்றில் உள்ள நச்சுத்தன்மையை உரியும் சக்தி அரளி செடிகளுக்கு உள்ளது, அதை தவிர்த்து ஒலிகளின் தன்மையை குறைக்கும் சக்தி கொண்டது. இதனால் இயந்திரங்கள் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இதுபோன்ற செடிகளை வைக்கிறார்கள் இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் படிக்க – வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் “பட்டர் ஃப்ரூடில்” இருக்கும் நன்மைகள்..!

மூலநோயை குணப்படுத்தும்

மூல நோய் முற்றிய நிலையில் உங்களுக்கு அதிக அளவிலான அசௌகரியங்கள் ஏற்படும். அதை தடுப்பதற்கு நீங்கள் அரளி வேரில் நீர் விட்டு நன்கு அரைத்து அதை மூல கட்டிகளின் மேல் தடவினால் அதன் வீக்கம் குறைந்து முழுமையாக குணமடைய வாய்ப்புள்ளது.

புண்களை போக்கும்

சேற்றுப்புண் மற்றும் உடலில் ஏற்படும் எந்த ஒரு புண்களாக இருந்தாலும் அரளி பூக்களை நன்கு அரைத்து அதை உங்கள் புண் மேல் தடவ வேண்டும். இது உங்களுக்கு நல்ல தீர்வைத் தரும். அதேபோல் வயது அதிகரிப்பதனால் ஒரே இடத்தில் படுத்துக்கொண்டு இருக்கும் பெரியவர்களுக்கு அழுக்கு சேர்க்கையினால் முதுகுப்பகுதியில் ஒருவிதமான புண் ஏற்படும், அதை குறைப்பதற்கு நீங்கள் அரளி வேர்ப்பட்டையும், அரளி பட்டையும் ஒன்றாக சேர்த்து நல்லெண்ணெய் விட்டு நன்கு குழைத்துக்கொண்டு தைலம் போல் செய்து காயங்கள் இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். இதன் மூலமாக உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

தலைவலியை போக்கும்

தலைவலிக்காக ஏராளமான தய்லங்களை பயன்படுத்துகிறோம், ஆனால் நமக்குப் போதுமான தீர்வு கிடைப்பதில்லை. இதற்கு நாம் செய்ய வேண்டியது இயற்கையினால் செய்யப்படும் தைலத்தை தலையில் தேய்ப்பது தான். கடுகு, கேரட், பீட்ரூட் இவைகளை நன்கு அரைத்து அந்த சாறுடன் அரளி மலர்கள் மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் நன்கு அரைத்து அந்த விழுதை ஒன்றாக சேர்த்து தலையில் பற்றுப் போடவேண்டும். இதன்மூலமாக தலைவலி எளிதில் குணமடையும்.

முக அழகிற்கு

செவ்வரளிப் பூக்களை நன்கு அரைத்து அதை முகத்தில் தடவ வேண்டும். இதன் மூலமாக முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளி போன்றவைகள் அனைத்தும் நீங்கும். இது உங்கள் கண்கள் மற்றும் வாய் மற்றும் சுவாச பகுதியில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மூட்டு வலிக்கு தீர்வு

பல பேருக்கு மூட்டுகளில் அதிக அளவிலான வலிகள் இருக்கும். வேலை செய்வதினால், இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதால் மற்றும் ஒரே இடத்தில் அமர்வதினான் ஏற்படும் அனைத்து வலிகளையும் தீர்க்கும் தன்மை செவ்வரளிக்கு உள்ளது. செவ்வரளிப் பூக்களை நீர் விட்டு அரைத்து அதை உடலில் வலி இருக்கும் இடங்களில் தடவலாம்.

தலையில் பேன்கள் மற்றும் பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் உறங்கும் பொழுது அருளி பூக்களை தலையில் வைத்து உறங்குவதினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க – ஆவியில் வேகவைத்து சாப்பிடும் உணவுகளில் இருக்கும் ஏராளமான நன்மைகள்..!

பக்கவிளைவுகள்

அரளி பூக்களில் உள்ள தேனில் கூட உங்களுக்கு ஒரு சில அலர்ஜியை உண்டாக்கும். அதேபோல் இந்த செடிகளில் நச்சுத்தன்மை அதிக அளவில் இருப்பதினால் குழந்தைகள் அருகில் அதை வைக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கானது எனவே அக்கால பெரியவர்கள் கர்ப்பிணிப் பெண்களை இந்த செடியின் அருகே செல்ல விடமாட்டார்கள். மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை நாம் கவனமாக பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை டாக்டரின் பரிந்துரையில் இதைப் பயன்படுத்துவது சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன